TNPSC Group 2 - New syllabus - புதிய பாடத்திட்டம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் (அக்டோபர் மாதம்) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசுப்பணியை எதிர்நோக்கி இருக்கும் தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து கண்காணித்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்….
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள் என இரு பிரிவாக நடத்தப்பட உள்ளது. இந்த பதவிகளுக்கு சரியான மற்றும் தகுதியான ஆட்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்வுகள், முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளன. முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நிலைத்தேர்வு, சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் அமைப்பிலும், முதன்மை தேர்வு, மொழிபெயர்ப்பு, சுருக்கி வரைதல் உள்ளிட்ட பிரிவுகளை உள்ளடக்கியதாக உள்ளது.
தேர்வு திட்டம்
முதல்நிலை தேர்வு (சரியான விடையை தேர்ந்தெடுக்கும் வகை ( பட்டப்படிப்பு தரம்)
மொத்தம் 200 கேள்விகள்
பொது அறிவு பகுதி (பட்டப்படிப்பு தரம்) – 175 கேள்விகள்
திறனறிடும் மனக்கணக்கு நுண்ணறிவு (10ம் வகுப்பு ) – 25 கேள்விகள்
தேர்வு நேரம் – 3 மணிநேரம்
மொத்த மதிப்பெண்கள் – 300
தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் – 90
முதன்மை தேர்வு ( கட்டுரை வரைதல்)
பகுதி அ- மொழிபெயர்த்தல் பகுதி
தமிழில் இருந்து ஆங்கிலம் – 2 கேள்விகள்
ஆங்கிலத்தில் இருந்து தமிழ் – 2 கேள்விகள்
மொத்த மதிப்பெண்கள் – 100
தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் – 25
இந்த பிரிவில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெறாத தேர்வர்களின் மற்ற பகுதி விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.
பகுதி ஆ
சுருக்கி வரைதல்
2 கேள்விகள் – 40 மதிப்பெண்கள்
பொருள் திறன் உணர்தல்
2 கேள்விகள் – 40 மதிப்பெண்கள்
சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்
2 கேள்விகள் – 40 மதிப்பெண்கள்
திருக்குறள் தொடர்பான கடிதம் வரைதல்
2 கேள்விகள் – 40 மதிப்பெண்கள்
கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது)
2 கேள்விகள் – 40 மதிப்பெண்கள்
மொத்தம் 300 மதிப்பெண்கள்
நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு
முதன்மை எழுத்துத்தேர்வு – 300 மதிப்பெண்கள்
நேர்முகத்தேர்வு – 40 மதிப்பெண்கள்
மொத்தம் -300+40 = 340 மதிப்பெண்கள்
குறைந்தபட்ச மதிப்பெண் ( அனைத்து பிரிவினருக்கும்) – 102 மதிப்பெண்கள்
நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு
முதன்மை எழுத்துத்தேர்வு – 300 மதிப்பெண்கள்
மொத்தம் = 300 மதிப்பெண்கள்
குறைந்தபட்ச மதிப்பெண் ( அனைத்து பிரிவினருக்கும்) – 90 

Comments

Popular posts from this blog

UGC NET TAMIL - TNPSC தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான விரிவான வினாக்கள்

பல்லவர் கால இலக்கியங்கள் - பக்தி இலக்கியக் குறிப்புகள்

UGC Tamil TNPSC Tamil - பக்தி இலக்கிய வினாக்கள்