தமிழ் கவிதை வரலாறு

 தமிழ் இலக்கிய மரபானது பல்வேறு இலக்கிய வகைகளைக் கொண்டுள்ளது. சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பக்தி, காப்பியம், சிற்றிலக்கியம், உரைநடை கவிதை, நாவல், சிறுகதை என்று தனக்கான இலக்கியப் பாரம்பரியத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தமிழ் கவிதை மரபானது காலந்தோறும் படைப்பிலக்கிய வகைகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.

    செய்யுள் என்பது இலக்கிய வகைகளின் வடிவமாகத் தொடக்க காலந்தொட்டே தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்ற நிலையில் கவிதை என்ற சொல்லாடல் அது மரபுக்கவிதை புதுக்கவிதை என்ற நிலைகளில் தனக்கான புதிய சொல்லாடல்களைக் கொண்டு படைப்பிலக்கிய களனில் தன்னை அமைத்து கொண்ட போக்கு தமிழ் கவிதையியலைப் புரிந்துகொள்ள வழிகோலும்


தமிழ் வடிவ மரபு

காலந்தோறும் பொருண்மையின் மாற்றத்திற்கேற்ப இலக்கிய வடிவத்திலும் மாற்றத்தைக் கொண்டு தமிழிலக்கியம் பயணிக்கிறது. அந்த நெடிய வரலாற்றை அறிந்துகொள்வது இத்தொடர்பில் கவிதையைப் புரிந்துகொள்ள உதவும்.

சங்க இலக்கியம் - ஆசிரியம்

பதினெண்கீழ்க்கணக்கு - வெண்பா

காப்பியம், பக்தி - விருத்தம்

சிற்றிலக்கியம் - விருத்தம், துறை, தாழிசை, கலிவெண்பா


என்ற நிலைகளில் தமிழ் இலக்கியமானது பல்வேறு யாப்பு வடிவங்களை முதன்மைபடுத்தி காலத்தின் தேவைக்கேற்ப அதன் வடிவத்திலும் மாற்றங்களைப் புகுத்திக் கொண்டு வந்துள்ளது. 18,19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலைநாட்டினர் வருகை அச்சு மரபு தமிழ் சமூகத்தில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்திய நிலையில் உரைநடை தோற்றம் பெற்ற சூழல் இங்கு, கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் போன்ற மேலைநாட்டு இலக்கிய வடிவங்களும் தோற்றம் பெறுகின்றன. இந்தப் பின்புலத்தில் இருந்து மரபுக்கவிதை, புதுக்கவிதை என்ற கவிதை குறித்த சொல்லாடல்கள் உருப்பெறுகிறது.

Comments

Popular posts from this blog

UGC NET TAMIL - TNPSC தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான விரிவான வினாக்கள்

பல்லவர் கால இலக்கியங்கள் - பக்தி இலக்கியக் குறிப்புகள்

UGC Tamil TNPSC Tamil - பக்தி இலக்கிய வினாக்கள்