UGC NET TAMIL - TNPSC தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான விரிவான வினாக்கள்

சங்க இலக்கியம்
சங்க இலக்கியம் மொத்த பாடல்களின் எண்ணிக்கை - 2381
மொத்த புலவர் எண்ணிக்கை - 473
அகப்பாடல்கள் - 1862
அகப்புலவர்கள் - 378
அலர்ப்புலவர் என்று அழைக்கப்படுபவர் - உலோச்சனார்
தலைமகன் தன் நெஞ்சிற்குக் கூறும் கூற்றினை அதிகம் பாடியவர் - இளங்கீரனார்
சங்க நூல்களுக்கு வசனம் எழுதியவர் - ந.சி.கந்தையாபிள்ளை
சங்க இலக்கியத்தில் பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை - 30
சங்க இலக்கியத்தில் அதிக பாடல்களைப் பாடியவர் - கபிலர்
குறுந்தொகையில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 203
கி.பி. 470இல் உருவான சங்கம் - திரமிளசங்கம்
சங்க இலக்கியத்தில் வரலாற்றுச் செய்திகள் அதிகம் இடம்பெற்றுள்ள நூல் அகநானூறு
சங்க இலக்கியப் புலவர்களின் வரலாற்றுச் செய்திகளை அதிகம் பாடிய புலவர் பரணர்
வேம்பும் கடுவும்போல அறிவுரை கூறுவது - வாயுறை வாழ்த்து
திணை மயக்கம் அதிகம் இடம்பெற்ற நூல் -
அகப்பாடல்களில் அதிகமாக உள்ளுறை பெறும் திணை - மருதம்
எத்திசை செல்லினும் அத்திசை சோறே என்றவர் - ஔவையார் (புறநானூறு)
உரையாசிரியர்களால் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட சங்க இலக்கிய நூல் குறுந்தொகை
செங்கல்லால் கட்டப்பட்ட சிவன் கோயில் பற்றிக்கூறும் சங்க இலக்கிய நூல் மலைபடுகடாம்
ஒன்றன் கூறாமை உடுப்பவரேயாயினும் ஒன்றினார் வாழ்வே வாழ்வு என்று கூறும் நூல் - கலித்தொகை
நெஞ்சாற்றுப்படை என்று பெயர் பெறும் நூல் - முல்லைப்பாட்டு
பரிபாடலில் திருமாலுக்கு எத்தனைப் பாடல்கள் உள்ளன 8
பரிபாடலில் முருகனுக்கு எத்தனைப் பாடல்கள் உள்ளன 31
பரிபாடலில் முருகன் எவ்வாறு அழைக்கப்படுகிறார் - செவ்வேள்
பரிபாடலில் காடுகிழாளுக்கு எத்தனைப் பாடல்கள் உள்ளன - 1
பரிபாடலில் மதுரைக்கு எத்தனைப் பாடல்கள் - 4
பரிபாடலில் வையைக்கு எத்தனைப் பாடல்கள் - 26
பரிபாடலில் கிடைத்துள்ள மொத்தப் பாடல்கள் - 22
பரிபாடலில் கிடைத்துள்ள திருமால் பாடல்கள் - 6
பரிபாடலில் கிடைத்துள்ள முருகன் பாடல்கள் - 8
பரிபாடலில் கிடைத்துள்ள வையை பாடல்கள் -8
பரிபாடலில் காளி எவ்வாறு அழைக்கப்படுகிறாள் - காடுகிழாள்
புறநானூற்றில் ஔவையார் எத்தனைப் பாடல்கள் பாடியுள்ளார் - 33
மதுரை நகரத்தைப் பரிபாடல் எவ்வாறு வருணிக்கிறது - தாமரை வடிவம்
பரிபாடலில் குறிக்கப்படும் பெண்பால் புலவர் - நக்கண்ணையார்
உண்டிக் கொடுத்தோர் உயிர்க் கொடுத்தோரே அடிகள் இடம்பெறும் நூல்கள் - புறநானூறு, மணிமேகலை
அகநானூற்றில் 10,20,30 ...... என்ற எண் வரிசை எத்திணையைக் குறிக்கிறது - நெய்தல்
எயினர்களின்  குடியிருப்பின் பெயர் - குரம்பை
நன்னன் சேய் நன்னனின் தலைநகரம் - செங்கண்மா
நேரத்தைக் கணிக்கப் பயன்படுவது - நாழிகை வட்டில்
நேரத்தைக் கணிக்கிட நாழிகை வட்டிலைப் பயன்படுத்தினர் என்பதை அறிவிக்கும் நூல் முல்லைப்பாட்டு
முல்லைப்பாட்டில் தலைவியின் உன்கண் புலம்பல் எந்த அடியில் சொல்லப்பட்டுள்ளது 23ஆவது அடி
முல்லைப்பாட்டில் பாசறையில் தலைவன் இருக்கின்ற விதம் பற்றி எந்த அடியில் சொல்லப்பட்டுள்ளது 55ஆவது அடி
தலைவனின் நிலைபற்றிக் கார்காலத்திற்குப் பிறகு வரும் செய்திகள் எந்த அடியில் சொல்ப்பட்டுள்ளது 15ஆவது அடி
மதுரை நகரத்தின் சிறப்பு எத்தனை அடிகளில் கூறப்பட்டுள்ளதாக மு.வ. குறிப்பிடுகிறார் 354அடிகளில்
பத்துப்பாட்டை பாடியவர் எத்தனை பேர் - 8
பட்டினப்பாலையில் ஏழு அடிகளில் பாலையைப் பற்றிக் குறிப்பிடுவது - செலவழுந்துறை
பட்டினப்பாலையில் காவிரியின் பெருமை எத்தனை அடியில் குறிப்பிடப்பட்டுள்ளது 294
சங்கப் பாடல்களில் 100 பாடல்கள் பாடிய புலவர்கள் எத்தனைப் பேர் - 5
சங்கப் பாடல்களில் அம்மூவனார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை - 127
ஓரம்போகியார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை - 110
பேயனார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை - 105
ஓதலாந்தையார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை - 103
நல்லந்துவனார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை - 40
நக்கீரர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை - 37
உலோச்சனார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை - 35
வரலாற்றுச் செய்திகளில் வல்லவரான மாமூலனார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 30
பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் எத்தனைப் பேர் - 30
திணைத் துறையால் பெயர் பெற்ற புலவர்கள் எத்தனைப் பேர் - 20
பரிபாடலுக்குப் பண் இசைத்தவர்கள் எத்தனைப் பேர் - 10
அந்தாதி முறையில் அமைந்துள்ள பதிற்றுப்பத்து நான்காம் பத்து
களவுத்துறையில் அதிகம் பாடிய புலவர் - கபிலர்
அகம், புறம் என இரண்டிலும் கபிலர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை - 235
மௌரியர் தமிழகத்திற்குப் படையெடுத்து வந்ததைக்குறிக்கும் எட்டுத்தொகை நூல் அகநானூறு
ஐங்குநூற்றை முதன்முதல் உரையுடன் பதிப்பித்தவர் - உ.வே.சாமிநாதையர்
நந்தா விளக்கம் - புறாநானூறு
இரும்புக் கடல்ல - பதிற்றுப்பத்து
மா, வேலி என்ற சொற்கள் குறிப்பிடுவது - நில அளவைகள்
யவணப் பிரியா என்று ரோமர்களால் அழைக்கப்படுவது - மிளகு
ஔவை பாடிய பாடல்கள் - 59
கவரி வீசிய காவலர் - சேரமான் தகடூர் எறித்த பெருஞ்சேரல் இரும்பொறை
அகநானூறு 1-120 பாடல்கள் - களிற்றுயானை நிரை
அகநானூறு 180 பாடல்கள் - மணிமிடை பவளம்
அகநானூறு 100 பாடல்கள் - நித்திலக்கோவை
கரிகாலனின் அவைக்களப்புலவர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
புகார் நகரை உருவாக்கியவன் - கரிகாலன்
ஏனாதி - படைத்தலைவர்கள்
பெருநாள் - அரசனின் பிறந்தநாள்
பட்டினப்பாலையின் துறை - செலவழுங்கல்
செறுத்த செய்யுள் செய்செந்நாவின் வெறுத்த வேள்வி விளங்கு புகழ் கபிலன்
முல்லைப் புலவர் - இடைக்காடனார்
உடன்போக்கு என்ற துறையை அதிகமாகப் பாடிய புலவர் - கயமனார் /வௌ¢ளிவீதியார்
கலித்தொகை கடவுள் வாழ்த்து - நல்லந்துவனார்
சாறயர்தல் - விழா எடுத்தல்
தைந்நீராடல் - பரிபாடல்
வஞ்சிநெடும்பாட்டு - பட்டினப்பாலை
காப்பியப் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு
எட்டுத்தொகையில் பழைய உரை இல்லாத நூல் - நற்றிணை
மன்னன் மக்களுக்கு உயிர் என்று அறிவுறுத்திய புலவர் - மோசிகீரனார்
யாப்பு வகையால் தலைப்பினைக் கொண்ட நூல் - கலித்தொகை
பட்டினப்பாலை பாடியதற்காக உருத்திரங்கண்ணனார் பெற்ற பரிசிலைத் தெரிவிக்கும் நூல் தமிழ்விடுதூது
வழிபாட்டு நோக்கில் (பட்டினப்பாலை) அமைந்த நூல் - பட்டினப்பாலை
பொருள் இலக்கணத்தின் இயல்பை உணர்த்த எழுந்த நூல் - குறிஞ்சிப்பாட்டு
முதன் முதலில் ஓவியம் என்ற சொல்லாட்சி காணப்படும் நூல் - நெடுநல்வாடை
சங்க இருந்தமைக்குச் சான்று காட்டும் செப்பேடு - சின்னமனூர்ச் செப்பேடு
முத்தொள்ளாயிரத்தில் கிடைக்கும் பாடல்கள் - 130
புறநானூற்றில் காணப்படும் திணைகள் - 11
இடைச்சங்கம் அமைந்த இடம் - கபாடபுரம்
கடைச்சங்கம் அமைந்த இடம் - மதுரை
அகநானூற்றுக்குப் பழைய உரை (அகவலால் ஆனது) பால்வண்ணத்தேவர்
நான்கு நிலவருணனையும் ஒரே பாடலில் அமைந்துள்ள இலக்கியம் ஆற்றுப்படை
கி.வா.ஜ. வழிகாட்டி என்ற பெயரில் உரை எழுதிய சங்க நூல் திருமுருகாற்றுப்படை
முத்தொள்ளாயிரப் பாடல்கள் சிலவற்றிற்கு செய்யுள் வடிவில் உரை எழுதியவர் கண்ணதாசன்
குறுந்தொகை பாடல்கள் சிலவற்றிற்கு அகவற்பாக்களில் உரை வரைந்தவர் பாவேந்தர் பாரதிதாசன்
பெரும்பாணாற்றுப் படைக்கு ஆராய்ச்சியுரை எழுதியவர் அருள் அம்பலனார்
பெரும்பாணாற்றுப்படைக்கு விளக்கவுரை எழுதியவர் மு.இராகவையங்கார்
ரா.இராகவயைங்கார் ஆராய்ச்சியுரை எழுதிய நூல் பட்டினப்பாலை
பிற்காலத்தில் குறுந்தொகைக்கு உரை எழுதியவர் - சௌரி பெருமாள் அரங்கன்
நற்றிணையின் பிற்கால உரையை எழுதியவர் - பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்
அன்பு நெறியே தமிழர் சமயம் என்னும் நூல் விளக்கமாய் அமைந்த நூல் திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டு முழுவதற்கும் இக்காலத்தில் உரை எழுதியவர் பொ.வே.சோமசுந்தரனார்
பாணாறு என்றழைக்கப்படும் ஆற்றுப்படை நூல் -
பதிற்றுப்பத்து எத்திணை - பாடாண்திணை
தொடராலேயே பெயர் பெற்ற நற்றிணைப் பாடல்கள் - 7
குறுந்தொகையில் உவமையால் பெயர் பெற்றோர் - 18
சுவரில் நாட்களைக் குறிக்கும் முறையினைக் குறிக்கும் நூல் - அகநானூறு
கள்வர் கோமான் என்பவர் - புல்லி
புண்ணுமிழ் குருதி இடம்பெற்ற நூல் - பதிற்றுப்பத்து
கலித்தொகையின் உரையாசிரியர் - நச்சினார்க்கினியர்
பரிபாடலின் உரையாசிரியர் - பரிமேலழகர்
பரிபாடலைப் பாடியவர்களின் எண்ணிக்கை
பதிற்றுப்பத்தில் ஆறாம் பத்தைப் பாடியவர் காக்கைபாடினியார்
அகநானூறு கடவுள் வாழ்த்து - சிவன்
புறநானூறு கடவுள் வாழ்த்து - சிவன்
குறுந்தொகை கடவுள் வாழ்த்து - முருகன்
நற்றிணை கடவுள் வாழ்த்து - திருமால்
ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து - திருமால்
எட்டுத்தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்
முதன்முதலில் சங்கம் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் - பரிபாடல்
இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் என்று கூறிய நூல் பிங்கல நிகண்டு
பத்துப்பாட்டு பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 8
பத்துப்பாட்டில் பாடப்பட்டவர்களின் எண்ணிக்கை - 8
திருமுருகாற்றுப்படை - நக்கீரர் - 317 - முருகன்
பொருநராற்றுப்படை - முடத்தாமக்கண்ணியார் - 248 -கரிகால் பெருவளத்தான்
சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார் - 269 - நல்லியக்கோடன்
பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார் - 500 - தொண்டைமான் இளந்திரையன்
முல்லைப்பாட்டு - நப்பூதனார் - 108
குறிஞ்சிப்பாட்டு - கபிலர் - 261 -
நெடுநல்வாடை - நக்கீரர் - 188 - பாண்டியன் நெடுஞ்செழியன்
மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார் - 782 - பாண்டியன் நெடுஞ்செழியன்
பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணனார் - 301
மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை) - பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் - 583
சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை என்று கூறுவது - தக்கயாகப் பரணியுரை
தலைவன் செலவழுங்குதல் என்னும் அகத்துறை உள்ள பாட்டு - பட்டினப்பாலை
பாலைப் பாட்டு என்று வழங்கப்படுவது - பட்டினப்பாலை
உருத்திரக் கண்ணனார் கரிகாலனிடம் பதினாறு நூறாயிரம் பொன் பரிசாகப் பெற்றார் எனக் கூறும் நூல்கள் - கலிங்கத்துப்பரணி, சங்கரசோழன் உலா, தமிழ்விடுதூது
திருமுருகாற்றுப்படை
முதற்பகுதி - திருப்பரங்குன்றம்
இரண்டாம் பகுதி - சீரலை வாயில் (திருச்செந்தூர்)
மூன்றாம் பகுதி - திருவாவினன் குடி (பழனி)
நான்காம் பகுதி - திருவேரக இருக்கை (சுவாமிமலை)
ஐந்தாம் பகுதி - குன்றுதோறாடல் (திருத்தணி)
ஆறாம் பகுதி - பழமுதிர் சோலை

