கா.சிவத்தம்பியின் சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும் நூல் குறித்த ஆய்வுரை
சென்னை பல்கலைகழக தமிழ் இலக்கியத் துறையில் 29.02.2008 முதல் 16.5.2008 எனப் பன்னிரண்டு வாரங்களாக நடைபெற்ற தொடர்சொற்பொழிவுகளின் நூலாக்கமே இந்நூல். சங்க இலக்கியத்தைக் குறித்த கருத்தாக்கத்தைத் தொடர்ந்து சிவத்தம்பி ஐயா அவர்கள் தொடர்ந்து சொற்பொழிவாற்றி அதை நூலாக்கம் செய்து அந்த உரையின் தன்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது இந்நூலின் முக்கிய கருதுகோளாகும்.
சங்கஇலக்கியம் குறித்த பலர் முன்வைக்கும் முடிவுகளிலிருந்து விலகி வேறுபட்ட கோணங்களில் சிந்திக்கத்தக்க சான்றுகளை எடுத்துக்காட்டி இந்நூலினை உருவாக்கியுள்ள நிலையில் இந்நூலின் உண்மை தன்மை வெளிப்படுகிறது.
இந்நூல் முன்வைக்கும் கருத்தாக்கங்களைப் பின்வரும் நிலைகளில் பகுத்துக் கொள்ளலாம்.
சங்க இலக்கியம் அறிமுகம்
தொல்காப்பியம் கூறும் பா மரபுகள் – யாப்பும் மொழியும் - வனப்பு
சங்க இலக்கியப் பாடல்களின் அடிப்படையான அமைப்பு மரபு
சங்க இலக்கியத்தளம் இரண்டு நிலைகளில் வெளிப்படும் நிலை
• திணை
• அகம் புறம்
அகப்பாடல்கள் - பாத்திரங்களின் நெருக்கடி நிலை
புறப்பாடல்கள் – சூழல் உறவுகளின் உணர்ச்சி வெளிப்பாடு
பரிபாடல் – யாப்பு வடிவம் – செவ்வேள், திருமால், வையை வழிபாடு முறை
கலித்தொகை - Drama in Ancient Society
பத்துப்பாட்டு மரபும் மாற்றமும் – தொடர்நிலைச் செய்யுள்
தமிழ் இலக்கிய மரபில் சங்கம் சங்க இலக்கியம்
தமிழ் இலக்கிய மரபு தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட மரபாக விளங்குகிறது. உலகில் சில மொழிகளே இந்த பெருமைக்குரியதாகக்கருதப்படுகிறது. கிரேக்கம் சீனம் எபிரேயம் தமிழ் என உதாரணங்கள் கூறலாம். சமஸ்கிருதத்தை எடுத்துக்கொண்டு பார்க்கும் பொழுது ரிக்வேத காலத்தில் இருந்து சமஸ்கிருத செம்மொழி காலம் வரை வரும் இலக்கியங்களை பார்த்தால் அவை ஏதோ ஒரு வகையில் சமய சார்புடையவனாக இருக்கும். முதல் முதலில் சமய சார்பற்ற செம்மொழி இலக்கிய தொகுதி தமிழிலே காணப்படுகிறது. தமிழ் இலக்கிய மரபின் மிகப்பெரிய மிக முக்கியமான கருத்தாக்கமாகக்காணலாம்.
இக்கட்டுரையில் சங்கம் என்பது பல அர்த்தங்களைக் கொண்ட ஒரு சொல்லாக விளங்குவதையும் அச்சொல் ஒரு மிக முக்கியமான கரு துகோளாக முன்வைக்கப்படும் தமிழனுடைய தொன்மையை வலியுறுத்துவதற்கு பயன்படுத்தப்படும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த கதை இறைவனால் அளவியல் உறவின் வாயிலாகக் கி.பி. ஏழு, ஒன்பதாம் நூற்றாண்டு காலப்பகுதியில் எழுதப்பட்ட இறையனார் களவியல் உரையில்தான் முதல் முறையாகக் கதையாடல் சொல்லப்படுகிறது என்ற கருத்தாக்கம் சங்கம் என்பதற்கு சைவத் தமிழ் நிலைப்பட்ட ஒரு விளக்கம் பிறந்தது இங்குதான் என்ற கருத்தியலைப் பதிவு செய்துள்ளார்.
