அணியிலக்கணத்தில் யாப்பிலக்கணத்தின் செல்வாக்கு
தமிழ் இலக்கண மரபானது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றிலக்கண மரபிலிருந்த எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கண மரபாக வளர்ச்சியடைந்துள்ளது. மூன்றிலக்கண மரபில் வைத்துப் பேசப்படும் இலக்கண நூல்கள் அதன் பாடுபொருளில் யாப்பும் அணியும் இடம்பெற்றுள்ளதை வைத்து ஒரு இலக்கண மரபில் மற்றொரு இலக்கணக் கூறுகளின் தன்மை இடம்பெறுவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் இருப்பதையே இவ்விலக்கண மரபுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அவ்வகையில் தொல்காப்பிய மரபு மூன்றிலக்கண மரபில் வைத்து எண்ணத்தக்க சூழலில் அதன் கட்டமைப்பில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என அனைத்து இலக்கணக் கூறுகளும் இடம்பெற்றுள்ளது என்பதை இங்குச் சுட்டத்தக்கது. இப்பின்னணியிலிருந்து நோக்குகையில் ஒவ்வொரு இலக்கணக் கூறுகளும் அடிப்படையில் ஏதோ ஒன்றைச் சார்ந்த நிலையில் தோன்றி, பிறகு இவ்விலக்கண மரபானது வளர்ச்சியடைந்துள்ளதாக எண்ண இடம்தருகிறது. இக்கருத்தாக்கத்தின் அடிப்படையில் சொல்லிலக்கணத்தில் யாப்பின் செல்வாக்கு குறித்து வீரகத்தி எழுதிய கட்டுரையை இங்குச் சுட்டுவது மிகவும் பொருத்தமுடையதாகும். யாப்பியல் குறித்த ஆய்வுகளில் பிற இலக்கணக் கூறுகளில்...