சமுதாயப் பாட்டு என்று அழைக்கப்படுவது - பெரும்பாணாற்றுப்படை
நெடுநல்வாடையை அகப்பாட்டு என்று நிறுவியவர் - கதிரேசஞ் செட்டியார்
யவனரின் பாவை விளக்கு பற்றிக் குறிப்பிடும் நூல் - நெடுநல்வாடை
நாளும் கோளும் அறிந்து செயல்படும் வழக்கம் பற்றிக் குறிப்பிடும் நூல் - நெடுநல்வாடை
பரதவர் சுறாக் கொம்பை மணலில் நட்டுக் கடல் தெய்வத்தை வழிபடும் செய்தி இடம்பெறும் நூல் - பட்டினப்பாலை
கோவை நூல்களுக்கு வழிகாட்டியாக அமைந்த சங்க நூல் - குறிஞ்சிப்பாட்டு
புலவராற்றுப்படை எத்தனை அடிகளை உடையது - 317
சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் - நல்லியக்கோடன்
சிற்பப் பாட்டு என அழைக்கப்படுவது - நெடுநல்வாடை
கடையேழு வள்ளல்களைப் பற்றிக் கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை
உயர்மதி கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் எனப் பாடியவர் மாணிக்கவாசகர்
பண்டைய தமிழர் திருமணமுறை பற்றிய அகநானூறு பாடல்கள் - 86,136
வினையே ஆடவர்க்கு உயிரே இடம்பெறும் நூல் - குறுந்தொகை
கையில் ஊமன் கண்ணில் காக்கும் வெண்ணெய் உணங்கு போல பாடியவர் - வெள்ளிவீதியார்
தூது இலக்கியங்களுக்கு வாயிலாக அமைந்த சங்க இலக்கிய நூல் - நற்றிணை
குறுந்தொகையின் அடிவரையறையில் அடங்காத பாடல்கள் - 307,391
ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு எனக் குறிப்பு காணப்படும் நூல் பதிற்றுப்பத்து
கோழி எறிந்தார்க்கு கொடுங்காற் கணங்குழை இடம் பெறும் நூல் - பட்டினப்பாலை
கூடற்றமிழ் என்று சிறப்பிக்கப்படும் சங்க இலக்கியம் - மதுரைக்காஞ்சி
நெல்லரிசி கொண்டு மதுபானம் செய்யும் செய்தி இடம்பெறும் நூல் - பெரும்பாணாற்றுப்படை
நெஞ்சாற்றுப்படை என்று வழங்கப்படும் நூல் - முல்லைப்பாட்டு
தமிழ் வையத் தண்ணம் புனல் என்ற பாடலடிகள் இடம்பெறும் சங்க நூல் - பரிபாடல்
பாலைத்திணைப் பாடலால் பாதி அமைந்த நூல் எது - அகநானூறு
அழுக்கற்ற அந்தணாளன் என்பவர் - கபிலர்
ஆற்றுப்படையில் அதிக அடிகளைக் கொண்ட நூல் - கூத்தராற்றுப்படை
பரிபாடலில் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை - 22
இலக்கியப் புலவர் சிங்கம் எனப்படுபவர் - நக்கீரர்
வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பாவால் பாடப்பட்ட நூல் - பட்டினப்பாலை
மிலேச்சுர்களைப் பற்றிக் கூறும் நூல் நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டைப் பெருங்குறிஞ்சி என்றவர் - நச்சினார்க்கினியர், பரிமேலழகர்
கலித்தொகையின் அடி எல்லை - 11-80
பாலை - 35 முல்லை - 17 மருதம் - 35
குறிஞ்சி - 29 நெய்தல் - 33+1 (கடவுள்வாழ்த்து)
அகநானூறு தொகுப்பித்தவன் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
அகநானூறு தொகுத்தவன் - மதுரை உப்பூரி குடிகிழார் மகன் உருத்திரசன்மன்
அகநானூறு புலவர்கள் - 145
குடவோலை முறையைப் பற்றி குறிப்பிடும் சங்க நூல் அகநானூறு
அகநானூறு அடி எல்லை - 13-31
அகநானூற்றில் 1,3,5,7 என்ற எண் அடிப்படையில் அமைந்த திணை - பாலை
அகநானூற்றில் 4,14,24,34 என்ற எண் அடிப்படையில் அமைந்த திணை - முல்லை
அகநானூற்றில் 2,8 என்ற எண் அடிப்படையில் அமைந்த திணை - குறிஞ்சி
அகநானூற்றில் 6,16,26,36 என்ற எண் அடிப்படையில் அமைந்த திணை - மருதம்
அகநானூற்றில் 10,20,30,40 என்ற எண் அடிப்படையில் அமைந்த திணை - நெய்தல்
அகநானூற்றில் இடம்பெற்றுள்ள பாடல்கள் திணை முறையே பின்வருமாறு அமைந்துள்ளது
பாலை பாடல்கள் - 200
குறிஞ்சி பாடல்கள் - 80
முல்லை பாடல்கள் - 40
மருதம் பாடல்கள் -  40
நெய்தல் பாடல்கள் - 40

குறுந்தொகையைத் தொகுத்தவர் - பூரிக்கோ
குறுந்தொகையின் அடிவரையறை - 4-8
குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் திணை முறையே பின்வருமாறு அமைந்துள்ளது
குறிஞ்சி - 148
முல்லை - 45
மருதம் - 48
நெய்தல் - 66
பாலை - 94

நற்றிணையைத் தொகுப்பித்தவர் - பன்னாடுதந்த மாறன்வழுதி
நற்றிணையின் அடிவரையறை - 9-12
ஏதிலாளன் கவலை கவற்ற
ஒருமுலை இழந்த திருமா வுண்ணி என்ற அடிகள் இடம்பெற்ற நூல் - நற்றிணை

நற்றிணையைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 192
நற்றிணையில் புலவர் பெயர் தெரியாத பாடல் எண்ணிக்கை - 56
நற்றிணையில் இடம்பெற்றுள்ள பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை - 9
நற்றிணையின் கடவுள் வாழ்த்து - திருமால்
நற்றிணையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் திணை முறையே பின்வருமாறு அமைந்துள்ளது
குறிஞ்சி - 129
பாலை - 104
முல்லை - 32
மருதம் - 32
நெய்தல் - 102

ஐங்குறுநூறு அடிவரையறை - 3-6
ஐங்குநூறு கடவுள் வாழ்த்து - சிவன்
ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் - புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் - மாந்தரஞ்சேரல் இரும்பொறை
ஐங்குறுநூற்றின் பாடல்களில் பழைய உரையுடன் கூடிய பாடல்களின் எண்ணிக்கை 469
ஐங்குறுநூற்றின் எந்தப் பத்து அந்தாதி தொடையில் அமைந்தது - தொண்டிப் பத்து (நான்காம் பத்து)
அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு அஞ்சி நந்தர்கள் கங்கைக்கடியில் செல்வம் புதைத்த செய்தியைக் கூறும் சங்க நூல் - அகநானூறு
அகநானூற்றின் வண்டுபடத் ததைந்த கண்ணி முதல் நெடுவேண் மார்பின் என்பது ஈறாக உள்ள பாடல்கள் - களிற்றியானை நிரை (1-120)
அகநானூற்றில் நாநகை யுடைய நெஞ்சே என்பது முதல் நாள்வலை முகந்த என்பது ஈறாக உள்ள பாடல்கள் - மணிமிடை பவளம் (121-300)
அகநானூற்றில் வறனுறு செய்தி என்பது முதலாக நகை நன்றம்ம ஈறாக உள்ள பாடல்கள் - நித்திலக்கோவை (301-400)
அகநானூறுக்கு அகவற்பாவால் உரை எழுதியவர் - பால்வண்ண தேவன்
கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட்டி
இருகடல் நீரும் ஒருபகல் ஆடி - என்ற வரிகள் இடம்பெற்ற நூ¢ல் - பதிற்றுப்பத்து

ஐங்குறுநூற்றின் முதல் உள்ள மருதப் பகுதி - வேட்கைப் பத்து

மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசையில் திணைகள் தொகுக்கப்பட்டுள்ள சங்க நூல் - ஐங்குறுநூறு

பதிற்றுப்பத்து எந்த பத்து அந்தாதியில் அமைந்துள்ளது - நான்காம் பத்து

இரண்டாம் பத்து - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - குமட்டூர்கண்ணனார்
மூன்றாம் பத்து - பல்யானைச் செல்கெழுகுட்டுவன் - பாலைக் கௌதமனார்
நான்காம் பத்து - களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் - காப்பியாற்றுக் காப்பியனார்
ஐந்தாம் பத்து - கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் - பரணர்
ஆறாம் பத்து - ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் - காக்கைபாடினியார் நச்செள்ளையார்
ஏழாம் பத்து - செல்வக் கடுங்கோ வாழியாதன் - கபிலர்
எட்டாம் பத்து - தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - அரசில் கிழார்
ஒன்பதாம் பத்து - குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை - பெருங்குன்றூர் கிழார்

Ôகற்றறிந்தார் ஏத்தும்Õ என்னும் அடைமொழியோடு குறிப்பிடப்படும் எட்டுத்தொகை நூல் கலித்தொகை
சேர, பாண்டிய, சோழ முறையில் தொகுக்கப்பட்டுள்ள நூல் - புறநானூறு
புறநானூற்றில் புலவர் பெயர் தெரியாத பாடல்கள் - 16
புறநானூற்றில் பெயர் தெரிந்த புலவர்கள் - 157
புறநானூற்றில் ஔவையார் பாடிய பாடல்கள் - 33
புறநானூற்றில் கபிலர் பாடிய பாடல்கள் - 28
புறநானூற்றில் கோவூர்கிழார் பாடல்கள் - 15
புறநானூற்றில் பரணர் பாடல்கள் -13
புறநானூற்றில் முடமோசியார் பாடல்கள் - 13
புறநானூற்றில் பெருஞ்சித்திரனார் பாடல்கள் - 10
ஐங்குறுநூற்றில் கிடைக்காத பாடல்கள் - 2 (129,130)
ஐங்குறுநூறு பாடிய புலவர்கள்
மருதம் - ஓரம்போகியார்
நெய்தல் - அம்மூவனார்
குறிஞ்சி - கபிலர்
பாலை - ஒதாலந்தையார்
முல்லை - பேயனார்

அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களிரியாவிரை - தலைச்சங்க நூல்கள்

அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசைநுணுக்கம், கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் - இடைச்சங்க நூல்கள்

அகத்தியம், தொல்காப்பியம், நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை - கடைச்சங்க நூல்கள்

தலைச்சங்கம் - கடல் கொண்ட மதுரை - 4440 ஆண்டுகள் - காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக 89 பேர் 7 பாண்டியர் - 549 உறுப்பினர் - 4449 புலவர்கள் - அகத்தியர், சிவபெருமான், முருகன், முரஞ்சியூர், முடிநாகராயர், நிதியின் கிழவன்

இடைச்சங்கம் - கபாடபுரம் - 3770ஆண்டுகள் - வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திரு மாறன் ஈறாக 59 பேர் 5 பாண்டியர் - 59 உறுப்பினர் - 3700 புலவர்கள் - அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வௌ¢ளூர்க்காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கீரந்தை

கடைச்சங்கம் - 1850 ஆண்டுகள் - முடத்திருமான் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக 49 பேர் 3 பாண்டியர் - 49 உறுப்பினர் - 449 புலவர்கள் - சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடை அரசனார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதனிளநாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார்

சங்கம் இருந்ததற்கான சான்றுகள் - இறையனார் களவியலுரை, அடியார்க்கு நல்லார் உரை, பேராசிரியர் உரை, நச்சினார்க்கினியர் உரை
காசுமீர்க் கதையை அடியொற்றிப் பின்னப்பட்ட கதை  இறையனார் களவியல் கதை
உலகில் முதன்முதலாக ஏற்படுத்தப்பட்ட மொழியாராய்ச்சி நிறுவனம் - பிரெஞ்சு அகாடமி (கி.பி.10)
மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தமை உண்மை என்று கூறுபவர்கள் - உ.வே.சாமிநாதையர், கா.சுப்பிரமணியபிள்ளை, கா.அப்பாத்துரையார், தேவநேயப்பாவாணர்
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே - புறநானூறு (78)
புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன் - மதுரைக்காஞ்சி

புணர்கூட்டு என்பது எதனைக் குறிக்கும் - சங்கம்

தமிழ்நிலை பெற்ற தாங்கரும் மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை - சிறுபாணாற்றுப்படை

தமிழ்நிலை என்ற தொகைச்சொல் சங்கத்தைக் குறிக்கும் சொல் என்று கூறியவர் - இரா.இராகவையங்கார்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி
நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண் - அப்பர்

சங்கத்தமிழ் - ஆண்டாள் திருப்பாவை
சங்கமுகத் தமிழ் - பெரிய திருமொழி
சங்கமலி தமிழ் - திருமங்கையாழ்வார்
தலைச்சங்கப் புலவனார் தம்முன் - பெரியபுராணம்
உறைவான் உயர்மதிற் கூடலில் ஆய்ந்தவொண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ - திருக்கோவையார்

முத்தும் முத்தமி ழுந்தந்து முற்றலால் - கம்பர்
தென்றமிழ் நாட்டகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம்
சேர்கிற் பீரேல் - கம்பர்

சங்கத்தமிழ் மூன்றும் தா - ஔவையார்
அகத்தியர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததாகச் சொல்லும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு
மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் - சின்னமன்னூர்ச் செப்பேடு
வால்மீகி இராமாயணமும் வியாச பாரதமும் குறிப்பிடும் சங்கப் பகுதி - கபாடபுரம் இரண்டாம் சங்கம்
சங்கம் இருந்ததைக் குறிப்பிடும் இலங்கை வரலாற்று நூல்கள் - மகாவம்சம், இராசாவளி, இராசரத்னாகிரி
திருவிளையாடற் புராணம் மதுரை தமிழ்ச் சங்கம் பற்றி விளக்கும் பாடல்கள் - 38 பாடல்கள்
இலெமூரியாவே பழைய தமிழகம் என்று கூறியவர் - மாணிக்கவேலு நாயக்கர்


