அணியிலக்கணத்தில் யாப்பிலக்கணத்தின் செல்வாக்கு
தமிழ் இலக்கண மரபானது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றிலக்கண மரபிலிருந்த எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கண மரபாக வளர்ச்சியடைந்துள்ளது. மூன்றிலக்கண மரபில் வைத்துப் பேசப்படும் இலக்கண நூல்கள் அதன் பாடுபொருளில் யாப்பும் அணியும் இடம்பெற்றுள்ளதை வைத்து ஒரு இலக்கண மரபில் மற்றொரு இலக்கணக் கூறுகளின் தன்மை இடம்பெறுவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் இருப்பதையே இவ்விலக்கண மரபுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அவ்வகையில் தொல்காப்பிய மரபு மூன்றிலக்கண மரபில் வைத்து எண்ணத்தக்க சூழலில் அதன் கட்டமைப்பில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என அனைத்து இலக்கணக் கூறுகளும் இடம்பெற்றுள்ளது என்பதை இங்குச் சுட்டத்தக்கது.
இப்பின்னணியிலிருந்து நோக்குகையில் ஒவ்வொரு இலக்கணக் கூறுகளும் அடிப்படையில் ஏதோ ஒன்றைச் சார்ந்த நிலையில் தோன்றி, பிறகு இவ்விலக்கண மரபானது வளர்ச்சியடைந்துள்ளதாக எண்ண இடம்தருகிறது. இக்கருத்தாக்கத்தின் அடிப்படையில் சொல்லிலக்கணத்தில் யாப்பின் செல்வாக்கு குறித்து வீரகத்தி எழுதிய கட்டுரையை இங்குச் சுட்டுவது மிகவும் பொருத்தமுடையதாகும். யாப்பியல் குறித்த ஆய்வுகளில் பிற இலக்கணக் கூறுகளில் யாப்பின் செல்வாக்கு இடம்பெற்று விளங்குவதைக் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய தேவையை அக்கட்டுரையின் வழி உணரமுடிகிறது. அதன் தொடர்ச்சியாக அணியிலக்கணத்தில் யாப்பிலக்கணக் கூறுகள் எவ்வாறு இடம்பெற்று சிறக்கிறது என்பதை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
இக்கட்டுரையில் ஆய்வு மூலங்களாக அணியிலக்கண நூல்களும் தொல்காப்பியச் செய்யுளியல் மற்றும் தொல்காப்பியச் செய்யுளியலுக்கு எழுந்த உரைகளும் யாப்பிலக்கண நூல்களும் யாப்பிலக்கணத்திற்கு எழுந்த உரைகளும் தரவுகளாகக் கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில் அணியிலக்கண கூறுகளில் யாப்பிலக்கணத்தின் அமைப்புகள் எடுத்தியம்பப்படுகின்றன.
அணி இலக்கணத்திற்குத் தனிச்சிறப்பு உள்ளது. மற்ற இலக்கணங்கள் கவிஞனுக்கு வழிகாட்டும். ஆனால் அணி இலக்கணம் கவிஞருக்கும் கவிதையைப் படிப்பவர்க்கும் வழிக்காட்டும்.
அணி இலக்கணம்
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கண மரபுகளில் அணி இலக்கணம் என்பது கவிதையை அழகுப்படுத்தும் ஒரு கூறாக விளங்குகிறது. யாப்பிலக்கண நிலையில் கவிதை உருவாகிவிடுகிறது. அதற்கு பிறகு அணியின் தேவை கவிதையை மேலும் அழகுப்படுத்தும் தன்மையில் நிலைகொள்கிறது.
அணியிலக்கணம் பொதுவாகப் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என்ற பிரிவுகளைக் கொண்டமைகிறது. பொருளணியியல் சொல்லணியியல் ஆகிய இரண்டு பெரும் பிரிவுகளே அணியியலில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.
