Posts

Showing posts from January, 2022

தாய் தந்தையர் வணக்கம் வேதநாயகம்பிள்ளை பெண்மதி மாலை

 தாய் தந்தையர் வணக்கம் வேதநாயகம் பிள்ளை (1826 – 1889) தமிழகக் கிறித்துவத் தொண்டர்களில் தலைமையானவர். திருச்சிராப்பள்ளி – குளத்தூரில் பிறந்தவர். முன்சீப் பதவி வகித்தவர். இவரது பிரதாப முதலியார் சரித்திரம் இவருக்குப் பெரும்புகழைப் பெற்று தந்தது. தமிழில் தோன்றிய முதல் நாவல் இதுவேயாகும். புதியவகையான இலக்கியப் படைப்பாளர்களுக்கு இவரது இந்நூல் வழிகாட்டியாக அமைகிறது. கிறித்துவரே ஆனாலும் சமரச சன்மார்க்கத்தினர். இவர் மொத்தம் 16 நூல்களை இயற்றியுள்ளார். இவர் இயற்றிய நூல்கள்: 1. பிரதாப முதலியார் சரித்திரம் 2. சர்வ சமய சமரசக் கீர்த்தனை 3. நீதிநூல் 4. பெண்மதி மாலை 5. சுகுண சுந்தரி சரித்திரம் 6. தேவமாதா அந்தாதி 7. திருவருள் அந்தாதி 8. திருவருள் மாலை 9. பெரிய நாயகி அம்மாள் பதிகம் 10. சத்திய வேதக் கீர்த்தனை தாய்தந்தையர் வணக்கம் என்ற இப்பகுதி பாடல் 1. மாதா பிதாவை வணங்கு  - நாளும் ஆதாரமாய் அவர்சொல்லுக் கிணங்கு 2. தந்தை தாய் சாபம் பொல்லாது – அவர் சிந்தை நொந்தால் மக்கள் செல்வம் கில்லாது 3. மாதா பிதாவுக்குத் துரோகம் – செய்யும் பாதகரைச் சுற்றும் பாவமேநேகம் 4. பெற்றவர் நேசத்த...

நான்காம் திருமொழி நம்மாழ்வார் பாடல்கள்

 நான்காம் திருமொழி நம்மாழ்வார் ஆழ்வார்களில் தலைமை சான்றவர். இவரை உடலாகவும் ஏனையோரை உறுப்புகளாகவும் வைணவர்கள் கருதுகின்றனர். பாண்டி நாட்டில் ஆழ்வார் திருநகரி வேளாண் மரபில் காரியார்க்கும் உடைய நங்கைக்கும் பிரமாதி வருடம் வைகாசித் திங்கள் பௌர்ணமி திதியில் இறைவனின் அம்சமாகப் பிறந்தவர். சடகோபர், மாறன், பராங்குசர் ஆகியவை இவருக்கு வழங்கும் வேறுபெயர்கள். சைவத்திற்கு மாணிக்கவாசகர் எப்படியோ, அப்படியே வைணவத்திற்கு நம்மாழ்வார். காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியாகும். இயற்றிய நூல்கள்: நம்மாழ்வார் நான்கு நூல்களை இயற்றியுள்ளார். அவை திருவாசிரியம், திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி. இந்நான்கையும் வைணவர் தம் சமயத்திற்குரிய சதுர்மறைகளாகக் கூறுவர். நம்மாழ்வார் பாடல்கள் திருவாய்மொழி எனப்படும். ஏனையோர் பாடியன திருமொழி என்று அழைக்கப்படும். திருவாய்மொழி திராவிட வேதம் எனச் சிறப்பிக்கப்படுகிறது. நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் இறைவனைப் பாடாமல் நம்மாழ்வாரையே இறைவனாகக் கருதி பாடல்களை எழுதியுள்ளார். 1. அஞ்சிறைய மடநாராய், அளியத்தாய் நீயும்நின் அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி...

இஸ்லாமிய இலக்கிய வரலாறு

 இஸ்லாமியர்களின் தமிழ்த்தொண்டு முன்னுரை இஸ்லாமிய நாடுகளோடு தமிழகத்திற்கு இரண்டாயிரம் வருட வணிகத்தொடர்பு உண்டெனினும், மாலிக்காபூரின் படையெடுப்பிற்குப் பிறகுதான் தமிழகத்தில் இஸ்லாமியம் பரவத் தொடங்கியது. பலர் இஸ்லாமிய மதத்திற்கு மாறத் தொடங்கினர். அவர்கள் மதக் கருத்துகளையும் மதம் தொடர்பான செய்திகளையும் தமிழில் கூற முனைந்தனர். இதற்கு தமிழ் இலக்கியத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். இஸ்லாமியர் வருகையால் தமிழுக்குச் சில புதிய இலக்கிய வரவுகள் கிடைத்தன. அவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை நொண்டி நாடகம், படைப்போர், முனஜாத்து, கிஸ்ஸா, மசலா, நாமா முதலியனவாகும். நொண்டி நாடகத்துள், திருக்கச்சூர் நொண்டி நாடகம் குறிப்பிடத்தக்கது. கதைத் தலைவன் திருட்டு, காமம் முதலிய கெட்ட வழிகளில் சென்று அதற்குத் தண்டனையாகத் தன் கால்களை இழந்து நொண்டியான பிறகு, தான் செய்த தவறுகளுக்கு வருந்தி மேல்நிலை அடைவதாகக் காட்டுவதே நொண்டி நாடகம் என்பதன் பொது அமைப்பாகும். இஸ்லாமியப் புலவர்கள் தமிழிற்குச் செய்த தொண்டு பற்றி இக்கட்டுரையில் காண்போம். உமறுப்புலவர் (கி.பி.1642 - 1703) உமறுப்புலவர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தைச் ச...

மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சி

 திருப்பள்ளியெழுச்சி முன்னுரை பள்ளியெழுச்சி என்பது மகளிர் விடியற்காலையில் எழுந்து நீராடி இறைவனை வழிபடும் நிகழ்வாகும். சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகத்தில் இப்பகுதி இடம்பெற்றுள்ளது.  ஆசிரியர் குறிப்பு திருவாதவூரார் என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும் சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராகப் பணிபுரிந்தார். ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகள் வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சிவனடி சேர்ந்தார். பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையில் இவருடைய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. திருவாசகம், திருக்கோவையார் இவர் பாடியவை.  ‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்று இவர் இயற்றிய திருவாசகத்தை அறிஞர் உலகம் போற்றுகிறது. திருவெம்பாவை பாடல்கள் 20, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் 10 சேர்த்து மொத்தம் 30 பாடல்கள் மார்கழி 30 நாட்கள் இறைவழிபாட்டின் போது பாடப்படுகின்றன. திருப்பள்ளியெழுச்சி திருப்பள்ளியெழுச்சி தமிழின் தொண்ணூற்றாறு பிரபந்தங்களின் வகைகளுள் ஒன்று. உயிரி...

திருக்குறள் காலமறிதல்,சுற்றந்தழால்

       மனிதன் பேண வேண்டிய ஆளுமைப் பண்புகளுள் முதன்மையானது காலமறிதல் ஆகும். செயலுக்கு முன் காலத்தை அறிந்து கொள்ளுதல் எவ்வளவு வலிமை, ஆற்றல், திறம் படைத்தவரானாலும் காலமறிந்து ஒரு காரியம் செய்யாவிட்டால் பயன்படாது. இது போர்த்தொழிலுக்கு மட்டுமன்றிப் பொதுவான வாழ்வுக்கும் கருதப்பட வேண்டியதாகும்.  ஆடிப்பட்டம் தேடிவிதை,  காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்பன காலமறிதல் குறித்த பொன்மொழிகள். காலம் கருதாமல் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிக்கும் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவு. காலம் அறிதல் என்பது செயலுக்கேற்ற காலத்தை உணர்தலைக் குறிப்பது. மாறிக்கொண்டேவரும் காலச் சூழ்நிலைகளுக்கேற்ப செயல் மேற்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லும் அதிகாரம்.       செய்வதற்குரிய காலம் அறிந்து செய்து முடித்தற்கான கருவிகளுடன் செய்பவர்க்கு செய்தற்கரிய செயல்களில்லை என இவ்வதிகாரம் கூறுகிறது. காலப்பொழுதினால் பெறும் வெற்றி,காலமறிதலால் வரும் பயன், காலம் வாய்க்காவிட்டால் பொறுத்திருத்தல், பொறுத்திருப்பதால் வரும் சிறப்பு, பொறுத்திருக்கும் பருவத்தில் தன் நோக்கம், உணர்ச்சிகள் ஆகியவற்றை வெளிக்காட்டாமை, ...

இலக்கண வரலாறு

 தமிழ் இலக்கணம் ஆனது எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என ஐந்திலக்கண மரபைக் கொண்டது. ஐந்திலக்கண மரபைக் கொண்ட இலக்கண வரலாற்றில் தொல்காப்பியம் வீரசோழியம் தொன்னூல் விளக்கம் இலக்கண விளக்கம் முத்துவீரியம் சுவாமிநாதம் ஆகியவை ஐந்து இலக்கணங்களைப் பற்றிப் பேசுகிறது. ஒரே ஒரு இலக்கண மரபை கொண்ட நூல்களாக அதாவது சொல் இலக்கணத்தை எடுத்துரைக்கும் நூல்களாக  இலக்கணக் கொத்து பிரயோக விவேகம் திகழ்கின்றன எழுத்து, சொல் என்ற இரண்டு இலக்கண நூல்களாக நன்னூலும் நேமிநாதமும் திகழ்கின்றன பொருள் இலக்கணத்தில் அகப்பொருள் பற்றி நம்பியகப்பொருளும் புறப்பொருள் பற்றி புறப்பொருள் வெண்பாமாளையும் பேசுகின்றன அகப்பொருளில் களவு பற்றிக் களவியற் காரிகை என்ற நூல் யாப்பிலக்கணத்தில் யாப்பெருங்கலம் யாப்பருங்கலக்காரிகை யாப்பு நூல் அவிநயம் யாப்பதிகாரம் யாப்பின் உறுப்புகள் அடி நூல் தொடையதிகாரம் பாக்கள் குறித்த கட்டளைக்கலித்துறை விருத்தப்பாவியல் எனத் தமிழ் இலக்கணம் மரபானது பரந்து விரிந்ததாகத் திகழ்கிறது