நீதி இலக்கியம்
திருக்குறள் - திருவள்ளுவர் -133 -1330
நாலடியார் - சமண முனிவர்கள் - 40 - 400
நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார் - 106
திரிகடுகம் - நல்லாதனார் - 100
பழமொழி - மூன்றுரையனார் - 400
சிறுபஞ்சமூலம் - காரியாசான் - 102
இன்னாநாற்பது - கபிலர் - 41 (கடவுள்வாழ்த்து உட்பட)
இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார் - 41 (கடவுள்வாழ்த்து உட்பட)
களவழிநாற்பது - பொய்கையார் - 41
கார்நாற்பது - மதுரைக் கண்ணங்கூத்தனார் - 40
ஏலாதி - கணிமேதாவியார் - 81
ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார் - 100
முதுமொழிக்காஞ்சி - புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார் - 100
ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார் - 50
ஐந்திணை எழுபது - மூவாதியார் - 66 (நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை)
திணைமொழி ஐம்பது - கண்ணஞ்சேந்தனார் - 50
திணைமாலை நூற்றைம்பது - கணிதமேதாவியா¢ -150
கைந்நிலை - புல்லாங்கடனார் - 60
வேளாண் வேதம் - நாலடியார்
நாலடியாரைத் தொகுத்தவர் - பதுமனார்
இன்னா நாற்பதில் வரும் இன்னாதவை - 64
பதின்மர் உரை எழுதிய நூல் - திருக்குறள்
பழமொழி வேறுபெயர் - முதுசொல்
நீதி நூல்களில் பழைய உரை இல்லாத நூல் -
இரட்டை அறநூல்கள் - இன்னா நாற்பது, இனியவை நாற்பது
ஒவ்வொரு அதிகாரத்திலும் ஆர்கலி உலகத்து எனத் தொடங்கும் நூல்    முதுமொழிக்காஞ்சி
அட்ட களத்து என்று வழங்கி வரும் நூல் - களவழி நாற்பது
பண் பொருந்த பாடிய நானூறு - நாலடி நானூறு
பண்டைய வரலாற்று நிகழ்ச்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ள அறநூல் - பழமொழி
பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டு - நாலடியார், திருக்குறள்
சோழன் செங்கணான் கழுமலம் என்னுமிடத்தில் சேரமான் கணைக்கால் இரும்பொறையை வென்ற செய்தியைக் கூறும் நூல் - களவழி நாற்பது
நாலடியார் உரை - பதுமனார், தருமர்
நறுந்தொகை என்று வழங்கப்படுவது - வெற்றிவேற்கை
திருக்குறள் கருத்தைச் சுருக்கிய வடிவில் தரும் நூல் - நீதிநெறிவிளக்கம் - குமரகுருபரர்
ஒரு நூலிற்கு அமைய வேண்டிய உரையின் சிறப்பியல்புகளைக் கூறும் நீதி நூல் - நாலடியார்
நாலடியாருக்கு அதிகாரம் வகுத்தவர் பதுமனார் என்று கூறியவர் - உ.வே.சாமிநாதையர்
இன்னா நாற்பது உரை - கா.ர.கோவிந்தராச முதலியார்
களவழி நாற்பது உரை - சுப்பராய ரெட்டியார்
திருக்குறளுக்கு உள்ள பழைய உரைகளில் மிகவும் எளிமை வாய்ந்த பரிதியார் உரை
இலக்கண உரை என்று குறிப்பிடப்படுவது - பரிமேலழகர்  உரை
செய்யுள் வடிவ திருக்குறள் உரைகள் - குட்டிக்குறள், திருக்குறள் அகவல்
நான்மணிக்கடிகை உரை - கோ.இராசகோபால பிள்ளை
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் கைந்நிலை அகப்பொருள் என அறிய உதவும் உரை - இளம்பூரணர் உரை
கணைக்காலிரும் பொறையை மீட்கப் பாடியது - களவழி நாற்பது
சாதி இரண்டொழிய வேறில்லை என்று கூறியவர் - ஔவையார்
கற்றலின் சிறந்தன்று கற்றது மறவாமை - முதுமொழிக்காஞ்சி
மேற்கணக்கு, கீழ்க்கணக்கு இலக்கணம் கூறும் நூல் - பன்னிருபாட்டியல்
பதினெண்கீழ்க்கணக்கு என்ற சொல்லாட்சி இடம்பெறுவது - மயிலைநாதர் நன்னூல் உரை
நான்மணிக்கை பாடல்களில் 7, 100ஆம் பாடல்களை மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்
சுக்கும், மிளகும், திப்பிலியும் ஆம் எனத் திரிகடுகம் குறித்துக் குறிப்பிடும் நிகண்டு - திவாகரம்
கண்டஙகத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்கள் சேர்ந்த சிறுபஞ்சமூலம் என்று கூறும் நூல்கள் - பதார்த்த குணசிந்தாமணி, பொருட்டொகை நிகண்டு
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் - இளங்கோவடிகள்; காலம் - கி.பி.2; சமயம் - சமணம்
சிலப்பதிகாரத்தின் காண்டம் - மூன்று - காதை - முப்பது
சிலப்பதிகாரத்தின் முதல் காதை - மங்கல வாழ்த்து
சிலப்பதிகாரத்தின் இறுதிக்காதை - வரந்தரு காதை
புகார்க்காண்டம் - பத்துக்காதைகள்
மதுரைக்காண்டம் - பதின்மூன்று காதைகள்
வஞ்சிக்காண்டம் - ஏழு காதைகள்
காதை என்பது நூலின் பெரும்பிரிவு
சிலப்பதிகாரத்திற்குத் திருப்புமுனையாக அமையும் காதை - கானல்வரி
மாதவியின் தாய் தேவந்தி
கண்ணகியின் தோழி வயந்தமாலை
செங்குட்டுவனின் மனைவி பெயர் - வேண்மாள்
கோவலனின் தந்தைப் பெயர் - மாசாத்துவான்
கண்ணகியின் தந்தைப் பெயர் - மாநாய்கன்
பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி பெயர் - கோப்பெருந்தேவி
இளங்கோவடிகளின் அண்ணன் பெயர் - சேரன் செங்குட்டுவன்
மாதவியின் தாய் - சித்திராபதி
சிலப்பதிகாரத்தைச் சிறப்பதிகாரம் என்று கூறியவர் - உ.வே.சாமிநாதையர்
செங்குட்டுவன் வென்ற ஆரிய அரசன் - கனகவிசயன்
முருகன் வழிபாடு பற்றிக் கூறும் காதை - குன்றக்குரவை
இரட்டைக் காப்பியங்கள் என இணைத்துக் கூறுவதைத் தவறு என்றவர் - சோமசுந்தர பாரதியார்
வலித்தல் விகாரத்தால் பெயர் பெற்ற காப்பியம் - சிலப்பதிகாரம்
மணிமேகலை - சீத்தலை சாத்தனார்
அடிகள் -4286
காலம் - கி.பி.2
சமயம் - பௌத்தம்
மணிமேகலை அமுதசுரபி பெற்ற இடம் - மணிபல்லவத்தீவில் உள்ள கோமுகி
மணிமேகலையில் முற்பிறவி பெயர் - இலக்குமி
கிளைக்கதைகள் அதிகம் கொண்ட காப்பியம் - மணிமேகலை
மணிமேலையில் இடம்பெறும் சோழன் - மாவண்கிள்ளி
மணிமேகலைக்கு அமுத சுரபியில் முதன்முதலில் பிச்சையிட்டவர் - ஆதிரை
மணிமேகலையின் தோழி - சுதமதி
சீவகசிந்தாமணி ஆசிரியர் - திருத்தக்கதேவர்
விருத்தப்பாவில் அமைந்த முதல் காப்பியம் - சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணியை தமிழ் இலக்கியத்தின் இலியட், ஒடிசி என்று கூறியவர் - ஜி.யு.போப்
திருத்தக்க தேவரை தமிழ்ப் புலவர்களிடையே விளங்கும் இளவரசர் என்றவர் - வீரமாமுனிவர்
சீவகனின் யாழிசைத் திறத்தால் வெற்றி கொள்ளப்பட்டவள் - காந்தருவதத்தை
முடிப்பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று சீவகசிந்தாமணியை அழைத்தவர் - அடியார்க்கு நல்லார்
கட்டியங்காரனின் பட்டத்து யானையை அடக்கி சீவகன் மணங்கொண்ட மங்கை - குணமாலை
குண்டலகேசியை மந்திரிகுமாரி என்ற பெயரில் திரைப்படமாக்கியவர் - மு.கருணாநிதி
அப்பரை இறைவன் என்று துதித்தவர் - அப்பூதியடிகள்
அவினாசியில் முதலை உண்ட பிள்ளையை மீட்டவர் - சுந்தரர்
இறந்து எலும்புருவாக இருந்த பூம்பாவை மீட்டவர் - திருஞானசம்பந்தர்
சிலமந்தி அலமாந்து மரமேறி பாடியவர் - திருஞானசம்பந்தர்
இறையான் மகிழ இசைபாடினான் என்று சேக்கிழார் யாரைக் கூறுகிறார் - சுந்தரர்
ஒருநாமம் ஓருருவம் இல்லாதவர் என்றவர் - மாணிக்கவாசகர்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்று பாடியவர் - திருநாவுக்கரசர்
மாசில் வீணையும் மாலை மதியமும் பாடியவர் - திருநாவுக்கரசர்
நீற்றங்கரையில் பிழைத்தவர் - திருநாவுக்கரசர்
சேரமான் பெருமாள் நாயனாரோடு கயிலைச் சென்றவர் - சுந்தரர்
திருஅங்கமாலை பாடியவர் - திருநாவுக்கரசர்
முதலில் சித்தரகவி பாடியவர் - திருஞானசம்பந்தர்
காரெட்டு யாருடைய நூல் - நக்கீரதேவர்
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரோ என்றவர் - திருநாவுக்கரசர்
இறைவனிடம் வண்டைத் தூது விட்டவர் - திருஞானசம்பந்தர்
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்றவர் - திருஞானசம்பந்தர்
பொய்யடிமை இல்லாத புலவர் - மாணிக்கவாசகர்
தொகையடியார் தொகை - ஒன்பதின்மர்
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர் என்ற பாடலை பாடியவர் - திருமூலர்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் யார் கூற்று - மாணிக்கவாசகர்
அதிகமான பதிகங்களைப் பாடியவர் - வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள்
மாலை இலக்கியத்தில் சிறந்தவர் - இராமலிங்கர்
வசனநடைக் கர்த்தா என்று சிறப்பிக்கப்படுபவர் - தாண்டவராய முதலியார்
வசனநடைக் கர்த்தா என்று சிறப்பித்தவர் - கால்டுவெல்
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை - கோபால கிருஷ்ண பாரதியார்
சரியை - தசமார்க்கம்
கிரியை - சற்புத்திரமார்க்கம்
யோகம் - சகமார்க்கம்
ஞானம் - சன்மார்க்கம்
நைடத ஆசிரியர் - அதிவீரராம பாண்டியன்
ஆறுமுக நாவலரை வசனநடை கைவந்த வள்ளலார் எனப் பாரட்டியவர் வள்ளலார்
தமிழும் வடமொழியும் கலந்து எழுதும் நடை மணிபிரவாளம்
அறத்தின் நாயகன் - இராமன்
உயிர் கொடுத்து பழி கொண்டான் - இராவணன்
சிறியன சிந்தியாதான் - வாலி
நாடகமயில், துணமொழி மடமான் - கையேயி
முழுதுணர் புலவர் - வீடணன்

சூளாமணிக்கு ஆசிரியர் தோலாமொழித்தேவர் சூட்டிய பெயர் - செங்கண் நெடியோன் சரிதம்


புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
வையை என்னும் பொய்யாக் குலக்கொடி இவ்வடிகள் இடம்பெற்ற காப்பியம் -
வன்றொண்டர் என அழைக்கப் பெறுபவர் யார் - சுந்தரர்
புலியின் வாலை இடையில் அணிந்தவன் - குகன்
சூரியனின் மகன் யார் - சுக்கிரிவன்
வாயுவின் மகன் - அனுமன்
மங்கையைப் பசம் வைத்தவர், தில்லை மன்றுள் ஆடிய பெருமான் அண்டர் நாயகர் என்று சேக்கிழார் எவரைக் குறிப்பிடுகிறார் - சிவபெருமான்
சிந்தாமணி எதனுடைய மொழிபெயர்ப்பு நூல் என்று கூறுவர் - சத்ரிய சூடாமணி
பெருங்கதைக்கு மூலக்கருவாய் அமைந்தது - துர்விந்தனின் பிருகத் கதா
தோலாமொழித் தேவரின் இயற்பெயர் - ஸ்ரீவர்த்த தேவர்
நீலகேசியின் உரையாசிரியர் - சமய திவாகர வாமனமுனிவர்
மேருமந்திரப் புராணத்தின் ஆசிரியர் - வாமனமுனிவர்
உரைநடையில் இயற்றப் பெற்ற சமண சமயக் காப்பியம் - ஸ்ரீபுராணம்
அசுவமேத புராணம் - சரவண பெருமாள் கவிராயர்
குண்டலகேசியை அகலக்கவி என்று சிறப்பித்தவர் - பெருந்தேவனார் (வீரசோழிய உரையாசிரியர்)
சிந்தாமணியை முதல் நூலாகக் கொண்டு எழுந்த நூல் சீவகசிந்தாமணி சுருக்கம் எழுதியவர் பகழிக் கூத்தர்
குன்று சூழ்வான் மகன் - சுக்ரீவன்
விருத்தமெனும் ஒண்பாவிற்குயர் கம்பன் எனப் புகழ்பவர் - சொக்கநாதப் புலவர்
செவிக்குத் தேனென இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன் - அனுமன்
எழுபிறப்பும் இல்லை என்றிரப்போர்க்கு இல்லை என்றுரையா இதயம் நீ அளித்தருள் என்று கண்ணனிடம் கேட்பவன் - கர்ணன்
செறுமுனை சென்று செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே எனக்கு இனிப் புகழும் கருமமும் தருமமும் என்று கூறியவர் - கர்ணன்
அரிச்சந்திரப் புரணாம் எத்தனைக் காண்டங்களைக் கொண்டது - 10
சிந்தாமணியிலும் இந்த ஓட்டமும் இனிமையும் இல்லை என்று தெ.பொ.மீ பாராட்டும் நூல் சூளாமணி
கும்பிட்டு வாழ்கிலேன் கூற்றையும் ஆடல் கொண்டேன் - கும்பகர்ணன்
சேக்கிழார் என்பது குடிப்பெயர்
எடுக்கும் மாக்கதை - பெரியபுராணம்
சேக்கிழார் புராணம் - உமாபதி சிவாச்சாரியார்
பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானிடரே நன்று நம்கொற்றம் யார் கூற்று - கும்பகர்ணன்
என்னையே நோக்கியான் இந்நெடும்பகை கொண்டதென்று - இராவணன்
விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் - சீவகசிந்தாமணி
புனையர் ஓவியம் புறம்போந்தன்ன குறிப்பது - மணிமேகலை
ஆபுத்திரன் கதையை மணிமேகலைக்கு எடுத்துரைப்பவர் - அறவண அடிகள்
கற்பெனும் பெயரதொன்று களிநடம் புரியக் கண்டேன் - அனுமன்
மண நூல் என்று சிறப்பிக்கப்படும் காப்பியம் - சீவகசிந்தாமணி
முடிப்பொருள் தொடர்நிலைச் செய்யுள் - சீவகசிந்தாமணி
வளையாபதியின் கதை அறிய உதவும் நூல் - ஸ்ரீபுராணம் (35-36 சருக்கங்கள்)
நவகோடி நாராயணன் இடம்பெறும் நூல் - வளையாபதி
குண்டலகேசியின் வரலாற்றை உணர்த்தும் நூல் - நீலகேசி
ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற வழக்கினை முதன்முதலில் பயன்படுத்தியவர் - சி.வை.தாமோதரம் பிள்ளை (சூளாமணி பதிப்பு)
நாககுமார காவியத்தின் வேறு பெயர் - நாகபஞ்சமி
நாககுமார காவியத்தின் நாயகன் - நாககுமாரன் - சிரேனிக மன்னன்
பவத்திறம் அறுக என முடியும் காப்பியம் - மணிமேகலை
யசோதர காவியத்தில் இடம்பெறும் அரசர் - மாரிதத்தன்
நூல் இயற்றியோர், வரலாறு, கதை அறிய இயலாத காப்பியம் - வளையாபதி
சீவகனுக்குக் கலைகளைக் கற்பித்தவர் - அச்சணந்தி அடிகள்
விண்ணகரம் என்பது - விஷ்ணுகோயில்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் - மனோன்மணீயம்
கவுந்தியின் சமயம் - சமணம்
ஐந்து வகை மனிதர்களைக் குறிப்பிடும் காப்பியம் - நீலகேசி
ஆபுத்திரனுக்கு அமுதசுரபியை வழங்கியவர் - சிந்தாதேவி தெய்வம்
தவ முனிவர் கௌதமர் இடம்பெறும் காப்பியம் -நாககுமார காவியம்
உதயண குமார காவியத்தின் மூலநூல் - பெருங்கதை
உதயணின் நாடு - வத்தவநாடு
அரிச்சந்திர புராணத்தின் ஆசிரியர் - வீரகவிராயன்
சூளாமணியின் கதைத்தலைவன் - திவிட்டன்
குறிஞ்சி நில மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கப்படும் சிலப்பதிகாரப் பகுதி - குன்றக்குரவை
முல்லைநில மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கப்படும் சிலப்பதிகாரப் பகுதி - ஆய்ச்சியர் குரவை
பாலை நில மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கப்படும் சிலப்பதிகாரப் பகுதி - வேட்டுவ வரி
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் - கம்பராமாயணம்
இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார் - கம்பராமாயணம்
காவல னாதியாக் கணங்கள் கைதொழப்
பாவமில் சுதன்மரால் பாடப்பட்டதே - சீவகசிந்தாமணி




