மூவேந்தர் வரலாறு
சேர சோழ பாண்டியர் தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர்கள்
பண்டையத் தமிழகம் மூவேந்தர்களின் ஆட்சிக்குக் கட்டுபட்டு இருந்தது
மூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். மூவேந்தரில் மூத்தவன் பாண்டியன். அவனுக்கு பின்பு பல காலம் கழித்து வந்தவர்களே சேரனும், சோழனும். இந்திய மன்னர்களின் வரலாற்றில் எவருக்கும் இல்லாத பழம்பெரும் வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. சேர, சோழ ,பாண்டியர்கள் ஆகிய மூவருமே சகோதரர்கள் என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச் செய்தி. வரலாற்று ஆதாரம் அற்றது.
சேர சோழ பாண்டியர் மூவேந்தருக்கு உரிய சின்னங்கள்
சேரன் – வில்அம்புசேர-சோழ-பாண்டியர்-கொடி1
சோழன் – புலி
பாண்டியன் – மீன்
சேர சோழ பாண்டியர் மூவேந்தருக்கு உரிய பூக்கள்
சேரர் – பனம்பூ
சோழர் – ஆத்திப்பூ
பாண்டியர் – வேப்பம்பூ
சேர சோழ பாண்டியர் மூவேந்தர்களின் தலைநகரங்கள்
சேரர் – வஞ்சி(கரூர்)
சோழர் – உறையயூர்
பாண்டியர் – மதுரை
சேர சோழ பாண்டியர் மூவேந்தர்களின் துறைமுகங்கள்
சேரர் – தொண்டி
சோழர் – காவிரிபூம்பட்டிணம்
பாண்டியர் – கொற்கை
சேர சோழ பாண்டியர் நிலங்கள்
சேரநாடு மலையும் மலையைச் சார்ந்த நிலமும் ஆகும்.
சோழநாடு மிகவும் தொடக்க காலத்தில் இவ்வளவு வளமுடைய மருதநிலமாக இருந்திருக்கவில்லை. அது சதுப்புநிலமாக இருந்தது. கரிகாலன் முயற்சியால் காவிரிப் பாசனம் முறைப்படுத்தப்பட்டு வளம் தரும் மருதநிலமாக மாற்றப்பட்டது.
பாண்டிய நாட்டின் பெரும் பகுதி காடும் காடு சார்ந்த இடமும் ஆகும்.
சேர சோழ பாண்டிய காலம்
பாண்டிய அரசே உலகின் முதல் பேரராசு என்றே கூறலாம். தமிழ் தோன்றிய பொதிகை மலை அருகில் இருக்கும் இந்த பாண்டியர் ஆட்சி காலம், மூவேந்திரர்களில் முதலானவன்.
Comments
Post a Comment