Posts

UGC NET Tamil TNPSC Tamil

ஒளவையாரின் தனிப்பாடல்

ஒளவையாரின் தனிப்பாடல் வான் குருவியின் கூடு ஔவையார் கம்பரைப் பழித்துப் பாடல் பாடினார். அதைக் கேட்ட சோழ மன்னன் வருத்தமடைந்து, “கம்பனைப் போல பெரிய காவியம் செய்து சிறப்புற்றவர் வேறு யார் இருக்கின்றனர்” என்று கேட்டார். அதற்கு ஔவையார், “சோழனே! தூக்கணாங்குருவியின் கூடு குளவிகள் கட்டுகின்ற அரக்குக்கூடு, கரையானின் புற்று, தேனீக்களின் கூடு, சிலந்தியின் வலை இவற்றைப்போல எவராவது செய்ய முடியுமா? யாராலும் செய்ய முடியாது. அதனால் அவர்களை மட்டும் தொழில்நுட்பத்தில் தலைசிறந்தவர்கள் என்று பாராட்டலாமா? அஃதன்றி வேறு எதுவும் அந்தச் சிற்றினங்களுக்குத் தெரியாது. அது போலவேதான் கவிதையும். ஒவ்வொரு புலவர்க்கும் ஒவ்வொன்று எளிதாக இருக்கும். அந்தந்த வல்லமையினை அறிந்துதான் பாராட்டுதல் வேண்டும். அதுதான் சிறப்பு” என்று கூறினார்.

பக்தி இலக்கியம் வைணவம்

ஆழ்வார்கள் திருமாலை முழுமுதல் கடவுளாகக் கொண்டது வைணவ சமயம். திருமாலின் அடியார்களை ஆழ்வார்கள் என்று வழங்குவர். சைவ சமயத் தொண்டர்களை நாயன்மார்கள் என்று வழங்குவதற்கு இணையானது இவ்வழக்கம். ஆழ்தலாவது மூழ்குதல். உலக இன்பங்களில் ஈடுபாடு கொள்ளாது, எந்நேரமும் திருமால் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடப்போர் என்று ஆழ்வார் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வர். உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் அவர்களுக்குத் திருமாலே என்பர். சைவ அடியார்கள் அறுபத்து மூவர் என்பதுபோல், வைணவச் சமய அடியார் பன்னிருவர் என்று வழங்குவர். அவர்களின் திருப்பெயர்கள் வருமாறு: 1. பொய்கையாழ்வார் 2. பூதத்தாழ்வார் 3. பேயாழ்வார் 4. திருமழிசை ஆழ்வார் 5. பெரியாழ்வார் 6. ஆண்டாள் 7. தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் 8. திருப்பாணாழ்வார் 9. நம்மாழ்வார் 10. மதுரகவி ஆழ்வார் 11. திருமங்கை ஆழ்வார் 12. குலசேகர ஆழ்வார். இவர்கள் இயற்றியருளிய பாடல்களின் தொகுப்புக்கு நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் என்று பெயர். முதல் ஆழ்வார்கள் பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் இப் பன்னிருவருள்ளும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயா...

காலந்தோறும் சங்க இலக்கியம்

Image

கணினி மொழிகளும் நிரல் உருவாக்கமும்

Image

பாண்டியர் வரலாறு

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களையே சேரும். முச்சங்கங்கள் வாயிலாக தமிழ் வளர்த்ததை எட்டாம் நூற்றாண்டு நூலான இறையனார் களவியல் உரை கூறுகின்றது.பழங்காலத்தில் பாண்டியன் தலைநகரமான தென் மதுரையில் தலைச்சங்கம் கூடியது. பின்னர் நிகழ்ந்த கடற்கோளால், தென்மதுரை உட்பட பெரும் பகுதி கடலில் மூழ்கியது. அதற்குப்பின் கபாடபுரத்தை தலைநகரமாகக் கொண்டு பாண்டிய அரசு நடைபெற்றது. இரண்டாம்கோளில் கபாடபுரமும் அழிந்தது. அதன் பிறகு மதுரை மூதூரில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்றது. பாண்டிய மன்னன் தலைமையில் புலவர்கள் கூடி தமிழ் ஆய்வு நடத்திய சிறப்பால் இந் நகரே கூடல் நகர் என்று பெயர் பெற்றது. கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தமிழர் பெருமையின் அடையாளமாக தொல்காப்பியம் ஏற்றப்பட்டது. பாண்டியர்கள் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். துறைமுக நகரமாக கொற்கை இருந்தது. இவர்களது சின்னம் மீன். இவர்களது அடையாள பூவாக வேம்பு இருந்தது. சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் தலை சிறந்தவன் நெடுஞ்செழியன். முதல் தமிழ் தங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் 89 பேர். இடை சங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் 59 பேர். க...