தேனெடுத்தல் எந்நிலத்துக்குரியது - குறிஞ்சி
ஏறுதழுவல்  - முல்லை
களை கட்டல் - மருதம்
மீன் உலர்தல் - நெய்தல்
சூறையாடல் - பாலை
சொல் எதிர்பெறாஅன் சொல்லி இன்புறல் எந்தத் திணை - கைக்கிளை
மதியுடம்பாடு எத்தனை வகை - மூன்று
தோற்று ஓடுபவர் மீது வாளை ஓச்சாத
மன்னது இயல்பைச் சொல்லி வாழ்த்தும் துறை - இயன்மொழிவாழ்த்து
ஓரேழுத்து ஒரு மொழிகள் மொத்தம் - 42
கொற்றவள்ளை எத்திணையோடு தொடர்புடையது - வஞ்சி
பாதீடு, உண்டாட்டு, கொடை தொடர்புடைய - வெட்சி
பாசறை நிலை இடம்பெறும் - வஞ்சி
பரிசில்துறை, வேள்விநிலை, செவியறிவுறூஉ, ஓம்படை தொடர்புடைய படலம் - பாடாண்படலம்









சிற்றிலக்கியம்
சாம பேத தான தண்டம் என்பதைப் பேசும் இலக்கிய வகை - பிள்ளைத்தமிழ்
குறவஞ்சியின் மையப்பொருள் - தலச்சிறப்பு
செல்லா மரபின் அவற்றொடு கெழிஇச் - தூது
இறையனார் அகப்பொருளுக்கு இலக்கியம் - பாண்டிக்கோவை
நம்பியகப்பொருளுக்கு இலக்கியம் - தஞ்சைவாணன் கோவை
மாறன் அகப்பொருளுக்கு இலக்கியம் - திருப்பதிக்கோவை
வெற்றியால் பெயர்பெற்ற பரணி - திருச்செந்தூர் பரணி (அ) சீனத்துப் பரணி
திருவருணைக் கலம்பகம் - சைவக் கலம்பகம்
பழமொழியுடன் தொடர்புபடுத்திப் பாடப்பெற்ற நூல் - தண்டலையார் சதகம்
சிந்துக்குத் தந்தை - அண்ணாமலை ரெட்டியார்
தமிழ் செய்யுள் கலம்பகத்தின் ஆசிரியர் - ஜி.யு.போப்
ஔவையார் பதிகம் பாடியவர் - தவத்திரு தண்டபாணடிகள்
காளமேகத்திற்கு உதவிய வள்ளல் - திருமலைராயன்
ஏழாயிரம் கோடி தன் மனத்தே எழுதிப் படித்தவர் - அந்தககவி வீரராகவர்
பட்டினத்தார் சீடர் - பத்திரகிரியார்
பொன்வண்ணத்தந்தாதி - சேரமான் பெருமாள் நாயனார்
கோவையில் காலத்தால் முற்பட்டது - பாண்டிக்கோவை
சமூக உல்லாசம் இடம்பெறும் கலம்பகம் - திருக்காவலூர்க் கலம்பகம்
திருக்காவலூர்க் கலம்பகத்தை எழுதியவர் - வீரமாமுனிவர்
அஷ்டப் பிரபந்தத்தின் ஆசிரியர் - பிள்ளை பெருமாள் அய்யங்கார்
அகலக் கவியில் பாடப்பெற்ற காப்பியம் - குண்டலகேசி
பாண்டிக்கோவையில் பாடப்பெறும் மன்னன் - நின்றசீர் நெடுமாறன்
கோவையில் பெயர் கூறப்பெறாத தலைவன் - கிளவித் தலைவன்
சிற்றிலக்கியம் பெருமளவு தோன்றிய காலம் - நாயக்கர் காலம்
திருக்கலம்பகம் பாடியவர் - உதீசத் தேவர்
கலம்பகம் பாடப்படும் அளவு கடவுள் -100, வணிகர் - 50, அரசன் - 90, முனிவர் - 95, வேளாண் - 30
முதல் தல புராணம் பாடியவர் - உமாபதி சிவாச்சாரியார்
மாரி வாயில் - தூது இலக்கியம்
தலபுராண வேந்தர் என்று அழைக்கப்படுபவர் -மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
நெல் குற்றும்போது பாடுவது - வள்ளைப்பாட்டு
Òஆனை ஆயிரம் அமரிடை வென்றÓ இடம்பெற்ற நூல் - இலக்கண விளக்கம் (பாட்டியல்)
வீரமாமுனிவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - பண்ணை சண்முகம்
சைவசித்தாந்தம், அத்வைதம் ஆகிய இரண்டு நிலைகளுக்குச் சமரசம் கண்டவர் தாயுமானவர்
பிரபந்தங்களின் இலக்கணம் கூறுபவை - பாட்டியல்கள்
உலாவில் பாடக் கடினமான பகுதி - பெதும்பைப் பருவம்
மடல்மா கூறும் இடனுமாருண்டே - உலா
திருமுறை கண்ட சோழன் - இராசராசன்
குப்தர்களின் வரலாறு கூறும் புராணங்கள் - பெரிய புராணம், விஷ்ணுபுராணம்
தென்காசித் திருக்கோயிலைக் கட்டியவர் - அதிவீரராம பாண்டியர்
திருக்கோவையில் அமைந்துள்ள கிளவித்துறைகள் -25
கோவை நூல்களில் காணப்பெறும் தலைவர் - 2 (பாட்டுடைத் தலைவர், கிளவித்தலைவர்)
சிற்றிலக்கியங்கள் 96 என முதலில் பட்டியலிட்ட நூல் - பிரபந்த மரபியல்
உரைநடையாய் 96 சிற்றிலக்கியங்களுக்கு விளக்கம் தந்த நூல் சதுரகராதி
திருமலை முருகன் பள்ளு - பெரியவன் கவிராயர்
பரணிக்கோர் செயங்கொண்டான் என்று கூறியவர் - படிக்காசுப் புலவர்
ஒரே இரவில் பாடப்பெற்ற பரணி தக்கயாகப் பரணி - 818 தாழிசைகளால் ஆனதுஹ
இதழ்கள் ஒட்டாமல் 100 பாடல்களால் பாடப்பெறுவது - நிரோட்டக யமக அந்தாதி
நிரோட்டக யமக அந்தாதி பாடியவர் - சிவப்பிரகாசர்
கலிங்கத்துப்பரணியில் இடம்பெற்றுள்ள தாழிசைகள் - 582
கோவை இலக்கியத்தின் பிரிவுகள் - 33
காரைக்காலம்மையாரின் பாடலில் மண்டலித்தல் முறையில் அமைந்த நூல் அற்புதத் திருவந்தாதி
பள்ளியெழுச்சி - துயிலெடை நிலை
மூவருலா - ஒட்டக்கூத்தர்
காந்தி பிள்ளைத்தமிழ் - ராய.சொ.
தக்கயாக பரணி - ஒட்டக்கூத்தர்
தேவ மகளிரும் காதல் கொள்வதாகக் கூறும் உலா - திருக்குற்றாலநாதர் உலா
பேசும் உலாவிற் பெதும்பை புலி -
மோகனவதைப் பரணி பாசவதைப் பரணி பாடியவர் - தத்துவராயர்
தென்றலைச் சிறப்பிப்பது - வசந்த மாலை
வண்டு விடுதூது - கச்சியப்ப முனிவர்
காந்தியம்மை பிள்ளைத்தமிழ் - அழகிய சொக்கநாதர்
அகப்பொருளைப் பேரின்ப விளக்கத்திற்குப் பயன்படுத்திய கோவை - திருக்கோவையார்
பாண்டியர் பெரும் பாடும் புராணம் - திருவிளையாடற் புராணம்
மாலை இலக்கியத்தில் சிறந்தவர் - இராமலிங்கர்
வெண்பாப் பாட்டியல் பிள்ளைத்தமிழை எடுத்து இயம்பும் விதம் - பிள்ளைக்கவி
பிள்ளைத் தமிழாயினும் பெரிய தமிழ் என்பபாடப் பெறுவது - திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
கலம்பத்தால் மாண்ட கதை நாடறியும் என்பது இடம்பெறுவது - சோமமேசர் முதுமொழி வெண்பா
பல்வேறு போர்க்களங்கள் பற்றிக் கூறும் நூல் - நந்திக்கலம்பகம்
குற்றாலக் குறவஞ்சியைப் பாடியதற்காகத் திரிகூடராசப்பக் கவிராயர் பரிசாகப் பெற்ற நிலம் குறவஞ்சி மேடு
49 செய்யுட்கள் கொண்ட கலம்பகம் - ஆளுடைப் பிள்ளைக் கலம்பகம்
110 செய்யுட்கள் கொண்ட கலம்பகம் - திருக்கலம்பகம்
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் பாடியவர் - பகழிக்கூத்தர்
அம்மானை இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்தவர் - வீரமாமுனிவர்
ஞானப்பள்ளு - பேதுருப் புலவர்
முக்கூடற்பள்ளு நாடகம் - சின்னத் தம்பிவேளார்
அகத்துறை தூதுகளில் அமைந்துள்ள பெரும்பாலான துறை - காமம் மிக்க கழிபடர் கிளவி
குணமாலை சீவகனுக்கு அனுப்பியது - கிளிவிடுதூது
அரசக் கோவை என்றழைக்கப்படுவது - திருக்கோவையார்
மந்திரிக் கோவை என்றழைக்கப்படுவது - திருவெங்கைக்கோவை
புதுக்கவிதை பிரம்மா என்றழைக்கப்படுபவர் - எஸ்ரா பவுண்டு
சின்ன சீறா பாடியவர் - பனீ அகமது மரக்காயர்
தமிழ் மொழியின் உபநிடதம் எனப் பாராட்டப்படுவது தாயுமானவர் பாடல்கள்
திரு.வி.க.வின் பயண இலக்கியம் - எனது இலங்கைச் செலவு
மு.வரதராசனாரின் பயண இலக்கியம் - யான் கண்ட இலங்கை
திரு.வி.க. வின் வாழ்க்கை வரலாறு - வாழ்க்கைக் குறிப்புகள்
உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாறு - என் சரித்திரம்
கண்ணதாசனின்  வாழ்க்கை வரலாறு - வனவாசம், மனவாசம்
கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு - நெஞ்சுக்கு நீதி
நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு - என் கதை
வைரமுத்துவின் வாழ்க்கை வரலாறு - இதுவரை நான்
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு - நான் ஏன் பிறந்தேன்
ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் வாழ்க்கை வரலாறு - எனது வாழ்க்கை அனுபவங்கள்
விநோதரச மஞ்சரி எழுதியவர் - வீராசாமி செட்டியார்
பெண்பாற் கைக்கிளை என்பது - உலா
தமிழில் முதன் முதலில் இலக்கியக் கலை தந்த சிறப்பிற்குரியவர் - அ.ச.ஞானசம்பந்தன்
மேருமந்திர புராணம் -வாமன முனிவர்
ஸ்ரீபுராணம் - மண்டலபுருடர்
கூர்மபுராணம், இலிங்கபுராணம் - அதிவீரராம பாண்டியர்
குட்டித் திருவாசகம்  எனப் போற்றப்படுவது - திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
முதல் பயண இலக்கியம் - காசி யாத்திரை (1832) எழுதியவர் - வீராசாமி ஐயர்
சிற்றிதழ்கள்
மணிக்கொடி - பி.எஸ்.ராமையா (1935)
சரஸ்வதி, சமரன் - விஜயபாஸ்கரத் தொண்டைமான் (1955)
எழுத்து - சி.சு.செல்லப்பா (1959)
இலக்கிய வட்டம் - க.நா.சுப்பிரமணியம் (1964)
நடை - கோ.கிருஷ்ணசாமி (1968)
ஞானரதம் - ஜெயகாந்தன் (1970)
கசடதபற - நா.கிருஷ்ணமூர்த்தி (1970)
சதங்கை - வனமாலிகை (1971)
அஃ - என் பரந்தாமன் (1972)
ழ - ஆத்மாநாம்
கொல்லிப்பாவை - ராஜமார்த்தாண்டன்
தாமரை - ப.ஜீவானந்தம் (1958)
கனவு - சுப்ரபாரதி மணியன் (1987)
வெளி - ரங்கராஜன்
மேலும் - சிவசுப்பிரமணியன்
பஞ்சாமிர்தம் - ஆ.மாதவையா
கணையாழி - கஸ்தூரி ரங்கன்
நிழல் - ஞானி
குயில் - பாரதிதாசன்
தேசபக்தன் - திரு.வி.க
நவசக்தி - திரு.வி.க
சுதேசமித்திரன் - பாரதி
தீபம் - நா.பார்த்தசாரதி
சிகரம் - செந்தில்நாதன்
செம்மலர் - கே.முத்தையா
தென்றல் - கண்ணதாசன்
பாலபாரதி - வ.வே.சு. ஐயர்
சக்தி - கோவிந்தன்
கலைமகள் - கி.வா.ஜகந்நாதன்
ஜோதி - வெ.சாமிநாதசர்மா
காலச்சுவடு - சுந்தர ராமசாமி
உயிர்மை - மனுஷ்யபுத்திரன்