இலக்கியங்களைப் பார்த்தால் அவை ஏதோ ஒரு வகையில் சமயச் சார்புடையனவாகவே வரும். இன்னும் உன்னிப்பாகக் கூறினால் இந்த முழு ஓட்டத்துக்கும் பின்னால் இந்துமத நம்பிக்கைகளும் ஐதீகங்களுமே தொழிற்படுகின்றன. ஆனால் முதன் முதலில் சமயச்சார்பற்ற செம்மொழி இலக்கியத் தொகுதி தமிழிலேயே காணப்படுகிறது. தமிழிலக்கிய மரபின் மிக முக்கியமான விடயம் இது. (ப. 3)
தமிழிலக்கிய மரபு என்று சொல்லுகின்ற போது இரண்டு விடயங்களை முதலில் குறிப்பிட்டாக வேண்டியது அவசியமாகிறது. முதலாவது அதன் தொன்மையும் தொடர்ச்சியுமாகும். (மேலது) இவ்வாறான ஆய்வுச் சிந்தனைகளையும் ஆய்வு முடிவுகளையும் முன்வைத்துள்ளார். தமிழ்ச்சங்கம் குறித்துப் பேசும் பேராசிரியர் இறையனார்களவியலுரையினைஎடுத்துக்காட்டி "இறையனார் களவியல் உரை முற்றும் இந்துமதச்சார்புடைய நூல்ஆகும்" (ப.7) எனவிவாதித்துச் சங்க மரபைத் தமிழ்ச் சைவ மரபு நிலைக்குள் வைத்துப் பார்க்கின்ற. பண்பினை மேற்கொண்ட விதத்தினைச் சமயப்பதிவுகளற்ற சங்கப்பாடல்களில் முன்வைத்துள்ளமை குறித்துப் பதிவுக்குள்ளாக்கி மேலும் தமிழ்ச்சமூகத்தை, தமிழ்ஆய்வாளர்களை ஆய்வுக்குட்படுத்தும் நோக்கம் வெளிப்படுவதை அவரது உரையில் காணமுடிகிறது.
தொல்காப்பியம் கூறும் இலக்கிய ஆக்க மரபுகள்’ எனும் உரையில்:
ஐராவதம் மகாதேவன் பிராமி எழுத்துக்களை இரண்டு காலக்கட்டங் களாகப் பிரிக்கலாம். பூர்வபிராமி, பிற்காலப் பிராமி, அதிலே கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குப் பின்வருவது பிற்காலப் பிராமி என்று சொல்லலாம். சங்க இலக்கியப் பாடல்களை எழுதுவதற்கான எழுத்தொலிகள் இருந்தன என்று சொல்லலாம். அப்படியானால் அதற்கு முந்தைய பாடல்கள் பற்றிய நிலைமை யாது? ஏனென்றால் புகலூர்க் கல்வெட்டு வந்ததன் பின்னர், சங்க இலக்கியம் நாம் விரும்பியோ, விரும்பாமலோ கிறித்துவுக்கு முன் ஏறத்தாழ, கி.மு. 300இல் இருந்து சங்க காலத்தை நாங்கள் தொடங்க வேண்டிய தேவை இன்று அவசியமாகிறது. அதேபோலப் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில்,
சம்பந்தப்பட்ட புலவன் அந்தத் தலைவனிடம் – அந்தக் கிழானிடம் சென்று, எல்லா இடங்களிலும் வறுமை சூழ்ந்துவிட்டது. எல்லா இடங்களிலும் செழிப்பு வற்றிவிட்டது. வறிதாகிவிட்டது. ஆனபடியால் நான் உன்னிடம் வருகின்றேன் என்று பாடுகிறான். பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி, அந்தப் பாடலை முக்கியமான ஒரு வரலாற்றுத் தடயமாகக் கொண்டு இந்தச் சிறுபாணாற்றுப்படை கி.பி. 250 ஆக இருக்கலாம். எனவே சங்க காலத்தை நாங்கள் கி.பி. 