திணை வாழ்வியல் சங்க இலக்கியம் அகம் புறம் என்று இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. சங்க தமிழரின் வாழ்வியலும் அவ்வாறே படம் எடுத்து பாடல்களின் வழியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சங்கத்தமிழரின் திணை வாழ்க்கை இருபெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. அவை, அகத்திணை, புறத்திணை என்பதாகும். மக்களின் களவு மற்றும் கற்பு வாழ்க்கை அகத்திணையாகவும், வீரம், பண்பு ஆகியவை புறத்திணையாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன. காதலும் வீரமும் அவர்தம் வாழ்க்கையின் இருகண்களாகப் போற்றப்பட்டன என்பதை இதன்கண் அறியலாம். அகத்திணை வாழ்வியல் தாம் வாழும் நிலத்திற்கு ஏற்ப மக்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும் நாகரிகமும் அமையும் என்பது தமிழரின் தலைசிறந்த கொள்கை. இந்நிலங்களுக்குக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பெயரிட்டுள்ளனர். இவ்வைந்து நிலத்தின் பாகுபாடுகளே அகத்திணை என்று அழைக்கப்படுகின்றது. திணை என்னும் சொல் நிலத்தை மட்டுமன்றி, நிலத்தின் அமைப்பு, அங்கு வாழும் மக்களின் இயல்பு, அங்கு உயிர் வாழகின்ற விலங்குகள், பறவைகள், செடி கொடிகள் மரங்கள், மக்கள் வழிபட்ட தெய்வங்கள் ஆகிய யாவற்றையும் குறிக்கின்றது...
Comments
Post a Comment