பல்கலைக் குரிசில் பவணந்தி என்று கூறியவர் - சங்கர நமச்சிவாயர்
தொல்காப்பியம் நன்னூல் வேறுபாடு இல்லாத பகுதி - மொழிமுதல் எழுத்துகள்
செந்தமிழ், கொடுந்தமிழ் இலக்கணங்களை எழுதியவர் - வீரமாமுனிவர்
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தோ என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் புறப்பொருள் வெண்பாமாலை
அசைச்சொல் என்பது - வினைச்சொல்

உரைகள்
புறவு துறந்த பெரியோர் - இளம்பூரணர்
உரையாசிரியர் - இளம்பூரணர்
பரிமேலழகர் உரைக்கு விளக்க உரை நுண்பொருள் மாலை
மிகுதியான உரைகள் கொண்ட சைவசித்தாந்த நூல் சிவஞானபோதம்
சங்கர நமச்சிவாயப் புலவர் செய்த காண்டிகை உரையைத் திருத்தி விருத்தியுரை செய்தவர் யார் - சிவஞான முனிவர்
அடியார்க்கு நல்லார் உரை எத்தனைச் சிலப்பதிகாரக் காதைகளுக்குக் கிடைத்துள்ளது - 19
நஞ்சீயர் - 9000படி
பெரிய திருமொழி உரை, திருவாய்மொழி உரை, திருப்பள்ளி எழுச்சியுரை, திருவித்த உரை போன்ற உரைகளை எழுதியவர் - நம்பிள்ளை
அழகிய மணவாள ஜீயர்  - 12000 படி
பெரியவச்சான் பிள்ளை - 24000படி
திருவாய்மொழிக்கு முப்பதாயிரப்படி எழுதியவர் - வடக்குத் திருவீதிப்பிள்ளை
திருப்பாவை உரை ஆறாயிரப்படி எழுதியவர் - அழகிய மணவாளப் பெருமாள் நயினார்
தென்கலையாரின் தலைவர் - பெரிய ஜீயர் மணவாள முனிகள்
பெரியாழ்வார் திருமொழி உரை, இராமாநுச நூற்றந்தாதி உரை, ஞானசார உரை ஆகிய உரைகளை எழுதியவர் -  பெரிய ஜீயர் மணவாள முனிகள்

வைணவ உரைகள் மணிப்பிரவாள நடையில் அமைந்திருந்ததைத் தமிழ்ப்படுத்தியவர் புருசோத்தம நாயுடு

இலக்கிய வரலாறு
தமிழ் இலக்கிய வரலாற்றை முதலில் தமிழில் எழுதியவர் - கா.சு.பிள்ளை
திருத்தொண்டர் புராணம் பேசும் மொத்த அடியார்கள் -
தண்டியலங்காரத்தில் கூறப்பட்டுள்ள அணிகள் - 35
பிள்ளைத் தமிழில் எந்தப் பருவத்தைப் பாடுவது கடினம் - அம்புலிப்பருவம்
வெண்பா யாப்பைக் கையாண்டு புகழ் பெற்றவர் - புகழேந்தி
மக்கட்பதடி என்று யாரை வள்ளுவர் சுட்டுகிறார்
கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ பாடியவர் - ஆண்டாள்
தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அண்ணாவைப் பாராட்டியவர் - கல்கி
இரட்சணிய மனோகரத்தின் ஆசிரியர் யார் - எச்.ஏ.கிருஷ்ணப் பிள்ளை
கிறித்துவக் கம்பர் யார் - எச்.ஏ.கிருஷ்ணப் பிள்ளை
நூலைப்படி சங்கத்தமிழ் நூலைப்படி என்று கூறியவர் - பாரதிதாசன்
என் சரித்திரம் நூலின் ஆசிரியர் - உ.வே.சாமிநாதையர்
நாடகவியல் நூலின் ஆசிரியர் - பரிதிமாற்கலைஞர்
தமிழில் முதலில் வெளிவந்த கலைக்களஞ்சியத்தின் பெயர் - அபிதானகோசம்
அபிதான கோசம் எழுதியவர் - முத்துத் தம்பிப்பிள்ளை
அபிதான சிந்தாமணி எழுதியவர் - ஆ.சிங்காரவேலு பிள்ளை
முதல் சரித்திர நாவல் மோகனாங்கி எழுதியவர் - சரவணமுத்துப் பிள்ளை
முதன் முதலில் நிகண்டு என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் - மண்டலபுருடர்
நீதி என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் - கொங்குவேளிர்
பிங்கல நிகண்டைப் பின்பற்றி எழுந்த ஒரே நிகண்டு - கைலாச நிகண்டு
மருதநில நந்தா விளக்கம் - பள்ளுப்பாட்டு
வேம்பத்தூர் திருவிளையாடல் என்று அழைக்கப்படுவது - திருவிளையாடற்புராணம்
தருமசேனர் என்ற சிறப்புடன் அழைக்கப்படுபவர் - திருநாவுக்கரசர்
பரகாலன் என்ற சிறப்பு பெயர் உடையவர் - திருமங்கையாழ்வார்
பொய்கையாழ்வார் தம் பாடலை எவ்வாறு குறிப்பிடுவர் - சொல்மாலை
பேயாழ்வார் தம்பாடலை எவ்வாறு குறிப்பிடுவர் - ஞானத்தமிழ்
திருவிசைப்பாவில் உள்ள பாடல்கள் - 301
திருவிசைப்பாவில் உள்ள பதிகங்கள் - 28
திருப்பல்லாண்டில் உள்ள பாடல்கள் - 13

கிராமிய கலைஞர் என்றழைக்கப்படுபவர் - கா.சி.வேங்கடரமணி
தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் என்று போற்றப்படுபவர் - ராஜம் கிருஷ்ணன்
அநியாய கண்டனம் என்று சி.வை.தா.பெயரிட்ட இலக்கண நூல் - இலக்கண விளக்கச் சூறாவளி
முதன்முதலில் ரெயினால்ட்ஸ் நாவல்கட்குத் தமிழுருவம் கொடுத்தவர் - ஆரணி குப்புசாமி முதலியார்
தமிழ்நாட்டின் தாக்கரே எனப் பாராட்டப்படுபவர் - அ.மாதவையா
தமிழ்நாட்டின் தாக்கரே என மாதவையாவைப் பாராட்டியவர் - கைலாசபதி
ஆபத்துக்கிடமான அபவாதம் என்பது - கமலாம்பாள் சரித்திரம்
தமிழ் இலக்கிய உலகில் இருமுறை சாகித்திய அகடாமி பெற்றவர் - சிற்பி பாலசுப்பிரமணியம்
பெரிய தமிழ் எனப் போற்றப்படுவது - திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
கடுவன் புல்லிக் களவர் கோமான் என்ற வரி இடம்பெறும் சங்க நூல் - அகநானூறு
மணிப்பிரவாள நடையைத் தோற்றுவித்தவர் - மண்டலபுருடர் - ஸ்ரீபுராணம்
சிவபோக சாரம் என்றழைக்கப்படும் சாத்திர நூல் - சிவஞானசித்தியார்
சிவஞான போதத்தின் வழிநூல் - சிவஞான சித்தியார்
வியாக்கின சக்ரவர்த்தி என்று சிறப்பிக்கப்படுபவர் - பெரியவச்சான் பிள்ளை
சூளாமணியின் ஆசிரியர் - ஸ்ரீவர்த்தமானர்
சூளாமணியின் ஆசிரியர் ஸ்ரீவர்த்தமானர் என்று குறிப்பிடும் கல்வெட்டு சிரவணபெலகோலாக் கல்வெட்டு
நிரம்பையர் காவலர் என்றழைக்கப்படுபவர் அரும்பர உரையாசிரியர்

இலக்கணம்
தொல்காப்பியத்தை முதன்முதலில் பதிப்பித்தவர் - மழவை மகாலிங்கையர் (1857)
தொல்காப்பியம் முழுவதும் காண்டிகை உரை எழுதியவர் - பாலசுப்பிரமணியம்
 வடநூற்கடலை நிலைகண்ட சேனாவரையன் என்று கூறியவர் - சிவஞானமுனிவர்
எத்தனை இடங்களில் ஆசிரியன் தன்னைப் புகழ்ந்து கொள்ளலாம் - 4
தம்மொடு தாம் மட்டுமே மயங்கும் மெய்கள் - 4 (க,ச,த,ப)
வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்கு மட்டுமே உரியன - 2 (ர,ழ)
வேற்றுமைப் புணர்ச்சி வகை - 6
அல்வழிப் புணர்ச்சி எத்தனை வகை - 14
சிறப்புப் பாயிரம் எத்தனை உறுப்பு உடையது - 8
தமிழின் முதல் நிகண்டு - திவாகரம்
பிங்கல நிகண்டு எழுதியவர் - பிங்கலர்
தமிழ் என்பதற்கு இனிமை, நீர்மை என்பன கூறும் நிகண்டு - பிங்கல நிகண்டு
சிந்தாமணி நிகண்டு - வைத்தியலிங்கம்பிள்ளை
பொதிகை நிகண்டு - சாமிநாதக் கவிராயர்
ஆசிரியர் நிகண்டு - ஆண்டிப்புலவர்
பொருட்தொகை நிகண்டு - சுப்பிரமணியக் கவிராயர்
கயாதர நிகண்டு, உரிச்சொல் நிகண்டு ஆகியவற்றை எழுதியவர் - காங்கேயர்
அகராதி நிகண்டு - சிதம்பரரேவண சித்தர்
சூடாமணி நிகண்டு - மண்டலபுருடர்
சலாம் என்ற சொல் இடம்பெறும் நிகண்டு - உரிச்சொல் நிகண்டு
கைலாச நிகண்டு - கைலாசர்
பாரததீப நிகண்டு - திருவேங்கடபாரதி
உசித சூடாமணி நிகண்டு - சிதம்பரக் கவிராயர்
பல்பொருள் சூடாமணி நிகண்டு - ஈசுவர பாரதி
அரும்பொருள் விளக்க நிகண்டு - அருமந்தைய தேசிகர்
தொல்காப்பியத்தைப் பாணர் இலக்கியம் என்றவர் - க.கைலாசபதி
திராவிட மொழிகளின் அடிச்சொல் அகராதி தந்தவர் - எமனோ - பரோ
முதல் தமிழ் ஆங்கில அகராதியைத் தந்தவர் - பெப்ரிஷீயஸ்
தமிழ் இலக்கண நூல்களுக்குத் தோன்றிய உரைகளில் அளவில் பெரியது - யாப்பருங்கலவிருத்தியுரை
இறையனார் களவியலுரை எடுத்தாளும் எடுத்துக்காட்டுப் பாடல்கள் பாண்டிக்கோவை எனக் கூறும் நூல் - களவியற் காரிகை உரை
சின்னூல் என்று அழைக்கப்படுவது - நேமிநாதம்
திணைகளை களவு, கற்பிற்குத் தனித்தனியாகப் பிரித்துக் கூறும் நூல் முத்துவீரியம்
குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் இலக்கண விளக்கம்
இலக்கண விளக்கச் சூறாவளி எனும் நூலை இயற்றியவர் சிவஞான முனிவர்
பாலபோத இலக்கணம் எழுதியவர் - ஆறுமுகநாவலர்
தொல்காப்பியப் பாயிர விருத்தியுரை எழுதியவர் - சிவஞானமுனிவர்
பொருளதிகாரத்தின் செய்யுளியலையாப்பதிகாரமெனப் பிறர் கூறுவர் என்று கூறியவர் பேராசிரியர்
தண்டபாணி சுவாமிகளின் ஏழாம் இலக்கணத்தின் ஏழாவது பகுதியில் அதிகம் பேசுப்படும் இலக்கணம் சொல்லிலக்கணம்
உவமையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எழுந்த அணி நூல் உவமானசங்கிரகம்
நன்னூலுக்குக் கிடைக்கக் கூடிய உரைகளில் பழமையானது - மயிலைநாதர் உரை
தொல்காப்பியத்தின் எந்த இலக்கணப் பகுதி பிற்கால பிரபந்தங்களின் அதிகமான தோற்றக் கூறினைப் பெற்றுவிளங்குகிறது - புறத்திணையியல்
அநியாய கண்டனம் என்றழைக்கப்படும் நூல் - இலக்கண விளக்கச் சூறாவளி
தொல்காப்பியம் குறிப்பிடும் பொருள்கோள் வகை - 4
நன்னூல் குறிப்பிடும் பொருள்கோள் வகை  - 8
தமிழில் முதலில் தோன்றிய இலக்கண உரை - இறையனார் களவியல் உரை
தமிழில் தோன்றிய முதல் ஐந்திலக்கண நூல் - வீரசோழியம்
பெரும்பான்மை இலக்கணிகளால் ஆறாம் இலக்கணமாகக் கருதப்படுவது பாட்டியல்

வச்சநந்திமாலை என்றழைக்கப்படும் பாட்டியல் நூல் - வெண்பாப்பாட்டியல்
முத்துவீரியத்திற்கு உரை எழுதியவர் - திருப்பாற்கடல்நாதன்
தொல்காப்பிய சொல்லதிகாரத்திற்குக் கிடைத்துள்ள உரைகளின் எண்ணிக்கை - 6
கலித்துறைப் பாட்டியல் என்றழைக்கப்படும் நூல் - நவநீதப்பாட்டியல்
பிள்ளைக் கவி முதல் புராணம் ஈறாக என பிரபந்தம் 96 எனச் சுட்டும் நூல் - பிரபந்த மரபியல்
அந்தாதித் தொடையால் அமையும் இலக்கண நூல் - சுவாமிநாதம்
எண்வகை வனப்பு எனும் சொல்லை முதலில் கூறிய நூல் யாப்பருங்கலவிருத்தியுரை
தொல்காப்பியர் குறிப்பிடும் கலிப்பாவின் வகை - 4
தொல்காப்பிய உவமையியலை அணி என்று கூறுவது தவறு என்ற உரையாசிரியர் பேராசிரியர்
சிறுபொழுது ஐந்து என்று கூறும் நூல் -
கவிக்கூற்றைத் துறை என்று கூறிய நூல் -

நம்பியகப்பொருள்
எந்நூலைத் தழுவி நம்பியகப் பொருள் இயற்றப்பட்டது - தொல்காப்பியம்
நாற்கவிராச நம்பி யாருடைய மகன் - உய்யவந்தான்
நாற்கவிராசரின் சமயம் - சமணம்
நம்பியகப் பொருள் யாருடைய அவையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது - பாண்டிய குலசேகரன் (கி.பி.14)
நம்பியகப்பொருள் கூறும் கருப்பொருள்கள் - 14
பெரும்பொழுது வகை - 6
சிறுபொழுது வகை - 6
கைக்கிளைக்குரிய உரிவர்கள்  -
அவத்தைகள் மொத்தம் - 10
வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவிற்குரிய காலம் - 2 மாதம்
கற்பின் வகை - 2
ஊடலைத் தணிக்கும் வாயில்கள் எத்தனை - 13
காவல் பிரிவின் வகை - 2
நாடு காவல் யார்க்கு உரியது - அரசர்
மடலேறுதல் யாருக்கு உரியது - தலைவன்
இடந்தலைப் பாட்டின் வகை - 3
பாங்கற் கூட்டத்தின் வகை - 7
பாங்கிமதி உடன்பாட்டின் வகை - 3
பாங்கியிற் கூட்டம் வகை - 12
பகற்குறியின் வகை - 4
ஒருசார் பகற்குறியின் வகை - 3
பகற்குறியிடையீட்டின் வகை - 3
இரவுக்குறியின் வகை - 9
இரவுக்குறியிடையீட்டின் வகை - 2
களவிற்குரிய கிளவித் தொகை எத்தனை - 17
கைக்கிளை எத்தனை வகை - 4
அறத்தொடு நிலை என்பதற்குக் களவியற் காரிகை அமைத்திருக்கும் துறை வெளிப்படைநிலை
நம்பியகப் பொருள் விளக்கம் கூறும் கிளவித்தொகைகள் - 425
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் துறைகள் - 332
புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் திணைகள் - 12
தொல்காப்பியரின் மெய்ப்பாடு