250 வரை கொண்டு வரவேண்டும். இன்றுள்ள நிலையில் கி.மு. 300லிருந்து குறைந்தபட்சம் கி.பி. 250 வரை உள்ள காலக்கட்டத்தை நாங்கள் சங்க காலம் என்று கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இதனை நாங்கள் சொல்கிறபோது பேராசிரியர் ராஜன் போன்ற தொல்லியலாளர்கள் இந்த இலக்கியத்தை வைத்துக் கொண்டு வரலாறு பேசுகின்ற எல்லோரையும் சற்றுக் கடிந்துவிட்டு, தொல்லியல் நோக்கில் பார்க்கும் பொழுது அதற்கு முன்னரே நமக்குப் போதிய ஆழமான, நம்பகமான சான்றுகள் உள்ளன என்று கூறுகின்றார். அந்தச் சான்றுகளைக் கொண்டே வரலாற்றை எழுதலாம் என்கிற ராஜனுடைய பேச்சுகளைத் தொகுத்துத் ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ என்ற நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக் கின்றது. (ມ. 30-31)
தான் தேடிப் பிடித்து அறிந்த கருத்துகளையெல்லாம் மனங்கொண்டு சங்ககாலம் குறித்த முடிவுக்கு வரும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கல்வெட்டாய்வாளர்கள், தொல்லியல் ஆய்வறிஞர்கள் வழி நின்று அதாவது தகுந்த ஆதாரங்களுடன் ஆய்வு செய்திருப்பதன் வழியே பரந்த அறிவு, தேடல் உணர்வு, பொறுப்புணர்வு, ஆழ்ந்த புலமை பல துறையாளர்களின் கருத்துகள் என அனைத்து நிலைகளிலும் தொடர்பும் அறிவும் இந்தத் தலைமுறை ஆய்வாளர்களுக்கு அவசியம் எனும் கருத்தினை நாம் அறிய இடம் தருகிறார்.
திணை என்பது அடிப்படையில் நிலம் நிலத்தில் வாழும் மக்கள் குழுமம் அவர்களது ஒழுக்கம் என்ற கருத்திலேயே தரும் திணை என்பது பொதுப்படையாக குழுக்களற்றை குறிக்கின்ற ஒரு சொல்லாகவே இருக்கிறது என்று சொல்லுகின்ற பொழுது மனித நிலைகளோடு அதாவது மனித உறவு நிலைகளோடு சம்பந்தப்பட்ட ஒழுக்கலாறுகள் என்பதே கருத்தாக முடியும்.
உண்மையில்அவளதுகற்பிலேயேசொத்துரிமையின்தொடர்ச்சிதங்கிநிற்கின்றது. (บ. 52)
எனுமாறுசிந்திக்கத்தகுந்தகருத்துக்களைத்தந்துள்ளார்.
'சங்கஇலக்கியம் : சூழல்உறவுகள், உணர்ச்சிகள் - புறததிணைப்பாடல்மரபுகள்' எனும்பேராசிரியர்கா. சிவத்தம்பிஉரை
அகத்துக்குப்புறமா? அல்லதுஇந்தப்புறம்என்றபாரம்பரியத்திற்குஅப்பாலும்ஒன்றுஇருந்திருக்கிறதா? என்பதும்முக்கியக்கருதுகோள்களாகஅமைகின்றன
எனும்கருத்தினைமுன்வைத்துஅனைத்துத்தமிழாராய்ச்சிவல்லுனர்களையும்சிந்திக்கவைப்பதாகஉள்ளது. புறமரபின்பரிமாணங்கள்என்பதில்
புறத்திணைப்பாடல்களின்பரிமாணங்களைப்பார்க்கின்றபொழுதுநமக்குஇரண்டுவிடயங்கள்தெளிவாகின்றன. ஒன்றுசங்ககாலவாழ்க்கையினுடையசெழுமை; அவற்றிற்குமேலாகஅந்தக்கவித்துவத்தின்அடித்தளம் (ப.77)
என்கிறார்.