மாலை மாற்றே சக்கரம் சுழிகுளம்
ஏக பாதம் எழுகூற் றிருக்கை
காதை கரப்பே கரந்துறை பாட்டே
தூசம் கொளலே வாவ னாற்றி
கூட சதுர்த்தம் கோமூத் திரியே
ஓரெழுத் தினத்தால் உயுர்ந்த பாட்டே
பாத மயக்கே பாவின் புணர்ப்பே
ஒற்றுப் பெயர்த்தல் ஒருபொருட் பாட்டே
சித்திரப் பாவே விசித்திரப் பாவே
விகற்ப நடைய வினாவுத் தரமே
சருப்பதோ பத்திரம் சார்ந்த எழுத்து
வருத்தனம் மற்றும் வடநூற் கடலுள்
ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி
விரித்து முடித்த மிறைக்கவிப் பாட்டே
உருவக மாதி விரவியல் ஈறா
வருமலங் காரமும் வாழ்த்தும் வசையும்
கவியே கமகன் வாதி வாக்கியென்
றவர்கள் தன்மையும் அவையின தமைதியும்
பாடுதல் மரபும் தாரணைப் பகுதியும்
ஆனந்தம் முதலிய ஊனமும் செய்யுளும்
விளம்பனத் தியற்கையும் நரம்பின் விகற்பமும்
பண்ணும் திறமும் பாலையும் கூடமும்
எண்ணிய திணையும் இருதுவும் காலமும்
எண்வகை மணமும் எழுத்தும் சொல்லும்
செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும்
தந்திர உத்தியும் தருக்கமும் நடமு
முந்துநூல் முடிந்த மு
அந்தாதி மடக்கு
கயலேர் தரவருங் கடிபுனற் காவிரி
காவிரி மலருகக் கரைபொரு மரவம்
மரவம் பூஞ்சினை வண்டொடுஞ் சிலம்பும்
சிலம்புசூழ் தளிரடித் திருமனைக் கயலே (தண்டி.உரை.ப.164)
ஓருயிர் மடக்கு
தண்டியலங்காரத்தில் இடம்பெறும் ஓருயிர் மடக்கு என்பது ஒரு உயிர் எழுத்து மடக்காக அதாவது திரும்ப திரும்ப இடம்பெறுதல்.
அமல லகல மகல லபய
கமல பவன மவள
வமல மடர வளக வதன மடர மதன
என்ற பாடலில் அகர உயிர் எழுத்து மடக்காய் வந்துள்ளதால் இப்பாடலை ஓருயிர் மடக்கிற்குச் சான்றாகத் தண்டியலங்காரம் குறிப்பிடுகிறது.
ஒருவருக்கப்பாட்டு எனக் குறிப்பிட்டுத் தண்டியலங்காரம் கூறும் சான்று,
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்கக் – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
வல்லினப் பாட்டிற்குச் சான்றாக,
துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோட
றொடுத்த தொடைகடுக்கை பொற்போற் – பொடித்துத்
தொடிபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்
கடிபடைத்துக் காட்டிற்றுக் காடு
மெல்லினப் பாட்டிற்குச் சான்றாக,
மானமே நண்ணா மனமென் மனமென்னு
மானமான் மன்னா நனிநாணும் – மீனமா
மானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினு
மானா மணிமேனி மான் (தண்டி.உரை.ப.169)
என்ற பாடலைக் குறிப்பிடுகிறது.
இடையினப் பாட்டிற்குத் தண்டியலங்காரம்,
யாழியல் வாய வியலள வாயவொலி
யேழிய லொல்லாவா லேழையுரை – வாழி
யுழையே லியலா வயில்விழி யையோ
விழையே லொளியா லிருள்
என்ற பாடலைச் சான்று காட்டுகிறது. முதலடி முதன்மடக்கு என்பதற்குச் சான்றாக,
துறைவா துறைவார் பொழிற்றுணைவர் நீங்க
உறைவார்க்கு முண்டாங்கொல் சேவல் – சிறைவாங்கிப்
பேடைக் குருகாரப் புல்லும் பிறங்கிருள்வாய்
வாடைக் குருகா மனம்
என்ற பாடலைத் தண்டியலங்காரம் சான்றுகாட்டுகிறது. நான்கடி முழுதுமடக்கு என்பதற்குச் சான்றாக,
வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின
வான கந்தரு மிசைய வாயின
என்ற பாடலைத் தண்டியலங்காரம் சான்றுகாட்டுகிறது.
துணைநூற்பட்டியல்
அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் பழைய விருத்தியுரையுடன், மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை - பதிப்பாசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, மறுபதிப்பு 1998.
தண்டி, தண்டியலங்காரம், அ.குமாரசாமிப்புலவர் புதுக்கியது, கோ.விசயராகவன், பதிப்பாசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதற்பதிப்பு, 2015.
தண்டியாசிரியர், தண்டியலங்காரம் முழுவதும் மூலமும் பழையவுரையும், வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியார் கம்பெனி, திருவல்லிக்கேணி, சென்னை, 1962.
தண்டி, தண்டியலங்காரம் மூலமும் தெளிவுரையும், வ.த.இராம.சுப்பிரமணியம் தெளிவுரையாசிரியர், மு.சண்முகம் பிள்ளை பதிப்பாசிரியர், முல்லை நிலையம், சென்னை, முதற்பதிப்பு ஏப்ரல், 1998 மறுபதிப்பு, 2015
Comments
Post a Comment