நகை -  எள்ளல், இளமை, பேதமை, மடமை
அழுகை - இளிவு, இழவு, அசைவு,
இளிவரல் - மூப்பு, பிணி, வருத்தம் மென்மை
மருட்கை - புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்
அச்சம் - அணங்கு, விலங்கு, கள்வர், இறை
பெருமிதம் - கல்வி, தறுகண், இசைமை, கொடை
வெகுளி -  உறுப்பறை, குடிகோள், அலை, கொலை
உவகை - செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு

மாறன் பாப்பாவினத்தில் எத்தனைப் பரிபாடல்கள் இடம்பெற்றுள்ளன - 4
பக்தி இலக்கியம்
ஒன்பதாம் திருமுறையின் பிரிவுகள் இரண்டு - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
ஒன்பதின்மர் பாடியவை - திருவிசைப்பா
சேந்தனார் மட்டும் பாடியது - திருப்பல்லாண்டு
திருமாளிகைத் தேவர் பாடிய பதிகங்கள் - 4
சேந்தனார் பாடிய பதிகங்கள்  4 திருவிசைப்பா 3, திருப்பல்லாண்டு முழுமை
மின்னாருருவம் பாடியவர் - கண்டராதித்தர்
பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ள நூல்கள் - 39
பிள்ளை பாதி புராணம் பாதி என்று குறிப்பிடுவதில் பிள்ளை - திருஞானசம்பந்தர், புராணம் - பெரியபுராணம்
முதல் அந்தாதி நூல் - அற்புதத் திருவந்தாதி - காரைக்காலம்மையார்
முதல் உலா - திருக்கயிலாய ஞானஉலா -
முதல் பள்ளு - முக்கூடற்பள்ளு, திருவாரூர் பள்ளு
முதல் தூது - நெஞ்சு விடுதூது - உமாபதி சிவாச்சாரியர்
முதல் கலம்பகம் - நந்திக்கலம்பகம்
முதல் பரணி - கலிங்கத்துப்பரணி
முதல் கோவை - திருக்கோவையார்
முக்கூடற் பள்ளு ஆசிரியர் - என்னாயினப் புலவர்
முதல காவடிச் சிந்து - அண்ணாமலை ரெட்டியார் பாடிய காவடிச் சிந்து
தொல்காப்பியம் குறிப்பிடும் ஏரோர் களவழி எதனைக் குறிக்கிறது - பள்ளு
தொல்காப்பியம் குறிப்பிடும் கட்டினும் கழங்கினும் எதனைக் குறிக்கிறது - குறவஞ்சி
சுந்தரர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறையில் பெற்ற இடம் 7ஆம் திருமுறை
ஆழ்வார்களின் பக்தி இயக்க காலம் - கி.பி.700-900
சம்பந்தர் 16000 பதிகங்கள் பாடியுள்ளார் எனக் கூறியவர் - நம்பியாண்டார் நம்பி
பாதாதிசேகமாக அமைந்த பாசுரம் - அமலனாதிபிரான்
எய்தற்கு அறிய மறைகளை இன்தமிழுக்குச் செய்ய தோன்றியவர் - நம்மாழ்வார்
புவியுள் நான் கண்டதோர் அற்புதம் என்று பாடியவர் - பெரியாழ்வார்
பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் இடம்பெற்ற நூல் - திருத்தொடண்டர் திருவந்தாதி
நெக்கு நெக்கு நினைட்பபவர் நெஞ்சுக்குள்ளே இறைவன் புக்கு நிற்பான் எனக் கூறியவர் - அப்பர்
மதுரை மன்னன் வல்லபதேவனிடம் பொற்கிழி பெற்றவர் - பெரியாழ்வார்
பதிக எண், பண்ணின் பெயர், தலப்பெயர் கொண்ட திருமுறை -  ஒன்பதாம் திருமுறை
நாராயணனைப் பாடுவேனேயல்லாமல் நரனைப் பாடேன் என்றவர் - கணிகண்ணன்
கோபப் பிரசாதம் இந்த நூலில் இயன்ற பா - இணைக்குறளாசிரியப்பா
சிவபெருமான் திருவந்தாதி நூலின் ஆசிரியர் - பரணதேவ நாயனார்
ஒன்பதாம் திருமுறையில் Ôகாளரபணியப்பன்Õ பாடியவர் - பூந்துருத்தி காடவ நம்பி
ஆதி சங்கரர் எந்த நூலில் திருஞானசம்பந்தரை திராவிட சிசு என்றழைக்கிறார் - சௌந்தர்ய் லகரி
தமிழ் வியாசர் என்றழைக்கப்படுபவர் யார் - நம்பியாண்டார் நம்பி
வேணாட்டடிகள் பாடிய பாடல்களில் இடம்பெற்ற பண் - புறநீர்மைப்பண்
பழநடை விளக்கம் என்ற மூவாயிரப் படியைப் பதிப்பித்தவர் - பெரியவாச்சான் பிள்ளை
திருநாவுக்கரசரின் இயற்பெயர் - மருள்நீக்கியார்
தேவர் மூவர் தமிழையும் முறையே கொஞ்சு தமிழ், கெஞ்சு தமிழ், மிஞ்சுதமிழ் என்று கூறியவர் - கி.வா.ஜகந்நாதன்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் யார் கூற்று - மாணிக்கவாசகர்
ஞானமளந்த மேன்மைத் தமிழ் என்று கூறியவர் - சேக்கிழார்
திருவாசகத்திற்கு முதன்முதலில் உரை செய்தவர் - கா.சு பிள்ளை
ஆரணம், ஏரணம், காமம், எழுத்து என்றெல்லாம் போற்றப்படும் நூல் திருக்கோவை
முதல் கடித இலக்கியமாகத் திகழும் பக்தி இலக்கியம் - திருமுகப் பாசுரம்
Òஆடிப்பாடி அரங்காவோ என்றழைக்கும் தொண்டரடிப் பொடிÓ எனக் குறிப்பவர் யார் - குலசேகர ஆழ்வார்
நாலாயிர திவ்விய பிரபந்தம் முழுமைக்கும் உரை எழுதியவர் - பெரியவச்சான் பிள்ளை
இன்தமிழ் இயேசு நாதர் என்று அழைக்கப்படுபவர் - சம்பந்தர்
பூந்துருத்தி காடவ நம்பி பாடிய பாடல்களின் எண்ணிக்கை - 12
சம்பந்தர் இறைவனோடு கலந்த ஊர் - திருப்பெருமணநல்லூர்
நம்மாழ்வாரின் சீடர் - மதுரகவி ஆழ்வார்
திராவிட வேதம், திராவிட வேத சாரம், செந்தமிழ் வேதம் - திருவாய்மொழி
திருவிருத்தம் - 100 பாசுரங்கள் - இருக்கு வேதம்
திருவாசிரியம் - 7 பாசுரங்கள் - யசூர் வேதம்
பெரிய திருவந்தாதி - 87 வெண்பாக்கள் - சாம வேதம்
திருவாய்மொழி - 1000 பாசுரங்கள் - அதர்வண வேதம்
திருவாய்மொழிக்கு முதன்முதலில் உரை எழுதியவர் - ஆளவந்தார் என்னும் திருமாலடியார்
திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
சம்பந்தர் பாடிய பதிகங்களின் எண்ணிக்கை - 384
அப்பர் பாடிய பதிகங்களின் எண்ணிக்கை - 307
சுந்தரர் பாடிய பதிகங்களின் எண்ணிக்கை - 100
தாண்டக வேந்தர் என்றழைக்கப்படுபவர் - திருநாவுக்கரசர்
வாசீக முனிவர் இயற்றிய சைவ சித்தாந்த நூல் - ஞானாமிர்தம்
மனோன்மணீயத்தில் இடைக்கதையாக வருவது - சிவகாமியின் சரிதம்
தைரியநாதர் என்றழைக்கப்படுபவர் - வீரமாமுனிவர்
சித்தாந்த சாத்திரம் பதினான்கு இவற்றில் தலைமையானது - சிவஞானபோதம்
நளன் கதை மகாபாரதத்தில் எந்தப் பருவத்தில் இடம்பெறுகிறது - ஆரணிப் பருவம்
முதல் பள்ளு நூல் - திருவாரூர் பள்ளு
நீலகேசியின் வேறுபெயர் - நீலகேசி தெருட்டு
சேக்கிழாருக்கு குலோத்துங்கள் அளித்த பட்டம் - உத்தம சோழப் பல்லவராயன்
தொண்டர் சீர் பரவுவார் என்று பாராட்டப்படுபவர் - சேக்கிழார்
வைணவக் காப்பியம் என்றழைக்கப்படுவது - வில்லிபாரதம்
பிரபந்த வேந்தர் என்று சிறப்பிக்கப் படுபவர் - குமரகுருபரர்
வடமொழி பாகவதத்தைத் தமிழில் மொழிப்பெயர்த்தவர் - செவ்வைச் சூடுவார்
தேசிய காப்பியம் என்றழைக்கப்படுவது - பெரியபுராணம்
பதிகம் என்ற அமைப்பு முறை முதன்முதலில் கையாண்ட இலக்கியம் - பதிற்றுப்பத்து
கிரௌரவ ஆகம பாவ விமோசன படலத்தின் மொழிபெயர்ப்பு - சிவஞானபோதம்
சிவஞானபோதம் மொழிபெயர்ப்பு நூல் அன்று என்று கூறியவர் - சதாசிவப் பண்டாரத்தார்
சிவஞான போதத்திற்கு உரை - சிவஞான மாபாடியம்
வைணவ குலபதி என்று சிறப்பிக்கப்படுபவர் - நம்மாழ்வார்
திராவிட சிசு என்று அழைக்கப்படுபவர் - திருஞானசம்பந்தர்
திராவிட சிசு என்று திருஞானசம்பந்தரை அழைத்தவர் - ஆதிசங்கரர்
ஆளுடைய நம்பி என்றழைக்கப்படுபவர் - சுந்தரர்

சாகித்திய அகாதமி விருதுபெற்ற தமிழ் நூல்கள்
1955 - தமிழ் இன்பம் (கட்டுரை) - ரா.பி.சேதுபிள்ளை
1956 - அலை ஓசை (நாவல் ) - கல்கி
1958 - சக்கரவர்த்தி திருமகன் (இராமயாணக் கதை) - சி.ராஜகோபாலாச்சாரி
1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசன்
1962 - அக்கரைச் சீமையில் (பயணம்) - மீ.ப.சோமு
1963 - வேங்கையின் மைந்தன் (நாவல்) - அகிலன்
1965 - ஸ்ரீராமாநுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி.ஸ்ரீ.ஆச்சாரியா
1966 - வள்ளாலர் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) - ம.பொ.சிவஞானம்
1967 - வீரர் உலகம் (கட்டு¬) - கி.வா.ஜகன்னாதன்
1968 - வெள்ளைப் பறவை கவிதை - அ.சீனிவாச ராகவன்
1969 - பிசிராந்தையர் (நாடகம்) - பாரதிதாசன்
1970 - அன்பளிப்பு (சிறுகதை)  - கு.அழகிரிசாமி
1971 - சமுதாய வீதி (நாவல்) - நா.பார்த்தசாரதி
1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன்
1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்
1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - க.த.திருநாவுக்கரசு
1975 - தற்காலத் தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - இரா. தண்டாயுதம்
1977 - குருதிப் புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி
1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன்
1979 - சக்தி வைத்தியம் (சிறுகதை) - தி.ஜானகிராமன்
1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்
1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - மா.ராமலிங்கம்
1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) - பி.எஸ்.ராமையா
1983 - பாரதி காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) - தொ.மு.சி.ரகுநாதன்
1984 - ஒரு காவிரியைப் போல (நாவல்) - லட்சுமி திரிபுரசுந்தரி
1985 - கம்பர் புதிய பார்வை (திறனாய்வு) - அ.ச.ஞானசம்பந்தன்
1986 - இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (திறனாய்வு) - க.நா.சுப்பிரமணியம்
1987 - இரவுக்கு முன் வருவது மாலை (சிறுகதை) - ஆதவன்
1988 - வாழும் வள்ளுவம் (திறனாய்வு) - வா.செ.குழந்தைசாமி
1989 - சிந்தா நதி (தன் வரலாறு) - லா.ச.ராமாமிருதம்
1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு.சமுத்திரம்
1991 - கோபல்லபுரத்து மக்கள் (நாவல்) - கி.இராஜாநாரயணன்
1992 - குற்றாலக்குறவஞ்சி (வராற்று நாவல்) - கோ.வி.மணிசேகரன்
1993 - காசுதுகள் (நாவல்) - எம்.வி.வெங்கட்ராம்
1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன்
1995 - வானம் வசப்படும் (நாவல்)  - பிரபஞ்சன்
1996 -  அப்பாவின் சினேகிதர் (நாவல்) - அசோகமித்திரன்
1997 - சாய்வுநாற்காலி (சிறுகதை) - தோப்பில் முகமது மீரான்
1998 - விசாரணைக் கமிஷன் (நாவல்) - சா.கந்தசாமி
1999 - ஆலாபனை - அப்துல்ரகுமான்
1999 - ஏழு கார்ட்டுன்களும் ஒரு வண்ண ஓவியமும் - தமிழ்நாடன்
2000 - விமர்சனங்கள் - சிவசங்கரன்
2000 - அக்கினிசாட்சி (மொழிபெயர்ப்பு) - சிற்பி பாலசுப்பிரமணியம்
2001 - சுதந்தர தாகம் (நாவல்) - சி.சு.செல்லப்பா
2002 - கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து
2003 - ஒரு கிராமத்து நதி - சிற்பி பாலசுப்பிரமணியம்
2004 - வணக்கம் வள்ளுவ (கவிதை) - ஈரோடு தமிழன்பன்
2005 - கல்மரம் (நாவல்) - திலகவதி
2006 - ஆகாயத்து அடுத்த வீடு (கவிதை) - மு.மேத்தா
2007 - இலையுதிர்காலம் (நாவல்) - நீல.பத்மநாபன்
2008 - மின்னல் பூ (சிறுகதை) - மேலாண்மை பொன்னுசாமி
2009 - கையொப்பம் (கவிதை) - புவியரசு
2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதை) - நாஞ்சில்நாடன்
2011 - காவல் கோட்டம் (நாவல்) - சு.வெங்கடேசன்
1976ஆம் ஆண்டு ஞானபீட விருது - அகிலன் (சித்திரப்பாவை)
1975ஆம் ஆண்டு ஞானபீட விருது - கா.மீனாட்சிசுந்தரனார் (எங்கே போகிறோம்)
முதன்முதலில் இராசராச விருது பெற்றவர் - சுத்தானந்த பாரதி
தசரதனின் குறையும் கைகேயின் நிறையும் - சோமசுந்தர பாரதி
கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும் - பா.வே.மாணிக் நாயக்கர்
ஆடும் மாடும் நூலின் ஆசிரியர் - டி.கே.சீனிவாசன்
திருமுறைகளைத் தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி
நாலாயிர பாசுரங்களைத் தொகுத்தவர் - நாதமுனிகள்
வையாபுரிப்பிள்ளையின் எழுதிய நாவல் - ராஜீ
வையாபுரிப்பிள்ளையின் சிறுகதை தொகுப்பு - சிறுகதை மஞ்சரி
காஞ்சி புராணம் - சிவஞான முனிவர்
சிலம்பும் மேகலையும் - மார்க்கபந்து சர்மா
கானல் வரி - தெ.பொ.மீ
உரைநடைக் கோவை எழுதியவர் - கதிரேசச் செட்டியார்
வேத விற்பன்னர் என்றழைக்கப்படுபவர் - கால்டுவெல்
அகராதியின் தந்தை எனப் போற்றப்படுபவர் - வீரமாமுனிவர்
வாழ்க்கை வரலாற்று  இலக்கிய வகைக்கு முன்னோடி - எல்லீஸ் (வீரமாமுனிவர் வாழ்க்கை)