புறத்திணையின்அகற்சிகாரணமாகஅந்தக்காலத்துவாழ்க்கைச்சோகங்கள்தெரிகின்றன. இதுபுறநானூற்றிலேமுதலில்பேசப்படுகிறமரபுஅல்ல (μ. 77)
என்றுகூறிப்புறத்திணைப்பாடல்களிலேவளர்ச்சிநிலைஎனும்கருத்தினைப்பாடல்கள்வழிஎடுத்துக்காட்டிவிளக்கிநம்மைமேலும்ஆய்வுச்சிந்தனைக்குட்படுத்துகிறஆர்வத்தைஉண்டாக்கியுள்ளார்.
'பாத்திரங்களும்நெருக்கடிகளும்அகப்பாடல்மரபின்கவித்துவச்சிக்கற்பாடுகள்' எனும்தலைப்பில்
சங்கஅகப்பாடல்மரபில்நேரடியாகச்சொன்னதையும்பார்க்கக்குறிப்பாகஉணர்த்தப்படுவதேமரபு. இதனால்அகப்பாடல்மரபில்கோரிக்கைகள்அல்லதுவிருப்பவெளியீடுகள்வெட்டவெளிச்சமாகவோநேரடியாகவோசொல்வதில்லை (ப.80)
என்று கூறிக் ‘கெடுக சிந்தை கடிது இவள் துணிவே எனும் புறப்பாடலை எடுத்துக்காட்டிப் போர்ச் சூழலிலே முகம் கொடுப்பவர்களுடைய மனச்சிக்கற்பாடுகளையும் நெருக்கடி களையும் எடுத்துக்காட்டுவதாக விளக்கும் பேராசிரியர்
புறம் என்பது தனியே போரும் வீரமும் அல்ல. அவற்றுக்குப் பின்னால் உள்ள இழப்பும் சோகமும் தான் (ப. 87)
என நமக்கு விரிதளத்தில் ஆராய இடம் தருகிறார்.
யாப்பும் மொழியும் என்பதான உரையில் ஆசிரியர், வஞ்சி, வெண்பா, கலி எனும் தமிழ் மரபுப் பா வகைகளைக் கூறி அவற்றில் அகவல் என்பது ஆசிரியமே என விளக்கி விருத்தம், ஆசிரிய விருத்தம், வஞ்சி விருத்தம், கலிவிருத்தம், இந்த நாலும் தமிழுக்கு அடிப்படையானவை என்கிறார். கலியும், பரியும் எட்டுத் தொகையினுள் கொள்ளப்பட்ட செய்தியைக் கூறி, மீதமுள்ள ஆறு தொகை நூல்களிலும் நிச்சயமாக அகவலும் வஞ்சியும் தான் வரும் என்று கூறி, நாடக வழக்கினும், உலகியல் வழக்கினும் எனும் (தொல். அ. 28) சூத்திரத்தைக் காட்டி நாட்டிய தர்மி, லோக் தர்மி என நாட்டிய சாத்திரச் சூத்திரத்தைப் பொருத்திக் காட்டுகிறார். பாலைப் பாடல்கள், கூத்தராற்றுப் படைப் பாடலின் மொழி பேச்சு மொழி பாணியிலே அமைந்ததாகக் காணப்படுவதே இதற்குக் காரணமாகும் என மொழிகிறார்.
வாய்மொழி மரபின் வளர்ச்சி முறையே சங்கப் பாடல்களில் கலை வளர்ச்சிக்கேற்பப் பதிவு பெற்றுள்ளன என எடுத்துக் காட்டி விவாதித்திருப்பது பெரு ஆய்வு விருந்தாக அமைகிறது.
