Posts

Showing posts from August, 2024

பக்தி இலக்கியம் வைணவம்

ஆழ்வார்கள் திருமாலை முழுமுதல் கடவுளாகக் கொண்டது வைணவ சமயம். திருமாலின் அடியார்களை ஆழ்வார்கள் என்று வழங்குவர். சைவ சமயத் தொண்டர்களை நாயன்மார்கள் என்று வழங்குவதற்கு இணையானது இவ்வழக்கம். ஆழ்தலாவது மூழ்குதல். உலக இன்பங்களில் ஈடுபாடு கொள்ளாது, எந்நேரமும் திருமால் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடப்போர் என்று ஆழ்வார் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வர். உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் அவர்களுக்குத் திருமாலே என்பர். சைவ அடியார்கள் அறுபத்து மூவர் என்பதுபோல், வைணவச் சமய அடியார் பன்னிருவர் என்று வழங்குவர். அவர்களின் திருப்பெயர்கள் வருமாறு: 1. பொய்கையாழ்வார் 2. பூதத்தாழ்வார் 3. பேயாழ்வார் 4. திருமழிசை ஆழ்வார் 5. பெரியாழ்வார் 6. ஆண்டாள் 7. தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் 8. திருப்பாணாழ்வார் 9. நம்மாழ்வார் 10. மதுரகவி ஆழ்வார் 11. திருமங்கை ஆழ்வார் 12. குலசேகர ஆழ்வார். இவர்கள் இயற்றியருளிய பாடல்களின் தொகுப்புக்கு நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் என்று பெயர். முதல் ஆழ்வார்கள் பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் இப் பன்னிருவருள்ளும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயா...

காலந்தோறும் சங்க இலக்கியம்

Image

கணினி மொழிகளும் நிரல் உருவாக்கமும்

Image

பாண்டியர் வரலாறு

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களையே சேரும். முச்சங்கங்கள் வாயிலாக தமிழ் வளர்த்ததை எட்டாம் நூற்றாண்டு நூலான இறையனார் களவியல் உரை கூறுகின்றது.பழங்காலத்தில் பாண்டியன் தலைநகரமான தென் மதுரையில் தலைச்சங்கம் கூடியது. பின்னர் நிகழ்ந்த கடற்கோளால், தென்மதுரை உட்பட பெரும் பகுதி கடலில் மூழ்கியது. அதற்குப்பின் கபாடபுரத்தை தலைநகரமாகக் கொண்டு பாண்டிய அரசு நடைபெற்றது. இரண்டாம்கோளில் கபாடபுரமும் அழிந்தது. அதன் பிறகு மதுரை மூதூரில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்றது. பாண்டிய மன்னன் தலைமையில் புலவர்கள் கூடி தமிழ் ஆய்வு நடத்திய சிறப்பால் இந் நகரே கூடல் நகர் என்று பெயர் பெற்றது. கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தமிழர் பெருமையின் அடையாளமாக தொல்காப்பியம் ஏற்றப்பட்டது. பாண்டியர்கள் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். துறைமுக நகரமாக கொற்கை இருந்தது. இவர்களது சின்னம் மீன். இவர்களது அடையாள பூவாக வேம்பு இருந்தது. சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் தலை சிறந்தவன் நெடுஞ்செழியன். முதல் தமிழ் தங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் 89 பேர். இடை சங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் 59 பேர். க...

சோழர் வரலாறு

சோழர்கள் வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட பரந்துபட்ட தமிழகத்தை, குட புலம், குண புலம், தென் புலம், என மூன்றாகப் பிரித்து, சேர, சோழ, பாண்டிய அரச மரபினர் மிகத்தொன்மைக் காலத்திலிருந்து அரசாண்டனர். இராமாயணம், மகாபாரதம் போன்ற பெருங்காப்பியங்கள் எழுந்த காலத்திலும், தமிழகத்தில் மூவேந்தரும் ஆண்டனர் என்பதை அறிய முடிகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மகதநாட்டை ஆட்சி செய்த அசோக சக்ரவர்த்தியின் கல்வெட்டுகளில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன. கி.பி. முதல் நூற்றாண்டில் தமிழ்நாடு வந்த யவன ஆசிரியன் பெரிப்பூளூஸ் சோழநாடு பற்றிய செய்திகளைக் குறித்துள்ளான். கிரேக்க, உரோமானியப் பேரரசுகள் உயர்நிலையில் இருந்த காலத்தில், சோழர்களுடன் அவர்களுக்கு வணிகத்தொடர்பு இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழகத்து அரச மரபினர்களில் மிகத் தொன்மையான குடியினர் சோழர் என்பதில் ஐயமில்லை. 3.1.1 முற்கால, பிற்காலச் சோழர்கள் கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வரைத் திகழ்ந்த கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த சில சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் சங்கத்தமிழ் நூல்களில் கிடைக்கி...