தமிழ் நாடகப் பேராசிரியர் என்று பாராட்டப்படுபவர் - பம்மல் சம்பந்த முதலியார்
தமிழ் உரைநடைத் தந்தை - வீரமாமுனிவர்
தமிழ் மூவாயிரம் என்று கூறப்படுவது - திருமந்திரம்
சங்க இலக்கியக் குழுவிற்கு ஒரு செவிலி என்று 17ஆம் நூற்றாண்டில் பாராட்டப் பெற்றவர் சிவப்பிரகாசர்
காமஞ்சான்ற ஞானப் பனுவல் - திருக்கோவையார்
சேர அரசனாக இருந்த ஆழ்வார் -¢ குலசேகர ஆழ்வார்
அந்தணர் ஆரணம் என்றழைப்பது - திருக்கோவையார்
பாஞ்ச சன்னியத்தின் அவதாரம் - பொய்கையாழ்வார்
கதாயுத அம்சம் - பூதத்தாழ்வார்
கருட அம்சம் - மதுரகவியாழ்வார்
கருக்கிடை அறுநூறு நூல் - திருமந்திரம்
ஞானப் பொருளைக் காளையாகக் கட்டி ஏர் உழுவதாக உருவகப்படுத்தும் சித்தர் கானைச்சித்தர்
சக்தியை வாலைப் பெண்ணாக உருவகித்தவர் - கருவூரார்
தஞ்சையில் இராசராசன் கட்டிய கோவில் சிவலிங்கத்தை நிறுவிய சித்தர் கருவூரார்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதிக அளவில் எழுந்த இலக்கிய வகை - பதிகம் (1237)
இறைவனைச் சிக்கெனப் பிடித்தவர் - மாணிக்கவாசகர்
திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் - நம்மாழ்வார்
திருமணம் ஆகும் முன்பே கைம்மை நோன்பு கொண்டு சிவத்தொண்டு செய்தவர் - திலகவதியார்

நாட்டுப்புறவியல்
நாட்டுப்புறவியலுக்கு யீஷீறீளீ றீஷீக்ஷீமீ எனப் பெயர் கொடுக்கப்பட்ட ஆண்டு - 1864
நாட்டுப்புறவியலுக்கு யீஷீறீளீ றீஷீக்ஷீமீ எனப் பெயர் கொடுத்தவர் - வில்லியம் ஜான்தாமஸ்
மலையருவி தொகுதி வெளியிட்டவர் - கி.வா.ஜகந்நாதன்
தமிழக நாட்டுப் பாடல்கள் - மு.வை.அரவிந்தன்
தாலாட்டு இலக்கியம் - அருணாசலம்
நாட்டுப்புறப்பாடல்கள், திறனாய்வு - ஆறு. அழகப்பன்
ஏட்டில் எழுதாக் கவிதைகள் - செ.அன்னகாமு
நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம் - தே.லூர்து
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் - தே.லூர்து
முதன்முதலில் 1947 நாட்டுப் பாடல் என்னும் சொல்லாட்சியைப் பயன்படுத்தியவர் ஆ.முத்துசிவம்
பிசி என்பது விடுகதை
நாட்டுப்புற இயல் ஆய்வில் முன்னணியில் உள்ள நாடு - அமெரிக்கா
மொழியரசி என்ற நூல் எழுதியவர் - கரந்தை வேங்கடாசலனார்
பெண்ணறிவு பாடியவர் சி.சுப்பிரமணிய பாரதியார்
தமிழ்க் கலை பாடியவர் நாமக்கல் வெ.இராமலிங்கப் பிள்ளை
நாவல்
முதல்தமிழ் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம் - வேதநாயகம் பிள்ளை - 1879
முதல் இந்திய நாவல் - துர்கேச நந்திதி - பங்கிம் சந்திர சட்டர்ஜி  1865
ரப்பர் - ஜெயமோகன்
காடு - ஜெயமோகன்
ஏழாம் உலகம் - ஜெயமோகன்
ஜய ஜய சங்கரா - ஜெயகாந்தன்
சிலந்தி - எம்.ஜி.சுரேஷ்
ஆண்கள், பெண்கள் குழந்தைகள் - சுந்தர ராமசாமி
ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
கள்ளோ காவியேமா நாவலின் ஆசிரியர் - மு.வரதராசனார்
ரங்கம்மாள் நினைவுப் பரிசு பெற்றுள்ள நாவல் - ஒருநதி ஓடிக் கொண்டிருக்கிறது
ஒருநதி ஓடிக் கொண்டிருக்கிறது - வட்டார நாவல் - வே.சபாநாயகம்
ஏறுவெயில் - பெருமாள் முருகன்
நாஞ்சில் நாடன் - மிதவை, தலைகீழ் விகிதங்கள், சதுரங்கக் குதிரை ஆகியவை இவர் புதினங்கள்
குட்டி நாவலுக்கு வழிகாட்டி - ஜெயகாந்தன்
ஜெய ஜெய சங்கர - ஜெயகாந்தன்
தொடர்கதையாக வெளிவந்த முதல் நாவல் - கமலாம்பாள் சரித்திரம்
தகப்பன் கொடி - அழகிய பெரியவன்

சிறுகதை
சிறுகதையின் திருமூலர் என்றழைக்கப்படுபவர் - மௌனி
தமிழில் வெளிவந்த முதல் புதுக்கவிதைத் தொகுதி -
காங்கிரஸ் புலவர் என்று பாராட்டப்படுபவர் - நாமக்கல் கவிஞர்
தமிழ்நாட்டுத் தாகூர் எனச் சிறப்பிக்கப்படும் கவிஞர் - வாணிதாசன்
முதன்முதலில் பாவேந்தர் விருது பெற்றவர் - சுரதா
பாரதிதாசன் பாட்டும் இனிக்கும் என்று கூறியவர் - திரு.வி.க
நான் கண்டதும் கேட்டதும் என்ற நூலின் ஆசிரியர் - உ.வே.சா
இலக்கியமும் திறனாய்வும் என்ற நூலின் ஆசிரியர் - கைலாசபதி
சிறகுகள் முறியும் என்ற சிறுகதையை எழுதியவர் - அம்மை
சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
அசலும் நகையும் என்ற நூலின் ஆசிரியர் - ஆ.முச்சிவன்
அனிச்ச அடி என்ற நாடகத்தை எழுதியவர் - அ.பழநி
நவீன கவிஞர்  -
உவமைக் கவிஞர் - சுரதா
குழந்தைக் கவிஞர் - அழ. வள்ளிளயப்பா
சிலம்புச் செல்வர் - ம.பொ.சிவஞானம்
நடந்து செல்லும் நீருற்று - எஸ்.ராமகிருஷ்ணன்
உலகம் சுற்றும் தமிழன் என்றழைக்கப்படுபவர் - ஏ.கே.செட்டியார்
பர்மாவின் வழிநடை பயணம் என்ற நூலின் ஆசிரியர் - வெ.சாமிநாத சர்மா
இளிச்சவாயன் என்ற நூலை மொழிபெயர்த்தவர் - சுத்தானந்த பாரதியார்
சங்கப் பாடல்கள் பலவற்றுக்கு உரை எழுதியவர் - நச்சினார்க்கினியர்
போற்ற ஒழுக்கம் புரிந்தீர் எவர் கூற்று -
ஏழிசையாய் இசைப்பயனாய் உள்ளவன் -
தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - இலக்குவனார்
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே எனக் கூறியவர்
எழுத்து இதழை நடத்தியவர் - சி.சு.செல்லப்பா
தமிழ்ச் சுவடிகளின் பதிப்பு முன்னோடி - சி.வை.தாமோதரம் பிள்ளை
ஒரு கிராமத்து நதி - சிற்பி
சேரமான் காதலி - கண்ணதாசன்

நாடகம்
தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்ற நூல் - மனோன்மணீயம்
தமிழ்த்தாய் வாழ்த்து எந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது - 1970 ஜூன்

கவிதைகள்
முதல் புதுக்கவிதை தொகுப்பு - புதுக்குரல்கள்
நையாண்டி பாரதி - வல்லிக்கண்ணன்
புதுக்கவிதைப் புரவலர் - சி.சு.செல்லப்பா
கனவு+கற்பனைகள்= காகிதங்கள் - மீரா
கவிதையின் திருமூலர் - நகுலன்
அபியின் முதல் கவிதைத் தொகுப்பு - மௌனத்தின் நாவுகள்
நடுநிசி நாய்கள் - பசுவய்யா (சுந்தரராமசாமி)
தமிழ் நாட்டின் Ôகிர சூல் கம்ச தோங்Õ - பாரதிதாசன்
கரிச்சான் குஞ்சு என்னும் புனைபெயரில் எழுதியவர் - நாராயணசாமி
புதுக்கவிதையில் குறியீடு என்ற நூலை எழுதியவர் - அப்துல் ரகுமான்
மு.மேத்தா படைப்புகள்
ஊர்வலம், அவர்கள் வருகிறார்கள், ஒரு வானம் இரு சிறகு, கம்பன் கவியரங்கில், கனவுக் குதிரைகள், கண்ணீர்ப் பூக்கள்
ஈரோடு தமிழன்பன் படைப்புகள்
இரவுப் பாடகன், சென்னிமலை கிளியோபாட்ராக்கள், மின்மினிக்காடு, தமிழோவியம், ஒரு வண்டி சென்ரியு, தோணி வருகிறது, சூரிய பிறைகள், திசைக்குள் திசைகள், வணக்கம் வள்ளுவ, தீவுகள் கரையேறுகின்றன
அப்துல் ரகுமான் படைப்புகள்
மகரந்த சிறகு, பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை, சுட்டுவிரல்
நா.காமராசன் படைப்புகள்
நீலப்புடவைக்காரி, முகங்கள், பட்டத்து யானை, சூரிய காந்தி, கறுப்பு மலர்கள், சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், கிறுக்கல்கள், நாவல்பழம், தாஜ்மஹாலும் ரொட்டித்துண்டும்
வைரமுத்து படைப்புகள்
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, தண்ணீர்தேசம், கவிராஜன் கதை, கொடி மரத்தின் வேர்கள், இன்னொரு தேசிய கீதம், இதுவரை நான், திருத்தி எழுதிய தீர்ப்புகள்
பச்சை தேவதை, ஒருமாலையும் இன்னொரு மாலையும் எழுதியவர் - சல்மா
முலைகள், தனிமையின் ஆயிரம் இறக்கைகள் - குட்டிரேவதி
நீலி, மரமல்லிகைகள், நீரின்றி யமையாது உலகு, சங்காராபரணம் - மாலதி மைத்ரி
அகத்திணை - கனிமொழி
கைப்பற்றி என் கனவுசேர் - சுகிர்தராணி
வனம்புகுதல், அனிச்சம் - கலாப்பிரியா
தெம்பக்கட்டை, மனப்பத்தாயம் எழுதியவர் - யுகபாரதி
நட்புக்காலம், ஆயுளின் அந்திவரை - அறிவுமதி
வெளிநடப்பு கவிதை தொகுப்பு - பழனிபாரதி
முதல் அத்தியாயம் - சினேகன்
ஒவ்வொரு புல்லையும் - இன்குலாப்
உடைந்த நிலாக்கள் - பா.விஜய்
ஒளிப்பறவை - சிற்பி பாலசுப்பிரமணியம்
இரு நீண்ட கவிதைகள் - நகுலன்
அண்ணாவின் நாடகங்கள்
கண்ணீர்த்துளி, வேலைக்காரி, ஓர் இரவு, சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம்,


பி.எஸ்.ராமையா நாடகங்கள்
மல்லியம் மங்களம், போலீஸ்காரன், தேரோட்டி மகன், பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், கைவிளக்கு
மு.கருணாநிதி நாடகங்கள்
பூம்புகார், மந்திரிகுமாரி, மணிமகுடம்
முத்தமிழ் பற்றி கூறும் முதல் நூல் - பரிபாடல்
தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னன் பொருப்பன் என்ற அடிகள் பயிலும் நூல் - பரிபாடல்
ராஜராஜேஸ்வர விஜயம் இராசராசன் காலத்தில் நடைபெற்றதைத் தெரிவிக்கும் கல்வெட்டு - பந்தனை நல்லூர்க் கோயிற் கல்வெட்டு
கமலாலயப்பட்டர் பூம்புலியூர் நாடகம் நடித்து இறையிலி பெற்றச் செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டு - தென்னார்க்காட்டுக் கல்வெட்டு
முதன்முதலில் மேடையில் நடிக்கப்பெற்ற சமூகநாடகம்  - டம்பாச்சாரி நாடகம் (1867)
உரைநடையில் அமைந்த முதல் தமிழ் நாடகம் - பிரதாப சந்திர விலாசம் (1882) - திண்டிவனம் ராமசாமி ராஜா
சுகுண விலாச சபை என்ற அமைச்சூர் நாடக மன்றத்தை நிறுவியவர் - பம்மல்சம்பந்த முதலியார் (1891)
சமரச சன்மார்க்க நாடக சபை நிறுவியவர் - சங்கரதாஸ் சுவாமிகள்
பாலமனோகர சபா நிறுவியவர் - சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர்