‘சங்க இலக்கியத்தின் வனப்பு’ (சங்க இலக்கியத்தின் அழகியல் அம்சங்கள் பற்றிய ஒரு நோக்கு) எனும் பகுதியில் அழகியல் என்ற சொல்லுக்கு வனப்பு என்று தொல்காப்பியர் வழி நின்று பேராசிரியர் சிவத்தம்பி முன்மொழிகிறார். அரசன் – மன்னன், கோ, வேந்தன் என்ற பதங்களை எடுத்து விளக்குகிறார்.
அகப்பாடல்களின் மிகப் பிரதானமான பண்பு அவை பாத்திரங்களின் கூற்றுக்களாக அமைவனவாகும் (ப. 100). இம்முறை குடும்ப உறவுச் சூழலில் உருவாகும் நெருக்கடியாகும் என விளக்குகிறார். தொடர்ந்து உள்ளுறை, இறைச்சி பற்றிப் பேசி இறுதியாகச் சங்க இலக்கியப் பாடல்களினூடே அவை வாய்மொழிப் பண்பாட்டின் அடித்தளமான வலுவை எடுத்துக்காட்டுகின்றன என்று கூறலாம் என்கிறார்.
பரிபாடல்கிளப்பும்பிரச்சினை' எனும்தலைப்பில்செய்துள்ளபொழிவு, பரிபாடற்பாடல்கள்நிச்சயமாகவழிபாடுபற்றியவை. பக்திஇலக்கியத்துக்குவழிவகுப்பவை. ஆனால்இவைபக்திஇலக்கியமல்லஎனும்கருத்தினைமுன்வைத்துள்ளன (ม. 128).
'பத்துப்பாட்டு - மரபுமாற்றமும்' எனும்உரையில்பத்துப்பாட்டைப்பற்றியகுறிப்புகள்இல்லை. எட்டுத்தொகையில்இடம்பெறுபவர்கள்பத்துப்பாட்டிலும்இடம்பெறுகிறார்கள். பத்துப்பாட்டைப்பாடியவர்களுள்பாதிப்பேர்எட்டுத்தொகையைச்சார்ந்தவர்கள்எனச்சொல்லிப்பட்டியலிட்டுக்காட்டிவிளக்குகிறார்பேரா.சிவத்தம்பிஅவர்கள். தொகைநிலைமரபினின்றுதொடர்நிலைமரபுக்குமாறியபடிநிலையைஎடுத்துக்காட்டுகள்வழிநிறுவுகிறார்.
'சங்கஇலக்கியமரபுக்குநிகழ்ந்ததுயாது?" என்பதுஇவரதுதொடர்பொழிவின்இறுதிப்பொழிவாகும். பிராமிக்கல்வெட்டுவழிஐராவதம்மகாதேவன்கி.மு. 300இல்சங்ககாலம்என்கிறார்.
நீலகண்டசாஸ்திரிஅவர்கள்சிறுபாணாற்றுப்படையைஆதாரமாகக்கொண்டுஏறத்தாழக்கி.பி. 250ஐசங்ககாலத்தின்இறுதிப்பகுதிஎன்பார்எனக்கூறி, கி.மு. 2, 3 ஆம்நூற்றாண்டுமுதல்கி.பி. 250 வரையிலானகாலம்சங்ககாலம்எனமுடிவுக்குவருகிறார்சிவத்தம்பிஅவர்கள். கே.என். சிவராஜபிள்ளைகளப்பிரர்காலமேசங்ககாலத்தின்இறுதிக்காலம்என்பார். கே.ஆர். வெங்கட்ராமன்களப்பிரர்கள்சரவளபௌகோலா, மைசூர்ப்பகுதிகளைச்சார்ந்தவர்கள்என்றும்கடம்பர்களுடையஎழுச்சிகாரணமாகத்தமிழ்நாட்டில்தெற்குநோக்கிவந்தவர்கள்இவர்கள்தான்தமிழ்நாட்டில்ஒருநிலைமாற்றத்தினைஏற்படுத்தியோர்எனஎடுத்துக்கூறிக்கி.பி. 250 முதல்கி.பி. 550 வரைமொழிமாற்றம்ஏதும்நடைபெற்றிருக்கவில்லையா? எனும்கேள்வியைஎழுப்பிக்காலக்கட்டத்தைநிர்ணயம்செய்யமொழிவல்லுநர்கள்முன்வரவேண்டும்எனச்சொல்லி, சரித்திரம்என்பதுசாகாததொடர்கதைஎனமுடிக்கிறார்.