சேர மன்னர்களின் வரலாறு

சேர மன்னர்கள் செந்தமிழ் வேந்தர் மூவருள் (சேரர், சோழர், பாண்டியர்) சேரர் சிறந்தவராவர் என்ற கொள்கை, பழங்கால மக்களிடையேயும், அக்காலப் புலவர்களிடையேயும் நிலவியிருந்தது. இவர்களுக்கு வானவர் என்ற பெயரும் உண்டு. சேர நாட்டையாண்ட சேர மன்னர்கள் இரு கிளையினராகக் காணப்படுகின்றனர். ஒருவர் உதியன் சேரலாதன் வழி வந்தவர்கள், மற்றொருவர், இரும்பொறை என்ற பெயரால் அழைக்கப்படுவோர். இவர்களுள் முன்னவர் வஞ்சியைத் தலைநகராகக் கொண்ட உள்நாட்டுப் பகுதியினையும், பின்னவர் தொண்டியைத் தலைநகராகக் கொண்ட கடற்கரைப் பகுதியையும் ஆண்டவராவர். சேர மன்னர்கள் விற்கொடியைக் கொண்டிருந்தனர். 1 உதியன் சேரலாதன் சங்க காலச் சேர மன்னர்களுள், வரலாறு விளங்க வாழ்ந்த முதல் சேர மன்னன், உதியன் சேரலாதன். இவன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன், உதியன் சேரலாதன், உதியஞ்சேரல் என்றெல்லாம் அழைக்கப் பெறுகிறான். வெளியன் வேண்மான் என்னும் வேளிர் குலத் தலைவன் மகள் நல்லினி இவனுடைய மனைவி ஆவாள். இவன் மைந்தர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்னும் இருவரும் ஆவர். உதியன் சேரலாதன் ஆற்றிய அரிய செயல்கள் இரண்டு ஆகும். ஒன்று தன் நாட்டு எல்லையை ...

மூவேந்தர் வரலாறு

சேர சோழ பாண்டியர் தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர்கள் பண்டையத் தமிழகம் மூவேந்தர்களின் ஆட்சிக்குக் கட்டுபட்டு இருந்தது மூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். மூவேந்தரில் மூத்தவன் பாண்டியன். அவனுக்கு பின்பு பல காலம் கழித்து வந்தவர்களே சேரனும், சோழனும். இந்திய மன்னர்களின் வரலாற்றில் எவருக்கும் இல்லாத பழம்பெரும் வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. சேர, சோழ ,பாண்டியர்கள் ஆகிய மூவருமே சகோதரர்கள் என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச் செய்தி. வரலாற்று ஆதாரம் அற்றது. சேர சோழ பாண்டியர் மூவேந்தருக்கு உரிய சின்னங்கள் சேரன் – வில்அம்புசேர-சோழ-பாண்டியர்-கொடி1 சோழன் – புலி பாண்டியன் – மீன் சேர சோழ பாண்டியர் மூவேந்தருக்கு உரிய பூக்கள் சேரர் – பனம்பூ சோழர் – ஆத்திப்பூ பாண்டியர் – வேப்பம்பூ சேர சோழ பாண்டியர் மூவேந்தர்களின் தலைநகரங்கள் சேரர் – வஞ்சி(கரூர்) சோழர் – உறையயூர் பாண்டியர் – மதுரை சேர சோழ பாண்டியர் மூவேந்தர்களின் துறைமுகங்கள் சேரர் – தொண்டி சோழர் – காவிரிபூம்பட்டிணம் பாண்டியர் – கொற்கை சேர சோழ பாண்டியர் நிலங்கள் சேரநாடு மலையும் மலையைச் சார...

