நந்திக் கலம்பகம் சில பாடல்கள் - விளக்கம்

தமிழில் உருவான முதல் கலம்பகம் நந்திக் கலம்பகம் ஆகும். தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் இந்நூலின் பாட்டுடைத் தலைவன் ஆவான். இந்நூல் கி.பி.9ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. நந்திவர்மனின் வீரச்சிறப்பு 1. திருமகளின் செழுமையும் நிலமகளின் உரிமைஅயும் ஒன்றாகக் கொண்டு ஆட்சி புரியும் அணிகள் அணிந்த பல்லவ மன்னனே, உன்னுடைய தோள் வலிமையை மட்டுமே துணையாகக் கொண்டு வெள்ளாறு என்னுமிடத்தில் நடைப்பெற்ற போரில் பகைவர்களை அழித்து வெறிற் பெற்ற நந்திவர்மனே, உன் அழகிய நீண்ட கண்கள் சிவந்தால் பகைவர் நாடுகள் குருதியினாலும் தீயினாலும் சிவக்கும். உன் புருவம் துடித்தால் உன் பாதங்களை வணங்காத பகைவரின் இடப்பாகம் அபசகுனத்தை உணர்த்த துடிக்கும். உன் வாள் உறையிலிருந்து வெளிப்பட்டால் உன் வெற்றியைப் பறை சாற்ற முரசொலிக்கும். அவ்வொலி பகைவரின் பெண்கள் அணிந்துள்ள வளையல் உடைக்கும் ஒலியை ஒத்திருக்கும். மதயானையின் மீதமர்ந்து போருக்குக் கிளம்பினால் பகைவர்களுக்குக் குருதி கொப்புளிக்கும். கார்ப்பருவம் கண்டு வருந்தும் தலைவியின் நிலை 2. சிவபெருமானை ஒரு பொழுதும் மறவாத சிந்தையினை உடையவன், வெற்றியுடன் எப்போதும் உறவு கொண்டிருப்பவன் நந்திவர்மன். அவனது ஊரில் குவளை மலர்களில் அமர்ந்து தேன் அருந்தும் வண்டுகளே, நீர்க்குமிழியை வெளிப்படுத்தும் ’சுழியில் விளையாடும் தும்பியே, இவ்வுலகில் மழை பெய்கின்ற குளிர் காலமும் வந்துவிட்டது. அவரும் வந்து விடுவேன் என்று குறித்துச் சொன்ன காலமும் வந்துவிட்டது. அவர் வறுமையைக் குறித்து அவர் மேல் கொண்ட கவலையோ பெரியது. ஆனால் இப்பழிச் சொல்லுக்கெல்லாம் ஆளான தலைவனோ இன்னும் வரவில்லை. கணவராகிய அவர் மேல் கொண்டுள்ள நம் உறவு வெறும் கதையாய் போனதே. 3. அன்னையரும் தோழியரும் நெருங்கி எம்மை வருத்தும் காலம். ஆனி, ஆடி மாதங்கள் செனறு மழை தொடங்கும் ஆவணி மாதம். இம்மாதம் புன்னை மலர்களும் பிச்வசி மலர்களும் மகழ்ந்து பொற்பவளம் போன்ற வாயினைத் திறந்து பூச்சொரியும் காலம். செந்நெல் விளையும் வயலில் சூழ்ந்துள்ள பறவைகள் வாழும் காஞ்சி நாட்டில் தியாகியாகிய நந்திவர்மனின் நீண்ட தோள்களை நான் பொருந்தாத காலம். என்னை அவர் மறந்து போனாரே, தோழி, அதனால் என் நிலையைக் கண்டு குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளிகூட எரியும் காலம். இவ்வாறு தன் தலைவன் பிரிவால் எல்லோருக்கும் இனிமையாய் இருக்கும் இக்காலம் எனக்கு மட்டும் இப்படிக் கடுமையாய் உள்ளதே. தலைவியை நினைத்து வாடும் தலைவன் 4. மேகங்களே! இராம பிரான் போன்றவன் என் மன்னனாகிய நந்திவர்மன். அவனுடைய நகரம் காஞ்சிபுரம். அந்த நகரில் என் தலைவி வாழ்கிறாள். அவள் அழகிய நெற்றியை உடையவள். என் தலைவியை நீங்கள் கண்டீர்கள் ஆனால் அவளிடம் நான் கூறுகின்ற இந்தச் செய்தியைக் கூறுங்கள். விரைந்து ஓடாத தேரில் உன்னைக் காணும் விருப்பத்துடன் வெறும் உடம்பு ஒன்று வந்து கொண்டிருக்கிறது என்று கூறுங்கள் என்று தலைவன் மேகத்திடம் வேண்டுகிறான். கையறுநிலை 5. நந்தி என்ற பெயர் உடைய மன்னனே! அருளில் மேம்பட்டவனே! நீ இப்போது இறந்து விட்டாய். எனவே உன் முகத்தின் ஒளி வானத்தில் உள்ள நிலவில் சேர்ந்துவிட்டது. உன் புகழ் கடலில் மூழ்கிவிட்டது. உன் வீரம் காட்டில் வாழும் புலியிடம் சேர்ந்து விட்டது. உன் கொடைத்திறம் கற்பக மரத்திடம் சேர்ந்து விட்டது. தேன் சிந்தும் திருமகள் திருமாலிடம் சேர்ந்து விட்டாள். இவை எல்லாம் போய் விட்டன. எனவே, உன் உடல் நெருப்பிடம் சேர்ந்து விட்டது. ஆனால் நானும் என் வறுமையும் எங்கே போய் வாழ்வோம்.

Comments

Popular posts from this blog

UGC NET TAMIL - TNPSC தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான விரிவான வினாக்கள்

பல்லவர் கால இலக்கியங்கள் - பக்தி இலக்கியக் குறிப்புகள்

UGC Tamil TNPSC Tamil - பக்தி இலக்கிய வினாக்கள்