பேராசிரியர்கா. சிவத்தம்பிஅவர்களதுதொடர்பொழிவுகள்தமிழ்குறித்தும்பலநாட்டுஅறிஞர்கள்குறித்தும்,கல்வெட்டுஆய்வாளர்கள்குறித்தும், மொழியியல்வல்லுநர்கள்குறித்தும், இலக்கியஆராய்ச்சியாளர்கள்குறித்தும்கூறிஅவர்தம்கருத்துகளையெல்லாம்துணைகொண்டுஆங்காங்குஆய்வுமுடிவுகளைமுன்வைத்துச்செல்லும்இந்தநூல்தமிழர்க்குமிகமுக்கியமானஆய்வுநூல்ஆகும்.
பேராசிரியர் எழுதியுள்ள பல ஆய்வு நூல்களிலிருந்து இந் நூல் வேறுபட்டது. ஆம். சொற்பொழிவின் எழுத்துரு இதுவாகும். படிப்பதற்காக அவர் எழுதிய நூல்களிலிருந்து இது வேறுபட்டது. ஆய்வாளர்களையும், மாணவர்களையும் முன்நிறுத்திச் செய்த உரை இது. இந்நூலை வாசிப்போர் இந்த மொழிநடை வழி மிக நெருக்கமான உறவுகொண்டு வாசித்துப் பொருள் கொள்ள முடியும்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் இந்த நூலில் தலைப்புகள் தோறும் ஏதோ ஒரு வகையில் களப்பிரர், சமணர், பௌத்தம் குறித்த குறிப்புகளை முன்வைத்து விளங்கிச் செல்வதை அவதானிக்கமுடிகிறது.
சங்க இலக்கியங்களில் காணலாகும் கருத்துகள் சமணம் பௌத்த இலக்கியங்களில் எந்த வகையில் தொடர்பு கொண்டு அமைகின்றன என ஆய்வுக்கான களங்கள் உள்ளன.
வாய்மொழி மரபுக் கூறுகள் சங்க இலக்கியங்களில் விரவி இடம்பெற்றுள்ளமை குறித்துப் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இந்நூலில் உள்ள தலைப்புகள் தோறும் பதிவு செய்துள்ளார். வாய்மொழி இலக்கியங்களைச் சங்க இலக்கியங் களுடன் ஒப்பிட்டு அதன்வழியே தமிழ், தமிழ் மக்கள், தமிழ் மரபு, தமிழர் வாழ்க்கை, தமிழ்ப் பண்பாடு குறித்த அடையாளங் களைத் தேடிப் பழந்தமிழர் வரலாற்றினை மீட்டெடுக்க வேண்டியுள்ளது.
நிறைவாக
தமிழ் இலக்கிய மரபில் சங்கம், சங்க இலக்கியம்
சங்க இலக்கியங்களை தொகுக்க வேண்டி வந்ததற்கான காரணத்தை குறித்து சமண செல்வாக்கே சங்க இலக்கிய தொகுப்பிற்கு அடிப்படையாக அமைந்ததை ஆராய்ந்து விளக்கியுள்ளார்.
மேலும் இந்த பாடல்கள் தமிழ் இலக்கியத்தின் தோற்றத்தைக் குறிக்கும் பாடல்கள் என்று கூற முடியாது எனவும் இப்பாடல்களின் அமைப்பினூடேஒரு விதிமுறை தன்மையை காணப்படுகிறது. எனவே சங்க இலக்கியங்கள் மிக தொன்மையான இலக்கியங்களே தவிர தமிழில் முதல் கவிதைகள் அல்ல என்பதை நிறுவுகிறார்.
தொல்காப்பியம் கூறும் இலக்கிய ஆக்கம் மரபுகள்
Comments
Post a Comment