திணை வாழ்வியல் கோட்பாடு

திணை வாழ்வியல் சங்க இலக்கியம் அகம் புறம் என்று இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. சங்க தமிழரின் வாழ்வியலும் அவ்வாறே படம் எடுத்து பாடல்களின் வழியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சங்கத்தமிழரின் திணை வாழ்க்கை இருபெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. அவை, அகத்திணை, புறத்திணை என்பதாகும். மக்களின் களவு மற்றும் கற்பு வாழ்க்கை அகத்திணையாகவும், வீரம், பண்பு ஆகியவை புறத்திணையாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன. காதலும் வீரமும் அவர்தம் வாழ்க்கையின் இருகண்களாகப் போற்றப்பட்டன என்பதை இதன்கண் அறியலாம். அகத்திணை வாழ்வியல் தாம் வாழும் நிலத்திற்கு ஏற்ப மக்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும் நாகரிகமும் அமையும் என்பது தமிழரின் தலைசிறந்த கொள்கை. இந்நிலங்களுக்குக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பெயரிட்டுள்ளனர். இவ்வைந்து நிலத்தின் பாகுபாடுகளே அகத்திணை என்று அழைக்கப்படுகின்றது. திணை என்னும் சொல் நிலத்தை மட்டுமன்றி, நிலத்தின் அமைப்பு, அங்கு வாழும் மக்களின் இயல்பு, அங்கு உயிர் வாழகின்ற விலங்குகள், பறவைகள், செடி கொடிகள் மரங்கள், மக்கள் வழிபட்ட தெய்வங்கள் ஆகிய யாவற்றையும் குறிக்கின்றது...

சங்க இலக்கியம் - குறுந்தொகைப் பாடல்

Image

கிறித்தவ இலக்கிய வரலாறு

Image

தமிழ் விடு தூது

மதுரை சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தமிழை அவர்பால் தூதாக அனுப்புவது போலப் பாடப்பட்டுள்ளது தமிழ் விடு தூது. இதனைப் பாடிய புலவர் பெயர் தெரியவில்லை. சிறப்பு 1. சிவபெருமான் ஆட்சி செய்யும் மதுரையில் தமிழ்ச் சங்கப் புலவராக இருந்தவரும், 2. பல திசைகளில் சென்று வெற்றியை நிலைநாட்டிய பெண்ணரசியும், 3. ஒருமுறை சிவாகமப் பொருளை சிவனுணர்த்த பார்வதியார் பாராமுகமாக இருந்தார். அதனால் வெகுண்ட சிவன் பார்வதியை வலைஞர் மகளாகப் பிறக்கும்படி சபித்தார், புதல்வன் விநாயகரோ அந்தச் சிவாகமத் தொகுதியைக் கடலில் எறியக் கையில் எடுத்தார். தாய்ப்பாசம் மிக்க அந்த விநாயரும், 4. மதுரைச் சங்கப் புலவர்கள் முன் உருத்திரசன்மனாகத் தோன்றி தமிழ் நூல் சிறப்பை உரைத்த வேல் படையை உடைய முருகப் பெருமானும், 5. பார்வதி தேவி ஊட்டிய அமுதத்தால் மூன்று வயதில் வடமொழி மற்றும் தென்மொழி நூல்களைக் கற்றுணர்ந்த திருஞானசம்பந்தரும் 6. முதலை உண்ட சிறுவனை சிவபெருமானிடம் கவி பாடிப் பெற்ற சுந்தரரும், 7. பிரமனாலும் திருமாலாலும் காண முடியாத இறைவனடியைத் திர...

நந்திக் கலம்பகம் சில பாடல்கள் - விளக்கம்

தமிழில் உருவான முதல் கலம்பகம் நந்திக் கலம்பகம் ஆகும். தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் இந்நூலின் பாட்டுடைத் தலைவன் ஆவான். இந்நூல் கி.பி.9ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. நந்திவர்மனின் வீரச்சிறப்பு 1. திருமகளின் செழுமையும் நிலமகளின் உரிமைஅயும் ஒன்றாகக் கொண்டு ஆட்சி புரியும் அணிகள் அணிந்த பல்லவ மன்னனே, உன்னுடைய தோள் வலிமையை மட்டுமே துணையாகக் கொண்டு வெள்ளாறு என்னுமிடத்தில் நடைப்பெற்ற போரில் பகைவர்களை அழித்து வெறிற் பெற்ற நந்திவர்மனே, உன் அழகிய நீண்ட கண்கள் சிவந்தால் பகைவர் நாடுகள் குருதியினாலும் தீயினாலும் சிவக்கும். உன் புருவம் துடித்தால் உன் பாதங்களை வணங்காத பகைவரின் இடப்பாகம் அபசகுனத்தை உணர்த்த துடிக்கும். உன் வாள் உறையிலிருந்து வெளிப்பட்டால் உன் வெற்றியைப் பறை சாற்ற முரசொலிக்கும். அவ்வொலி பகைவரின் பெண்கள் அணிந்துள்ள வளையல் உடைக்கும் ஒலியை ஒத்திருக்கும். மதயானையின் மீதமர்ந்து போருக்குக் கிளம்பினால் பகைவர்களுக்குக் குருதி கொப்புளிக்கும். கார்ப்பருவம் கண்டு வருந்தும் தலைவியின் நிலை 2. சிவபெருமானை ஒரு பொழுதும் மறவ...

