UGC Tamil - சங்க இலக்கிய வினாக்கள்


பின்னமில் கபிலன் தோழன் பெயர்?
இடைக்காடர்
பரணர்
நப்பசலையார்
நக்கீரன்
Answer :இடைக்காடர்

காதல்கூர் கவிதைபாடும் கபிலனார் – எனப்பாடும் நூல்?
புறநானூறு
பதிற்றுப்பத்து
அகநானூறு
திருவிளையாடல் புராணம்
Answer :திருவிளையாடல் புராணம்

பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே – எனப் பாரியால் புகழப்பட்டவன்?
விச்சிக்கோன்
ஓரி
மலையமான்
திருமுடிக்காரி
Answer :மலையமான்

அழிசியின் வரலாற்றைப் பாடியபுலவர்?
நக்கீரர்
கபிலர்
பரணர்
கோவூர்கிழார்
Answer :பரணர்

நெற்றிக்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டு என்றவர்?
நக்கீரர்
கபிலர்
பரணர்
கோவூர்கிழார்
Answer :நக்கீரர்

தோல் உரித்த உடும்பு போல் இருப்பவர்?
பாணர்
விறலி
பாடினி
பரணர்
Answer :பாணர்

தகடூர் யாத்திரையைப் பாடிய புலவர்கள்?
கோவூர்கிழார்- பொன்முடியார்
பொன்முடியார்- அடிசில்கிழார்
அடிசில்கிழார்- மாமூலனார்
கோவூர்கிழார் -மாமூலனார்
Answer :பொன்முடியார்- அடிசில்கிழார்

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்களிறு எறிந்து பெயர்தல் யாருக்குக் கடனே?
வேந்தன்
கொல்லன்
தந்தை
காளை
Answer :காளை

தும்பைத் திணைக்கு உரிய நிலம்?
பாலை
முல்லை
மருதம்
நெய்தல்
Answer :நெய்தல்
10 
வரிகொள் முறையை அறிவுடை நம்பிக்கு அறிவுறுத்தியவர்?
மோசிகீரனார்
கோவூர்கிழார்
பிசிராந்தையார்
ஔவையார்
Answer :பிசிராந்தையார்
11 
உருத்திரங்கண்ணனார் பாடிய பத்துப்பாட்டு நூல்கள்?
பட்டினப்பாலை-பெரும்பாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை-மதுரைக்காஞ்சி
பட்டினப்பாலை-சிறும்பாணாற்றுப்படை
இவற்றில் எதுவும் இல்லை
Answer :பட்டினப்பாலை-பெரும்பாணாற்றுப்படை
12 
பத்துப்பாட்டின் அடி எல்லை?
130 – 782
103 – 728
103 – 872
103 – 782
Answer :103 – 782
13 
ஆற்றுப்படை நூல்களின் அடி எல்லை?
317 - 500
248 – 583
269 – 586
296 - 586
Answer :248 – 583
14 
திருமுருகாற்றுப்படை நூலில் திருவாவினங்குடித் தோற்றம் பற்றிக் கூறும் பகுதி?
இரண்டாம்பகுதி
மூன்றாம்பகுதி
நான்காம்பகுதி
ஐந்தாம்பகுதி
Answer :மூன்றாம்பகுதி
15 
அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முட்டாள் தாமரை –எனப்பாடும் நூல்?
மதுரைக்காஞ்சி
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை
Answer :திருமுருகாற்றுப்படை
16 
வாள்வாய் எருத்தின் வயிற்றகத் தடக்கித் தோள்புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின் – எனக் கூறும் ஆற்றுப்படை நூல்?
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
பொருநராற்றுப்படை
மலைபடுகடாஅம்
Answer :சிறுபாணாற்றுப்படை
17 
கொள்வதும் மிகை கொளாது,
கொடுப்பதும் குறை கொடாது  ஒரேவிலை கூறிப்பழியஞ்சி இருப்பவர்களைப் பாடும் நூல்?
மதுரைக்காஞ்சி
பட்டினப்பாலை
மலைபடுகடாஅம்
பெரும்பாணாற்றுப்படை
Answer :பட்டினப்பாலை
18 
தீது நீங்கக் கடலாடியும் மாசுபோகப் புனல்படிந்தும் என்ற பாட்டைக் கேட்டுப் பரிசளித்த மன்னன்?
நன்னன்
இளந்திரையன்
கரிகாலன்
நல்லியக்கோடன்

Answer :கரிகாலன்
19 
அகத்தியர், இராவணனைத் தமிழ்நாட்டுப் பக்கம் வராது விலகச் செய்ததைப் பற்றிக் கூறியவர்?
மாங்குடிமருதனார்
உருத்திரங்கண்ணனார்
பெருங்கௌசிகனார்
நத்தத்தனார்
Answer :மாங்குடிமருதனார்
20 
தொல்காப்பிய இலக்கணத்தோடு பொருந்தாச் செய்யுட்கள் சில இதன்கண் இடம் பெற்ற நூல்?
அகநானூறு
கலித்தொகை
புறநானூறு
இவற்றில் எதுவுமில்லை
Answer :புறநானூறு

Comments

Popular posts from this blog

UGC NET TAMIL - TNPSC தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான விரிவான வினாக்கள்

பல்லவர் கால இலக்கியங்கள் - பக்தி இலக்கியக் குறிப்புகள்

UGC Tamil TNPSC Tamil - பக்தி இலக்கிய வினாக்கள்