மொழியியல்
கர்நாடகம் என்பதைத் திராவிடச்  சொல்லாகக் கூறியவர் - குண்டர்ட்
துளு மொழிக்கு இலக்கணம் எழுதியவர் - பிரிகல்
துளு மொழியில் ஆய்வுகளை நடத்தியவர் - எல்லி.இராமசாமி ஐயர்
படகர் கன்னடத்துடன் தொடர்புடையது என்றவர் - எமனோ
கன்னடத்தின் வட்டார வழக்கு - கௌட கன்னம்
கன்னட மொழியின் பேச்சு வழக்கை ஆராய்ந்தவர் - வில்லியம் பிரைட்
கன்னட மொழியின் ஒலியன்கள் பற்றி ஆராய்ந்தவர் - பிலஹரி
கன்னட மொழியில் ஆய்வுகளை அதிகளவில் செய்தவர் - ஏ.எஸ்.ஆச்சார்யா
துளுவைத் தென் திராவிட மொழியில் கொள்வது ஏற்புடையது என்றவர் - பி.சுப்பிரமணியன்
துளுமொழியைத் தனிமொழி என்று சுட்டிக் காட்டியவர் - ராபர்ஸ்
திராவிடம் என்ற சொல்லே தமிழ் என் வழங்கியது என்றவர் - கால்டுவெல்
திராவிட மொழிகள் 14 என்று கூறியவர் - கிரியர்சன்
திருந்தாத மொழிகளின் தன்மைகளை ஆராய்ந்தவர் - தாமஸ் பரோ
கன்னட மொழியின் நான்கு வட்டார வழக்குகளை ஒப்பிட்டு ஆராய்ந்தவர் - உபாத்தியாயா (1968)
தோடா மொழியைச் சிறப்பாக ஆராய்ந்தவர் - எமனோ
தோடா, கன்னட மொழியின் கொச்சை மொழி போன்றது என்றவர் - கால்டுவெல்
தோடா மொழி பேசும் மக்களின் தொகையாகக் கால்டுவெல் கூறுவது - 900
தோடாமொழியைத் தனிமொழி என்று நிறுவியர் - எமனோ
தோடர் பற்றி விரிவான நூல் செய்தவர் - கொலோனல் மார்ஷல்
தோடா மக்களையும் மொழியையும் எமனோ ஆராய்வதற்கு எடுத்துக்கொண்ட காலம் - 3 ஆண்டுகள் (1935-1938)
தென்னிந்திய மொழிகளை நிஹத மொழிகள் என்று பெயரிட்டு அழைத்தவர் - மாக்ஸ்முல்லர்
தமிழின் கிளைமொழிகள் பற்றி ஆராய்ந்தவர் - கமில் சுவலபில்
இக்கால மொழியியலின் தந்தை - புளூம்ஃபில்டு
தோடாவைத் திராவிட மொழிக் குடும்பத்தோடு தொடர்புடையது என்றவர் - பெர்னாட் ஸ்கிமிட் (1837)
கூயி மொழிக்கு இலக்கணம் எழுதியவர் - வின்ஃபீல்டு
விளக்க மொழியியலின் தந்தை - புளூம்ஃபில்டு
சீனமொழி ஆரிய மொழி இரண்டையும் ஒப்பிட்டு உறவுடையது என்று கூறியவர் - குஸ்தர் ஷ்லேகெல்
திராவிட மொழிகள் ஆசிரிய மொழிகளோடு நெருங்கிய உறவு உடையன எனக் கூறியவர் - ஜி.யு.போப்
தனிநிலை மொழிகளே மிகச் சிறந்தவை என்று கூறியவர் - யெஸ்பர்ஸன்
ஐரோப்பாவில் பின்லண்டு முதல் கிழக்கே ரஷ்யா வரையில் வழங்கும் மொழிகள் - சித்திய மெழிகள்
துருக்கியிலிருந்து ரஷ்யா வரையில் உள்ள நாடுகளில் வழங்கும் மொழிகள் - துரானிய மொழிகள்
மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் பேசும் மொழியின் வளர்ச்சிக்கும் தொடர்பு உண்டு என்று ஆராய்ந்தவர் - மீடர்
தனிநிலை மொழி, ஒட்டுநிலை, உட்பிணைப்பு நிலை என்று மொழியைப் பாகுபாடு செய்தவர் - மாக்ஸ்முல்லர்
பேச்சு வாக்கியம் சராசரி மூன்றரைச் சொற்களும் எழுத்து வாக்கியம் சராசரி ஆறரைச் சொற்களும் உடையது என்று கூறியர் - மீடர்
நாட்டுப்புற மக்களின் பேச்சில் இலக்கணம் கடுமையாக உள்ளது என்று கூறியவர் - வெண்டரியே
செக் நாட்டு தமிழறிஞர் - கமில் சுவலபில்
வல்லொலி, மெல்லொலி மாற்றம் தமிழுக்குரிய சிறப்பு விதி என்றவர் - நோரிஸ் (1853)
பதிப்புகள்
முதல் சங்க இலக்கியப் பதிப்பு - கலித்தொகை பதிப்பிக்கப்பட்ட ஆண்டு - 1887 - பதிப்பித்தவர் - சி.வை.தாமோதரம் பிள்ளை
பத்துப்பாட்டு - 1889 - உ.வே.சா.
சிலப்பதிகாரம் - 1891 - உ.வே.சா.
மணிமேகலை - 1894 - திருமயிலை சண்முகம் பிள்ளை
முதன்முதலில் குறுந்தொகையைச் சௌரி பெருமாள் அரங்கன் பதிப்பித்த ஆண்டு - 1915
முதன்முதலில் நற்றிணையைப் பின்னத்தூர் நாராயணசாமி பதிப்பித்த ஆண்டு - 1914
ஐங்குறுநூறு - 1903 - உ.வே.சா.
தம்பிரான் வணக்கம் என்னும் நூல் வெளிவந்த ஆண்டு - 1577
உண்மை ஒளி என்னும் உரைநடை நூலை எழுதியவர் - திரு.வி.க.
கருணாமிருத சாகரம் இயற்றியவர் - ஆபிரகாம் பண்டிதர்
அழகர் கிள்ளை விடுதூது பாடியவர் - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
கி.பி.470இல் மதுரையில் சங்கம் அமைத்தவர் - வத்திரநந்தி
தமிழைப் பக்தியின் மொழி என்று கூறியவர் தனிநாயகம் அடிகள்
மதங்கு என்னும் உறுப்பு இடம்பெறும் சிற்றிலக்கியம் - கலம்பகம்
நினைத்தவுடனே கவிபாடும் ஆற்றல் பெற்றவர் ஆசுகவி
கலித்தொகை அனந்தாமையர் பதிப்பித்த ஆண்டு - 1925
பிற கோவை நூல்களில் குறிப்பிடாத துறை அம்பிகாபதி கோவை குறிப்பிடுவது - துறவறம்
அறப்பளீசுர சதகம் - அம்பலவாண கவிராயர்
குமரேச சதகம் - குருபாத தாசர்
திருவேங்கட சதகம் - நாராயண பாரதி
எம்பிரான் சதகம் - கோபாலகிருஷ்ண தாசர்
திருக்கோவையாரில் அமைந்துள்ள கிளவித் தொகைகள் - 25
திருவருட்பாவின் திருமுறை எண்ணிக்கை - 6
உமர்கயாம் கவிதை நூலைத் தமிழக்கித் தந்தவர் - கவிமணி
திருவாய்மொழிக்கு முப்பத்தாயிரப்படி உரை எழுதியவர் - பெரியவாச்சான் பிள்ளை
சமய சமரச கீர்த்தனை பாடியவர் - வேதநாயகம் பிள்ளை
தமிழ் வரிவடிவத்தில் மாற்றம் செய்த முதல் வெளிநாட்டவர்  - வீரமாமுனிவர்
நான் ஒரு தமிழ் மாணவன் எனத் தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் - ஜி.யு.போப்
மனுமுறை கண்ட வாசகம் என்னும் உரைநடை நூலின் ஆசிரியர் - இராமலிங்க அடிகளார்
லிட்டன் பிரபுவின் ரகசிய வழி என்னும் படைப்பைத் தழுவி தமிழில் வெளிவந்த கவிதை நாடகம் - மனோன்மணீயம்
மனோகரா என்னும் நாடகத்தின் ஆசிரியர் - பம்மல் சம்பந்த முதலியார்
சுதந்திரப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கல்கி நாவல் - அலையோசை
கலம்பகத்தின் உறுப்புகள் எத்தனை - 18
தமிழின் முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியம்  -  குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ்
மருமக்கள் வழி மான்மியம் என்னும் நூலின் ஆசிரியர் - கவிமணி
காந்தி மகான் கதையைப் பாடலாக எழுதிப் பாடியவர் - கொத்தமங்கலம் சுப்பு
இறைவனுக்குப் பிள்ளைக்கறி சமைத்துக் கொடுத்தவர் - சிறுத்தொண்டர்
தமிழ்நாட்டில் முதல்முதலில் அச்சு இயந்திரம் நிறுவப் பெற்ற இடம் - தரங்கம்பாடி
மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்தப் பிறக்கும் எழுத்து - வ
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத் தந்தை எனப்படுபவர் - கால்டுவெல்
சால, உறு, தவ, நனி என்பவை  - உரிச்சொல்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடி இடம் பெற்ற நூல் - திருமந்திரம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற அடி இடம்பெற்ற நூல் -
என் கதை என்ற சுயசரிதை எழுதியவர் - நாமக்கல் கவிஞர்
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்து
அமிழ்தம் என்றாலும் வேண்டேன் என்ற அடிகள் இடம்பெற்ற நூல் தமிழ்விடுதூது
தமிழுக்குக் கதி எனப் போற்றப் பெறுபவர்கள் - கம்பர், திருவள்ளுவர்
தமிழுக்குக் கதி கம்பரும், திருவள்ளுவரும் என்று கூறியவர் - திருமண செல்வகேசவராய முதலியார்
கிராம ஊழியன் என்ற இதழை நடத்திவர் - கு.ப.ராஜகோபாலன்
வசை பாடுவதில் காளமேகத்திற்கு  நிகரான முகமதியப் புலவர் -
தேசபக்தன், நவசக்தி பத்திரிகைகளின் ஆசிரியர் - திரு.வி.க
பாரதியார் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய இதழ் - சுதேசமித்திரன்
தமிழ்நாட்டின் வால்டர்ஸ்காட் எனப் பாராட்டப் பட்டவர் - கல்கி
பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் முதல் நாவல் - பார்வதி பி.ஏ
தமிழ் சிறுகதையின் தந்தை - வ.வே.சு.ஐயர்
காட்டு வாத்து என்ற புதுக்கவிதையில் ஆசிரியர் - ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தியின் புனைபெயர் -
க.நா.சுப்பிரமணியத்தின் புனைபெயர் - மயன்
சுந்தர ராமசாமியின் புனைபெயர் - பசுவய்யா
கொந்தார் குழல் மணிமேலை நூல்நுட்பம்
கொள்வது எங்ஙனம் என்று கூறியவர் - சிவப்பிரகாச சுவாமிகள்
தோலாமொழித்தேவர் என்பதற்குப் பொருள் - வெற்றிச் சொல் வேந்தர்
தமிழ்நாட்டின் வோர்ட்ஸ் வொர்த் என்றழைக்கப்படுபவர் - வாணிதாசன்
கீமாயணம் என்றழைக்கப்படும் நூல் - இராவண காவியம்
திருஞான சம்பந்தர் திருமடம் என்று சிறப்பிக்கப்படும் மடம் - மதுரை ஆதினம்
பெரிய முதலியார் என்றழைக்கப்படுபவர் - நாதமுனிகள்
திருபாணாழ்வார் எழுதியது - அமலனாதிபிரான்
இருபதாம் நூற்றாண்டின் கம்பர் என்று அழைக்கப்படுபவர் - மீனாட்சிசுந்தரனார்
மாதவி பெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே என்று கூறும் நூல் - அம்பிகாபதி கோவை
குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களைத் தொகுத்தவர் - சீயமங்கலம் அருணாச்சல முதலியார்
வரகவி எனப் புகழ் பெற்றவர் - காசிம் புலவர்
உபய வேதாந்தாச்சாரியார் என்று அழைக்கப்படுபவர் - வேதாந்த தேசிகர்
நாணிக்கண் புதைத்தல் என்ற ஒரு துறைக் கோவையை எழுதியவர் - அமிர்த கவிராயர்
கொய்யாக்கனி எழுதியவர் - பெருஞ்சித்திரனார்
இந்தியாவில் முதற்குழந்தைக் களஞ்சியம் கொண்டு வந்தவர் -பெரியசாமி தூரன்
உரைவீச்சு வசன கவிதைகளை எழுதியவர் - சாலை இளந்திரையன்
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் திருஞானசம்பந்தர்
தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன் - அப்பர்
ஏழிசையாய் இசைப்பயனாய் உள்ளவன் - சுந்தரர்
உரைநடை வேந்தர் - ஆறுமுக நாவலர்
உரைநடை இளவரசு - தாண்டவராய முதலியார்
தமிழ்நாட்டு ஸ்காட் - கல்கி
தொல்காப்பிய நன்னூல் என்ற நூலை எழுதியவர் - சாமுவேல் பிள்ளை
ஐந்திணை அறுபது என்று அழைக்கப்படும் நூல் - கைந்நிலை
ஏழைப்படும் பாடு, இளிச்சவாயன் நூல்களை மொழிபெயர்த்தவர் - சுத்தானந்த பாரதி
உலகின் முதல் நாவல் - ஜாப்பான் மொழி - கெஞ்சி கதை
தொல்காப்பியம் உரியியல் பொருள் கூறும் சொற்கள் எண்ணிக்கை - 120
நன்னூல் உரியியல் பொருள் கூறும் சொற்கள் - 30
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வடசொற்கள் அதிகம் பயின்றுள்ள நூல் - ஏலாதி
மெலித்தல் விகாரத்தால் பெயர் பெற்ற சிற்றிலக்கியம் - கலம்பகம்

பாட்டியல் நூல்களும் இலக்கிய வகைகளின் எண்ணிக்கையும்
பன்னிருபாட்டியல் - 62
வெண்பாப் பா¢டியல் - 54
நவநீதப் பாட்டியல் - 45
பிரபந்த மரபியல் - 62
சிதம்பரப் பாட்டியல் - 60
இலக்கண விளக்கம் - 66
தொன்னூல் விளக்கம் - 35
சதுரகராதி - 96
முத்துவீரியம் - 90
பிரபந்த தீபிகை - 77
சுவாமிநாதம் - 37
விழையும் ஒருபொருள் மேல்ஒரு நூறு
தழைய உரைத்தல் சதகம் என்ப என்று சதக இலக்கணம் கூறும் நூல் - இலக்ண விளக்கம்

முதல் வரலாற்றுப் புதினம் - மோகனாங்கி - சரவணமுத்துப் பிள்ளை - 1895

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் என்று கூறியர் - சுந்தரம்பிள்ளை

மழலைத் திருமொழியில் சிலவடுகும் சிலதமிழும்
குழறித்தரு கருநாடியர் குறுகிக் கடைதிறமின் - கலிங்கத்துப்பரணி

தேசிக விநாயத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை எனப் பாராட்டியவர் - நாமக்கல் கவிஞர்




Comments

Popular posts from this blog

பல்லவர் கால இலக்கியங்கள் - பக்தி இலக்கியக் குறிப்புகள்

UGC Tamil TNPSC Tamil - பக்தி இலக்கிய வினாக்கள்