சேர மன்னர்கள் செந்தமிழ் வேந்தர் மூவருள் (சேரர், சோழர், பாண்டியர்) சேரர் சிறந்தவராவர் என்ற கொள்கை, பழங்கால மக்களிடையேயும், அக்காலப் புலவர்களிடையேயும் நிலவியிருந்தது. இவர்களுக்கு வானவர் என்ற பெயரும் உண்டு. சேர நாட்டையாண்ட சேர மன்னர்கள் இரு கிளையினராகக் காணப்படுகின்றனர். ஒருவர் உதியன் சேரலாதன் வழி வந்தவர்கள், மற்றொருவர், இரும்பொறை என்ற பெயரால் அழைக்கப்படுவோர். இவர்களுள் முன்னவர் வஞ்சியைத் தலைநகராகக் கொண்ட உள்நாட்டுப் பகுதியினையும், பின்னவர் தொண்டியைத் தலைநகராகக் கொண்ட கடற்கரைப் பகுதியையும் ஆண்டவராவர். சேர மன்னர்கள் விற்கொடியைக் கொண்டிருந்தனர். 1 உதியன் சேரலாதன் சங்க காலச் சேர மன்னர்களுள், வரலாறு விளங்க வாழ்ந்த முதல் சேர மன்னன், உதியன் சேரலாதன். இவன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன், உதியன் சேரலாதன், உதியஞ்சேரல் என்றெல்லாம் அழைக்கப் பெறுகிறான். வெளியன் வேண்மான் என்னும் வேளிர் குலத் தலைவன் மகள் நல்லினி இவனுடைய மனைவி ஆவாள். இவன் மைந்தர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்னும் இருவரும் ஆவர். உதியன் சேரலாதன் ஆற்றிய அரிய செயல்கள் இரண்டு ஆகும். ஒன்று தன் நாட்டு எல்லையை ...
சங்க இலக்கியம் சங்க இலக்கியம் மொத்த பாடல்களின் எண்ணிக்கை - 2381 மொத்த புலவர் எண்ணிக்கை - 473 அகப்பாடல்கள் - 1862 அகப்புலவர்கள் - 378 அலர்ப்புலவர் என்று அழைக்கப்படுபவர் - உலோச்சனார் தலைமகன் தன் நெஞ்சிற்குக் கூறும் கூற்றினை அதிகம் பாடியவர் - இளங்கீரனார் சங்க நூல்களுக்கு வசனம் எழுதியவர் - ந.சி.கந்தையாபிள்ளை சங்க இலக்கியத்தில் பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை - 30 சங்க இலக்கியத்தில் அதிக பாடல்களைப் பாடியவர் - கபிலர் குறுந்தொகையில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 203 கி.பி. 470இல் உருவான சங்கம் - திரமிளசங்கம் சங்க இலக்கியத்தில் வரலாற்றுச் செய்திகள் அதிகம் இடம்பெற்றுள்ள நூல் அகநானூறு சங்க இலக்கியப் புலவர்களின் வரலாற்றுச் செய்திகளை அதிகம் பாடிய புலவர் பரணர் வேம்பும் கடுவும்போல அறிவுரை கூறுவது - வாயுறை வாழ்த்து திணை மயக்கம் அதிகம் இடம்பெற்ற நூல் - அகப்பாடல்களில் அதிகமாக உள்ளுறை பெறும் திணை - மருதம் எத்திசை செல்லினும் அத்திசை சோறே என்றவர் - ஔவையார் (புறநானூறு) உரையாசிரியர்களால் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட சங்க இலக்கிய நூல் குறுந்தொகை செங்கல்லால் கட்டப்பட்ட சிவன் கோயில் பற்றிக்க...
திணை வாழ்வியல் சங்க இலக்கியம் அகம் புறம் என்று இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. சங்க தமிழரின் வாழ்வியலும் அவ்வாறே படம் எடுத்து பாடல்களின் வழியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சங்கத்தமிழரின் திணை வாழ்க்கை இருபெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. அவை, அகத்திணை, புறத்திணை என்பதாகும். மக்களின் களவு மற்றும் கற்பு வாழ்க்கை அகத்திணையாகவும், வீரம், பண்பு ஆகியவை புறத்திணையாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன. காதலும் வீரமும் அவர்தம் வாழ்க்கையின் இருகண்களாகப் போற்றப்பட்டன என்பதை இதன்கண் அறியலாம். அகத்திணை வாழ்வியல் தாம் வாழும் நிலத்திற்கு ஏற்ப மக்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும் நாகரிகமும் அமையும் என்பது தமிழரின் தலைசிறந்த கொள்கை. இந்நிலங்களுக்குக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பெயரிட்டுள்ளனர். இவ்வைந்து நிலத்தின் பாகுபாடுகளே அகத்திணை என்று அழைக்கப்படுகின்றது. திணை என்னும் சொல் நிலத்தை மட்டுமன்றி, நிலத்தின் அமைப்பு, அங்கு வாழும் மக்களின் இயல்பு, அங்கு உயிர் வாழகின்ற விலங்குகள், பறவைகள், செடி கொடிகள் மரங்கள், மக்கள் வழிபட்ட தெய்வங்கள் ஆகிய யாவற்றையும் குறிக்கின்றது...
Comments
Post a Comment