சோழர் வரலாறு

சோழர்கள் வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட பரந்துபட்ட தமிழகத்தை, குட புலம், குண புலம், தென் புலம், என மூன்றாகப் பிரித்து, சேர, சோழ, பாண்டிய அரச மரபினர் மிகத்தொன்மைக் காலத்திலிருந்து அரசாண்டனர். இராமாயணம், மகாபாரதம் போன்ற பெருங்காப்பியங்கள் எழுந்த காலத்திலும், தமிழகத்தில் மூவேந்தரும் ஆண்டனர் என்பதை அறிய முடிகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மகதநாட்டை ஆட்சி செய்த அசோக சக்ரவர்த்தியின் கல்வெட்டுகளில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன. கி.பி. முதல் நூற்றாண்டில் தமிழ்நாடு வந்த யவன ஆசிரியன் பெரிப்பூளூஸ் சோழநாடு பற்றிய செய்திகளைக் குறித்துள்ளான். கிரேக்க, உரோமானியப் பேரரசுகள் உயர்நிலையில் இருந்த காலத்தில், சோழர்களுடன் அவர்களுக்கு வணிகத்தொடர்பு இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழகத்து அரச மரபினர்களில் மிகத் தொன்மையான குடியினர் சோழர் என்பதில் ஐயமில்லை. 3.1.1 முற்கால, பிற்காலச் சோழர்கள் கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வரைத் திகழ்ந்த கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த சில சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் சங்கத்தமிழ் நூல்களில் கிடைக்கி...

சேர மன்னர்களின் வரலாறு

சேர மன்னர்கள் செந்தமிழ் வேந்தர் மூவருள் (சேரர், சோழர், பாண்டியர்) சேரர் சிறந்தவராவர் என்ற கொள்கை, பழங்கால மக்களிடையேயும், அக்காலப் புலவர்களிடையேயும் நிலவியிருந்தது. இவர்களுக்கு வானவர் என்ற பெயரும் உண்டு. சேர நாட்டையாண்ட சேர மன்னர்கள் இரு கிளையினராகக் காணப்படுகின்றனர். ஒருவர் உதியன் சேரலாதன் வழி வந்தவர்கள், மற்றொருவர், இரும்பொறை என்ற பெயரால் அழைக்கப்படுவோர். இவர்களுள் முன்னவர் வஞ்சியைத் தலைநகராகக் கொண்ட உள்நாட்டுப் பகுதியினையும், பின்னவர் தொண்டியைத் தலைநகராகக் கொண்ட கடற்கரைப் பகுதியையும் ஆண்டவராவர். சேர மன்னர்கள் விற்கொடியைக் கொண்டிருந்தனர். 1 உதியன் சேரலாதன் சங்க காலச் சேர மன்னர்களுள், வரலாறு விளங்க வாழ்ந்த முதல் சேர மன்னன், உதியன் சேரலாதன். இவன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன், உதியன் சேரலாதன், உதியஞ்சேரல் என்றெல்லாம் அழைக்கப் பெறுகிறான். வெளியன் வேண்மான் என்னும் வேளிர் குலத் தலைவன் மகள் நல்லினி இவனுடைய மனைவி ஆவாள். இவன் மைந்தர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்னும் இருவரும் ஆவர். உதியன் சேரலாதன் ஆற்றிய அரிய செயல்கள் இரண்டு ஆகும். ஒன்று தன் நாட்டு எல்லையை ...