ஒளவையாரின் தனிப்பாடல்
ஒளவையாரின் தனிப்பாடல் வான் குருவியின் கூடு ஔவையார் கம்பரைப் பழித்துப் பாடல் பாடினார். அதைக் கேட்ட சோழ மன்னன் வருத்தமடைந்து, “கம்பனைப் போல பெரிய காவியம் செய்து சிறப்புற்றவர் வேறு யார் இருக்கின்றனர்” என்று கேட்டார். அதற்கு ஔவையார், “சோழனே! தூக்கணாங்குருவியின் கூடு குளவிகள் கட்டுகின்ற அரக்குக்கூடு, கரையானின் புற்று, தேனீக்களின் கூடு, சிலந்தியின் வலை இவற்றைப்போல எவராவது செய்ய முடியுமா? யாராலும் செய்ய முடியாது. அதனால் அவர்களை மட்டும் தொழில்நுட்பத்தில் தலைசிறந்தவர்கள் என்று பாராட்டலாமா? அஃதன்றி வேறு எதுவும் அந்தச் சிற்றினங்களுக்குத் தெரியாது. அது போலவேதான் கவிதையும். ஒவ்வொரு புலவர்க்கும் ஒவ்வொன்று எளிதாக இருக்கும். அந்தந்த வல்லமையினை அறிந்துதான் பாராட்டுதல் வேண்டும். அதுதான் சிறப்பு” என்று கூறினார்.