சீறாப்புராணம் - மானுக்குப் பிணை நின்ற படலம்

சீறாப்புராணம் : சீறா + புராணம் = சீறாப்புராணம்; ‘சீறத்’ என்னும் அரபுச் சொல்லின் திரிபே சீறா என்பது. சீறத் என்னும் அரபுச் சொல்லுக்கு வரலாறு என்பது பொருள். உலகில் தூய வாழ்க்கை நடத்திய உத்தமர் ஒருவரின் (நபிகள் நாயகம்) வரலாற்றைக் கூறும் நூலாதலால் இது சீறாப்புராணம் என வழங்கலாயிற்று. இந்நூல் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் உணர்த்தும் காப்பியமாகத் திகழ்கின்றது. உமறுப்புலவர் : சீறாப்புராணத்தைப் பாடியவர் உமறுப்புலவர். இவரது தந்தையார் சேகு முதலியார். இராமநாதபுரத்தையடுத்த கீழைக்கரை இவர் பிறந்த ஊராகும். இவர் கடிகை முத்துப்புலவரின் சீடர். சீதக்காதி என்னும் வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர். உமறுப்புலவர் பாடிய மற்றொரு நூல் ‘முதுமொழி மாலை’ என்பதாகும். மானுக்குப் பிணை நின்ற படலம் : நுபுவத்துக் காண்டம் என்னும் இந்நூலின் இரண்டாவது காண்டத்தில் உள்ளது இப்படலம். நபிகள் நாயகம் வேடனிடம் சிக்கிய ஒரு பெண்மானுக்காகத் தாமே பிணையாக நின்று, அம்மானை அவனிடமிருந்து மீட்ட பெருங்கருணைத்திறத்தை இப்படலம் உணர்த்துகின்றது. முகமது நபி ஒருநாள், நகர்ப்புறத்தினைநீங்கிச் செழுமையான மேகங்களைத் தனது முடியினில் தாங்கியதும்,...

நளவெண்பா

தமயந்தி நளனைத் தேடப் புரோகிதனை விடுத்தது வேல்வேந்தனான வீமராசனின் புரோகிதனுக்கு, “என்னைப் பெரிய காட்டில் கைவிட்டுப் பிரிந்து மனமாறிய வேந்தனை நீ தேடிச் சென்று அறிவாயாக” என்று கூறினாள். மேலும் கருமையான இருளில் பாழடைந்த மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் தன் காதலியைக் கைவிட்டுப் பிரிதல் தேர்வேந்தனுக்குத் தகுமோ என்று சொன்னால் அதனைக் கேட்டு மறுமொழி கூறுபவரை அறிந்து வருக என்று நளனை அறியும் வழியைப் புரோகிதனுக்கு உரைத்தாள். புரோகிதன் அயோத்தி அடைதல் மின்னல் உடைய மலைகளும், கடல்களும், கடலைச் சூழ்ந்த நாடுகளும், காடுகளுமான குறிஞ்சி, நெய்தல், மருதம், முல்லை என்ற நால் வகை நிலத்திலும் புரோகிதன் நளனைத் தேடி, இறுதியில் அயோத்தி நகரை அடைந்தான். நளன் மறுமொழி கருமையான இருளில் பாழடைந்த மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் தன் காதலியைக் கைவிட்டுப் பிரிதல் தேர்வேந்தனுக்குத் தகுமோ என்ற புரோகிதனின் வினாவினை நளன் கேட்டான். உடனே , காதலியை உறக்கத்திலே விட்டு பிரிந்தது பழைய விதியின் பயனாகும். வெண்கொற்றக்குடையை உடைய இராமபிரான் திருமகளான சீதாதேவியை தன் மனம் மாறுபட்டு காட்டில் கைவிட்டுச் சென்றான் என்று ஐயம் கொள்ளா...

சிற்றிலக்கிய வரலாறு பகுதி - 1

சிற்றிலக்கியம் குறைந்த எண்ணிக்கை உடைய பாடல்களைக் கொண்டு படைங்கப்பெறும் இலக்கிய வகையே சிற்றிலக்கியம் என்பார் தா. ஈசுவரப்பிள்ளை. அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றுள் ஒன்றோ பலவோ குறைந்து வரின் அவை சிற்றிலக்கியம் எனவும் வழங்கப்பெறும். வடமொழியில் பிரபந்தம் என்றழைக்கப்பெறுவதை நாம் சிற்றிலக்கியமாகக் கொள்கிறோம். பிரபந்தம் என்ற சொல் கட்டுதல் என்ற பொருளைத் தரும். சிற்றிலக்கிய காலம் தொல்காப்பியத்தில் இடம்பெற்ற சிற்றிலக்கிய வித்து பதினெட்டாம் நூற்றாண்டில் கனிந்தது என்பார் முனைவர் ந.வீ.ஜெயராமன். தொல்காப்பியத்தில் பிள்ளைத் தமிழ், தூது, உலா, ஆற்றுப்படை ஆகியவற்றைக் குறித்த கருத்துகள் சுட்டப்பட்டுள்ளன. இவை பிற்காலத்தில் தனித்த சிற்றிலக்கிய வகையாக வளர வித்தாக அமைந்துள்ளன. பத்துப்பாட்டில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களாக அமைகின்றன. அக்காலத்திலேயே ஆற்றுப்படை ஒரு துறையாக வளர்ந்துள்ளது. நாயக்கர் காலத்தில் சிற்றிலக்கியங்கள் தழைத்தோங்கின. எனவே அக்காலத்தை சிற்றிலக்கிய காலம் என்றே அழைப்பர். அமைப்பு சிற்றிலக்கியங்கள் அளவில் சிறியதாக அமையும். பல துறை சார்ந்த பெரிய நூல் போல் அமையாமல் ஒரு சில துறைகளைப் பற்...

Ugc old question paper

Image
Image

Ugc Tamil question paper

Image

Ugc Tamil question paper

Image

Ugc Tamil question pattern

Image

Ugc Tamil

Image

தமிழும் பிழைகளும்

Image
https://youtu.be/mFfvx4vqrqQ?si=MWFaEsSjjonqBh4t

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு சங்க இலக்கியம் நீதி இலக்கியம்/அற இலக்கியம் பக்தி இலக்கியம் காப்பிய இலக்கியம் உரையாசிரியர்கள் காலம் சிற்றிலக்கிய காலம் உரைநடை காலம் என இருபதாம் நூற்றாண்டு வரையிலான இலக்கிய பரப்பை இவ்வாறு இலக்கிய வரலாறு நூல்கள் எடுத்துரைக்கின்றன.

வஞ்சிப்பா யாப்பிலக்கண வரலாற்றில் மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும்

தமிழிலக்கண நெடும்பரப்பில் நால்வகைப் பாக்களும் காலந்தோறும் இலக்கண வரையறையைப் பெற்று வளர்ச்சி மாற்றங்களை அடைந்து வந்துள்ளன. இவற்றில் மிகத் தொன்மையான பா வடிவங்களாக ஆசிரியமும் வஞ்சியும் அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் ஒன்றுடன் ஒன்று வடிவ நிலையில் இணைந்திருந்த வரலாற்றைத் தொல்காப்பிய நூற்பாக்களான, ‘ஆசிரிய நடைத்து வஞ்சி’ (தொல். செய். நூ. 104), ‘வஞ்சி தூக்கே செந்தூக்கு இயற்றே’ தொல்.செய்.நூ.68) என்பனவற்றிலிருந்து அறியமுடிகிறது. ‘ஆசிரியத்தின் உட்பகுப்பாக வஞ்சி விளங்குகிறது’1 என்ற கருத்தும், ‘வஞ்சியிலிருந்து ஆசிரியம் வளர்ந்திருத்தல் வேண்டும்’2 என்ற கருத்தும் இங்கு இணைத்தெண்ணத்தக்கன. மேலும் சோ.ந.கந்தசாமி எடுத்துரைக்கும், ஆசிரியப்பாவிலிருந்து வஞ்சிப்பா தோன்றியது என்றோ, வஞ்சிப்பாவிலிருந்து ஆசிரியப்பா தோன்றியது என்றோ எண்ணாது, இருவகைப்பாக்களுமே தொன்மை மிக்க ஒரு மூல யாப்பினின்றும் வெவ்வேறு காலச் சூழலில் தோன்றியிருத்தற்கு உரியன என்று முடிவு செய்தல் தக்கது.3 என்ற கருத்தும் இத்தொடர்பில் நினைதற்குரியது. ஆசிரியமும் வஞ்சியும் ஒன்றோடொன்று தொடர்புடைய பாக்கள் என்பது இலக்கண விதிநிலை சா...